"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 May 2016

சிட்டெனப் பறக்கும் சிட்டுக் குருவி

அண்மையில் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்போது இரண்டு சிட்டுக் குருவிகள் உள்ளே வருவதும், வெளியே செல்வதும் அங்கும் இங்கும் பறப்பதுமாக இருந்தன. அவரிடம் கேட்ட போது நீண்ட நாட்களாக இவை இங்கு இருப்பதாகவும் அங்கே சுவரில் பொறுத்தப்பட்டிருந்த மின் விளக்கில் அவை கூடுகட்டியிருப்பதாகவும் கூறினார். முன்பெல்லாம் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கும் சிட்டுக் குருவிகளை இப்போது அரிதாகவே காண முடிகிறது. சிட்டுக் குருவிகளின் தலைமறைவுக்குப் பின்னால் ஆச்சரியமான பல விடயங்கள் இருக்கின்றன.  எனவே அவை பற்றியும் சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை பற்றியும் இத்தொடரில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். இதோ

அறிமுகம்
பறவை உலகில் காகத்திற்கு அடுத்ததாக மனிதனோடு மிகவும் நெருக்கமான பறவை சிட்டுக் குருவிதான். இவை மனிதர்களை அண்டி வாழ்பவை. ஆங்கிளத்தில் SPARROW என்றும் தமிழில் சிட்டுக் குருவி, ஊர்க் குருவி, அடைக்கலக் குருவி, மனையுறை குருவி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. தொன்மைக்காலம் முதல் இவை எம்மைச் சார்ந்து வாழ்வதால்தான் இப்படியான பெயர்கள் இவற்றுக்கு வைக்கப்பட்டுள்ளன.

கார்லை லினேயல்என்ற அறிஞர் தான் முதல் முதலில் சிட்டுக் குருவியை அடையாளப்படுத்தி, வகைப்படுத்தினார். கேரள மாணிலத்தை சேர்ந்த தான்யாஎன்ற விலங்கு நல பெண் ஆய்வாளர் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறையைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை சிட்டுக் குருவிகள் தொடர்பில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டுமன்றி வருடந்தோரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உலக சிட்டுக் குருவிகள் தினமாகப் பிரகடனம் செய்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கவிதை அடிகளிலும் பாடல் வரிகளிலும் கூட சிட்டுக்குருவிகள் இடம்பிடித்துள்ளன. அந்த அளவு இப்பறவையினத்திற்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை எம்மை நெருங்கி வாழ்ந்தாலும் அவற்றை எம்மோடு பழக்கப்படுத்திக்கொள்ளவும் முடியாது, செல்லப் பறவைகளாக வளர்க்கவும் முடியாது.

உடலமைப்பு
சிட்டுக் குருவிகள் உருவத்தில் மிகவும் சிறியவை. சுமார் 16 செ.மீ. நீளம்தான் இருக்கும். மேலும் 27 முதல் 39 கிராம் நிறை கொண்டவை. ஆண் குருவியின் தலை, முதுகு, வால், மேல் பகுதி சிறகுகள், பிடரி போன்றவை பழுப்புசாம்பல் நிறங்களிலும் மேல் முதுகும், இறக்கைகளும் பழுப்பு, கருப்பு நிறங்களுடனும் காணப்படும். பெண் பறவையின் உடலின் மேல் பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்பு, சாம்பல் கோடுகளும் காணப்படும்.

