எனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக
சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். பின்னர் என் எதிர்காலத்திற்காய் உயர்தரத்தையும் படிக்கச்சொன்னார்கள்.
அதனையும்
படித்தேன்.
தொடர்ந்து எனது எதிர்காலத்திற்காய்
இளமாணிக்கற்கையையும் தொடரும்படி சொன்னார்கள். அதன்பிறகு என் எதிர்காலத்திற்காய் தொழிலொன்றைத்
தேடும்படி சொன்னார்கள். தேடினேன். பின்னர் எனது எதிர்காலத்திற்காய்
திருமணம் முடிக்கச் சொன்னார்கள். முடித்தேன்.
இப்போது இவ்வரிகளை
எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு வயது 77 ஆகிறது. இன்னும் அவ்வெதிர்காலத்தை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
எதிர்காலம் என்பது காளை மாட்டின் கொம்புகளுக்கிடையே
மாட்டிக் கொண்ட சிகப்புத் துணியை ஒத்தது. எங்கு ஓடியும் அதனால் அதைப் பிடிக்க முடிவதில்லை.
நீ எதிர்காலத்தை அடைகின்ற போது அது நிகழ்காலமாகி
விடுகிறது. நிகழ்காலம் கடந்த காலமாக மாறிவிடுகிறது. பின்னர் நீ புதியதொரு எதிர்காலத்தை
எதிர்பார்த்துக் கொண்டிருப்பாய்… அது தான் யதார்த்தம்.
உண்மையான எதிர்காலம்
என்பது அல்லாஹ்வை நீ திருப்திப்படுத்துவதும் அவனது நரகத்திலிருந்த நீ மோட்சம் பெறுவதும்
அவனது சுவனத்தில் நுழைவதுமாகும்.
-ஷெய்க்
தன்தாவி-
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...