"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 October 2014

வானம் ஏன் நீல நிறத்தில் உள்ளது?

பல்வேறு வண்ணங்களில் உள்ள பொருட்களை நாம் பார்ப்பதென்பது அவற்றின் மீது விழும் ஒளி தெரிப்படைந்து நமது கண்களில் வீழ்வதால்தான். ஒரு பொருளில் ஒளி படவில்லை யென்றால் அதன் நிறமும் வெளிக்காட்டாது. எனவேதான் வெளிச்சமில்லாதபோது எந்த நிறமும் எமக்குப் புலப்படாத கருமையாகக் காட்சியளிக்கின்றன. ஒளி எமது கண்களை வந்தடையா வண்ணம் நாம் கண்களை மூடிக்கொண்டால் அங்கு நிறம் இல்லையென்று ஆகிவிடும். இதனைத்தான் பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும் என்று கேட்கிறார் கவிஞர் ஆதி சங்கரர்.

தரையிலிருந்து நாம் வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகவும் விண்வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் பூமி நீல நிறமாகவும் காட்சியளிக்கும். இதற்குக் காரணம் அல்குர்ஆன் வானம் என்று குறிப்பிடும் வளிமண்டலம்தான். சூரிய ஒளி பல வண்ணங்களை உள்ளடக்கியது. சூரிய ஒளி படும் ஒரு பொருளில் எந்த நிறத்தின் ஆற்றலுக்கான அதிர்வு (கசநஙரநnஉல) கூடுதலாக இருக்குமோ அந்நிறத்தினை குறித்த பொருள் சூரியனிலிருந்து பெற்றுப் பிரதிபலிக்கும். உதாரணமாக நாம் ஒரு பச்சைநிற ஆடையைப் பார்க்கின்றோம். சூரிய ஒளி அதில் பட்டுத் தெரித்து பச்சையாக எமது கண்களை அடைவதால்தான் நாம் அதனைப் பச்சைநிற ஆடை என உணர்கின்றோம்.

இரவு நேரங்களில் அவ் ஆடையின் நிறம் பச்சையாக இருந்தாலும் ஒளி இல்லாததால் கருமை நிறத்தில் தோன்றுகின்றது. இதேபோன்றுதான் வானமும் நீல நிறத்தில் காட்சிளிக்கின்றது. வளிமண்டலத்தில் பலமாகச் சிதறடிக்கப்படும் நீல நிறம்தான் ஏனைய நிறங்களை விட பெருமளவில் நமது கண்களில் வீழ்கின்றது. எனவேதான் வானம் நீல நிறமாகக் காட்சி தருகின்றது. சூரியனிளிருந்து வரும் ஒளி காற்று மண்டலத்திலுள்ள துணிக்கைகள், அணு மூலக் கூறுகள், நீர்த் தாரைகள், பனித் துளிகள் என்பவற்றால் முறிக்கப்படுகின்றன. எனவே ஒளி தொடர்ந்தும் சிதறடிக்கப்படுகின்றது. இதன்போது அதிக அதிர்வாற்றலைக்கொண்ட நீல நிறம் கூடுதலாக சிதறிச் செல்கின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...