கூம்பு வடிவில் உள்ள சிறிய அலகினால் தமது உணவைக் கொத்தித் தின்கின்றன. இரண்டு சிறிய கால்களும், அவற்றில் உள்ள விரல்களும் நகங்களும் எத்தி, துள்ளித் திரியவும் இரைகளையும் கிளைகளையும் இருகப் பற்றிப் பிடித்துக்கொள்ளவும் உதவுகின்றன. சிட்டுக் குருவிகளின் விஷேட அம்சமே சட்டென்று மிக வேகமாகப் பறக்கும் ஆற்றல்தான். கண் சிமிட்டும் வேகத்தில் தமது இறக்கைகளைப் பயன்படுத்தி பறந்துவிடுகின்றன. ஒவ்வொரு திசையிலும் சிட் சிட்டென்று திரும்பிப் பறப்பதற்கு அவற்றின் வால் பகுதி உதவுகின்றது. இப்படியான உடலமைப்பைப் பெற்றுள்ள பறவையினம்தான் சிட்டுக் குருவி.

வாழிடமும் வசிப்பிடமும்
சிட்டுக்குருவிகள் பொதுவாக எல்லா உலக நாடுகளிலும் வாழும் தகவமைப்பைக் கொண்ட பறவையினமாகும். அதிலும் குறிப்பாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளிலும் இவை வாழ்கின்றன. எமது இலங்கை நாட்டிலும் இவைற்றைத் தாராளமாகக் கண்டுகொள்ளலாம். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் குருவிகள் அவ்வப் பகுதிகளின் குளிர், பனி, வெப்பம் போன்ற தட்ப வெப்ப சூழலுக்கு இயைந்து வாழும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.

இவை மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தமது வசிப்பிடமாகக் கொள்கின்றன. நகர்ப் புற வீடுகளிலும், கிராமப் புறங்களிலும் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை. மரங்கள், பற்றைகள், எமது வீட்டுக் கூரைகள், சுவர் இடுக்குகள், மற்றும் இவற்றுக்கென்று வீட்டுச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் மண் முட்டிகள் போன்ற இடங்களில் கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. வைக்கோல், இலை, சிறு மரக் குச்சிகள், வாழை, தென்னை நார்கள் என்பவற்றைக்கொண்டு தமது கூடுகளைக் கிண்ண வடிவில் கட்டுகின்றன.

இவற்றின் அப்பாவித்தனமான குறும்புத்தனமான தோற்றத்தால் இவற்றின் கூடுகளை யாரும் கலைக்க விரும்புவதுமில்லை. அத்தோடு கிராமப் புறங்களில், இவற்றின் கூடுகளைக் கலைத்தால் அந்த வீட்டில் சண்டை சச்சரவுகள் உருவாகும் என்ற மூட நம்பிக்கை இருப்பதாலும் யாரும் இவற்றைத் தொந்தரவு செய்வதுமில்லை. அவற்றுக்கு உணவுகளை வைத்து இரக்கம் காட்டவே யாரும் முயற்சிப்பர். விரட்டினாலும் இலகுவில் செல்லாது. மீண்டும் வெகு சகஜமாக வீட்டுக்குள் நுழைந்துவிடும். அப்படிப்பட்ட கிள்ளாடிகள்தான் இவைகள். மனிதர்கள் வாழும் பகுதிகளில் கூடுகட்டுவதால் இவற்றுக்கு பிற எதிரிகளிடமிருந்து ஆபத்துக்கள் குறைவு என்பதால்தான் இவை மனிதர்கள் வாழும் பகுதிகளில் கூடுகட்டி, சஞ்சரித்து வாழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு முறை
சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள். தானியங்களையும், சிறு காய்கள், பழங்களையும் விதைகளையும் புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். நெற் கதிர்களும் பஜ்ரி விதைகளும்தான் இவற்றின் மிக விருப்பமான உணவு. இவையல்லாமல் சோளம், பயறு வகைகள், கோதுமை, அரிசி, பருப்பு போன்றவற்றையும் விரும்பி உண்ணும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும், கண்குன், பொன்னாங்கானி போன்ற கீரைகளையும் உண்ணும்.

இவை இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இணையாக இரை தேடித் திரிவதை காணலாம். மற்ற காலங்களில் ஆண், பெண் தனித்தனியே இரை தேடித் திரியும் வழக்கம் உடையது. கூட்டாக இரை தேடிச் செல்லும் இவை நீர்தேக்கங்களைக் கண்டால் உடனே குதூகலமாக நீராட இறங்கிவிடும். நீர் பருகுவது மட்டுமன்றி குளித்து நீராடிவிட்டுத்தான் செல்லும். வயலோரங்களில் அதிகமாக இந்தக் காட்சிகளைக் கண்டு மகிழலாம்.

இனப்பெருக்கம்
சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். பருவமடைந்தது முதல் ஆண்டுதோறும் இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையதவைதான் சிட்டுக்குருவிகள். தனித் தனியாக இருக்கும் ஆண், பெண் சிட்டுக் குருவிகள் இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஒன்று சேர்கின்றன. இரண்டும் சேர்ந்து பாதுகாப்பான ஓர் இடத்தில் தமக்கான கூட்டைக் கட்டுகின்றன. பின்னர் பெண் குருவி முட்டையிடும். ஒரு தடவையில் 3 முதல் 5 வரையான முட்டைகளை இடும். முட்டைகள் சிறிதாகவும் இள நீலம், வெண்மை நிறங்களுடன் இருக்கும். முட்டையை ஆண், பெண் இரு குருவிகளும் மாறி, மாறி அடைகாக்கும்.

இவ்வாறு 15 முதல் 20 நாட்களுக்குள் முட்டை வெடித்து குஞ்சுப் பறவைகள் வெளியே வரும். அவற்றுக்கும் ஆண், பெண் இரு பறவைகளும் சேர்ந்தே உணவூட்டும். குஞ்சுகள் விரைவாக வளர வேண்டும் என்பதால் ஆரம்பத்தில் அவற்றுக்கு சிறு புழு, பூச்சி, வண்டுகளையே உணவாக ஊட்டுகின்றன.  குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து சென்று விடுகின்றன. ஆண், பெண் பறவைகளும் அத்தோடு பிரிந்து தனித்தனியே சென்றுவிடுகின்றன.

அழிவை நோக்கி சிட்டுக் குருவிகள்.
கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திரும்பிய திசை எங்கும் கீச், கீச் என்று சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகள் இன்றளவில் வெகுவாகக் குறைந்துள்ளன. எமது வீடுகளிலும், வீட்டிற்கு முன் நின்ற மரங்களிலும் கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்கள் இன்று மாயமாய் மறைந்துள்ளன. இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் தம்பி தங்கைகளே! உங்களிடம் கேட்கின்றேன்… “உங்களில் எத்தனைபேர் சிட்டுக்குருவியை நேரில் கண்டிருக்கிறீர்கள்?” எனக்குத் தெரிந்த அக்கம் பக்கத்திலுள்ள சிறுவர்களிடம் சிட்டுக் குருவியைக் கண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டுப் பார்த்தேன் இல்லைஎன்பதுதான் அவர்களது பதில்.

ஆம்! உலகில் அழிந்து செல்லும் உயிரினங்களின் வரிசையில் சிட்டுக் குருவியையும் உள்ளடக்கியிருக்கின்றார்கள். இந்தியாவின் பறவையியல் அறிஞரான சலீம் அலி அவர்கள்தான் முதன் முறையாக சிட்டுக் குருவிகளைப் பற்றி ஆய்வு செய்து அதனுடைய அழிவைச் சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து வி.விஜயன் என்ற பறவையியலாளர் தொடர்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு சிட்டுக் குருவிகளைக் காக்க தொடர் முயற்சிகள் எடுத்து வருகிறார். இதன் பிறகுதான் உலகம் இதில் கவனம் செழுத்த ஆரம்பித்தது.

அழிவிற்கு என்ன காரணம்?
சிட்டுக் குருவிகளின் அழிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது வேளாண்மை நிலங்களில் விவசாயிகள் கணக்கின்றிக் கொட்டும் செயற்கை இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளே.  இவ் இரசாயனக் கலவைகளை தானியங்கள் மீது தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறந்து போகின்றன. 

அல்லது அவ்விரசாயனங்களால் சிட்டுக்குருவிகள் இனப் பெருக்கம் செய்ய முடியாமல் மலட்டுத் தன்மையை அடைகின்றன. அதையும் மீறி முட்டையிட்டாலும் அந்த முட்டை போசனை அற்றதாகவும் முட்டையின்  ஓடு கடினத்தன்மை இன்றி இருப்பதால் எளிதில் உடைந்து விடுவதாலும் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு இனம் அழிவுக்குள்ளாகி வருகிறது என்பதே சிட்டுக் குருவி தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கருத்து.
சிட்டுக் குருவிகளின் இரண்டாவது முக்கிய எதிரி தொலைபேசி கோபுரங்கள். நகர்ப் புறங்கள், கிராமப் புறங்கள் என்று எல்லாத் திக்கிலும் வானைத் தொடுமளவு செல்போன் கோபுரங்களை நிருத்தி வைத்திருக்கின்றனர். இதிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சினால் சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட பல பறவைகள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து செல்கின்றது. இந்த இரண்டு காரணிகளையுமே பிரதானமானவையாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவற்றைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள்.
இதே நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் குழந்தைகளுக்கு சிட்டுக் குருவிகளை இணையத்தில் தேடித்தான் காட்ட வேண்டிவரும் எனவே, சிட்டுக்குருவி இனங்களை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பறவை ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும், கோரிக்கைவைத்துள்ளனர். இதற்காக சில நிருவனங்களும் முன்வந்துள்ளன. இதற்காகத்தான் உலகம் முழுவதும் மார்ச் 20ம் தேதியை சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

இன்னும் பல நாடுகள் அஞ்சல் முத்திரைகளிலும் சிட்டுக் குருவிகளின் படங்களை வெளியிட்டுள்ளன. மேலும் Nature Forever Society என்கின்ற நிறுவனம் சிட்டுக் குருவிகளைக் காப்பாற்ற, அவைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு என்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குருவிக் கூடுகளைத் தயாரித்து இலவசமாக வீடுகளின் முன் அவற்றைத் தொங்கவிட்டு வருகின்றனர். BCIL-ZED Foundation மற்றும் Zoo Authority of Karnataka  நிறுவனமும் சேர்ந்து GUBBIGOODU (குருவிக்கூடு) என்ற ஒரு முன்முயற்சியை தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் குருவிக்கூடுகளை அமைக்க ஊக்கம் அளிக்கின்றன.

நீங்களும் முயற்சிக்கலாம்.

அழிந்து போகும் ஒரு இனத்தை வாழவைக்க உங்களாலும் முடியும். பாதுகாப்பான முறையில் ஒரு சிறிய மண் முட்டியையோ அல்லது கார்போட் பெட்டியையோ சிறிதாகத் துலையிட்டு அதனுள் வைக்கோலை வைத்து உங்கள் வீட்டு வரவேற்பறையிலோ, வீட்டு முன் சுவற்றிலோ அல்லது மரத்திலோ தொங்கவிடுங்கள். 
பின்னர் அதனருகில் நெல், பறுப்பு, பயறு, சோளம் ஏதாவதையும் சற்று தண்ணீரையும் வையுங்கள். ஒரு சில வாரங்களில் உங்கள் வீட்டுக்கும் சிட்டுக் குருவிகள் வந்து செல்லும். உங்களாளும் அவற்றை நேரில் பார்த்து இரசிக்கலாம். அல்லாஹ்வின் மற்றுமொரு அற்புதப் படைப்பில் உள்ள அதிசயங்களைப் பார்த்து உணரலாம். முயற்சித்துப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

👍👍👍jazakallahu khair sir,4 ur nice reminder 4 all of us through dz article 2 protect our nature buties.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...