"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 May 2010

மன்சூரிய ஆட்சியில் முஸ்லிம்கள்:
ஹிஜ்ரி 1052(1642)ல் மொன்கே ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து மன்சூரிய ஆட்சி எழுச்சி பெற்றது. குப்லாய் மற்றும் மொன்கே ஆட்சியில் முஸ்லிம்கள் பெற்றிருந்த உயர் அந்தஸ்துக்களால் தமக்கு ஆபத்து விளையும் என அஞ்சிய இவ் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை அடக்கவும்,  ஒடுக்கவும் துன்புறுத்தவுமே செய்தனர். இதனால் சலிப்புற்ற முஸ்லிம்கள் மீண்டும் மொன்கே ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஹிஜ்ரி 1058(1648)ல் மொன்கே மக்களுக்கு ஆதரவளித்தனர். இதனால் முஸ்லிம்கள் மன்சூரிய ஆட்சியில் இன்னும் பல பாதக விளைவுகளைச் சந்தித்தனர். சுமார் 5000 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.
மங்கோலியர் இஸ்லாத்தை ஏற்றதும் மங்கோலியரும் துர்கிய உய்குர் மக்களுமாக கலந்து தூய முஸ்லிம் அரசாக விளங்கிய கிழக்குத் துர்கிஸ்தானை சீன மன்சூரிய அரசு பல முறைகள் ஆக்கிரமிக்க முயற்சித்தது. எனினும் கிழக்குத் துர்கிஸ்தான் மக்களின் தீராத சுதந்திரத் தாகத்தினாலும் எதிர்ப் போராட்டங்களினாலும் பயனற்றுப்போயின. எனினும் தொடர்ந்து மேற்கொண்ட இரும்புக்கற அடக்குமுறைகளால் 1759ஆம் ஆண்டு மன்சூரியப் படைகள் கிழக்குத் துர்கிஸ்தானின் பல பிரதேசங்களை கையகப்படுத்தின. அங்கே சீனக் குடியிறுப்புகளை நிறுவின. இவ்வாறு 13 வருடகாலவோட்டத்தின் பின் துர்கிய இஸ்லாமிய ஆட்சித் தலைவர்கள் ஹிஜ்ரி 1292 (1876)ல் பிரித்தானியாவின் உதவியோடு மன்சூரியர்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மன்சூரிய மன்னன் கிழக்குத் துர்கிஸ்தான்என்ற பெயரை சின்ஜியாங் (Xinjiang or Sinkiang)” என்று பெயர் மாற்றம் செய்தான். இதன் பொருள் புதிய எல்லைப்புறம்அல்லது புதிய குடியேற்றம்அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பூமிஎன்பதாகும். இதன்மூலம் கிழக்குத் துர்கிஸ்தானை சீனாவின் மாகாணங்களில் ஒன்றாக சீன மன்சூரிய அரசு மாற்றியது. இவ்வாறு செய்ததன் நோக்கம் முஸ்லிம்களது வரலாற்றுப் படிமங்களையும் அவர்களது அடையாளங்களையும் அரேபிய வரலாற்றுத் தடங்களையும் முகவரியின்றி துடைத்தழிப்பதற்கே! எனவே 1759 முதல் 1862 வரையான காலப்பகுதிகளில் மாத்திரம் 142 இற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்று அதிலே இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய அமெரிக்கா கையாளும் அதே வழிமுறையைப்போன்று அன்றைய சீன அரசும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குத் துர்கிஸ்தானில் ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. தனக்கு விசுவாசமாக நடக்கும் ஒரு முஸ்லிம் ஆட்சியாளனை அங்கு ஆளுணராக நியமித்தது. அம் முஸ்லிம் சீன மன்சூரியர்களைவிடவும் அதிகமாக முஸ்லிம்களைத் துன்புறுத்தினான். மார்க்கக் கடமைகளை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதி வழங்க மறுத்தான். அப்போது உஸ்மானிய கலீபா இரண்டாம் அப்துல் ஹமீத் பல தூதுக்குழுக்களை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவிபுரிய முனைந்த போதும் அதனை சீன அரசாங்கம் தடுத்து நிறுத்தியது.
குடியரசுச் சட்டமும் முஸ்லிம்களின் அடையாளமும்:
ஹிஜ்ரி 1329(1911)ல் சீனாவின் மன்சூரிய சர்வாதிகார ஆட்சிக்கெதிராக முஸ்லிம்களும் பிற இனத்தவர்களும் கொதித்தெழுந்து மன்சூரிய ஆட்சியைத் துடைத்தெரிந்தனர். பின்னர் ஆட்சிபீடமேறிய கலாநிதி ஸின்யாத் சின் சீனாவை குடியரசாக மாற்றினார். முஸ்லிம்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டது. அப்போது சீன இராச்சியம் முக்கிய 5 இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
1.ஹென் வழித்தோன்றலில் வந்த சீனர்கள்.
2.மன்சூரியர்கள்.
3.மங்கோலியர்கள்.
4.முஸ்லிம்கள்.
5.திபெத்தியர்கள்.
ஆரம்ப சீனத் தேசியக்கொடி இந்த ஐந்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து வர்ணங்களிலான தனித்தனிக் கோடுகளை சேர்த்திருந்தது. படத்தில் காண்பதன்படி
இந்த குடியரசு ஒவ்வொரு இனத்தையும் தனித்துவத்துடன் ஏற்றிருந்ததால் அங்கிருந்த சுதந்திர சிந்தனையுடைய இயக்கமொன்று ஒவ்வொரு தனி இன மக்களையும் சுதந்திர நாடுகளாகப் பிரிந்து சுய ஆட்சி புரியும் வாய்ப்பை வழங்குமாறு கோறிக்கை முன்வைத்தது. இதில் சொற்பமாக வாழ்ந்த ஹசய் இன சீனர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டாலும் கிழக்கு துர்கிஸ்தான் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
கிழக்குத் துர்கிஸ்தானின் சுதந்திரம்:
ஹிஜ்ரி 1352(1933)ல் சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே உக்கிரமமானதொரு சமர் மூண்டது. அதில் ஜப்பான் சீனாவின் தலைநகரான பீஜிங்கைத் தம் வசப்படுத்தியது. பல சீனர்களைக் கொன்றது. எனினும் முஸ்லிம்கள் பல சலுகைகளைப் பெற்றனர். ஜப்பானியர் தம்மீது சலுகைகள் விதிப்பதைச் சந்தர்ப்பமாகக் கண்ட கிழக்குத் துர்கிஸ்தானியர் சீனாவிலிருந்தும் பிரிந்து சுதந்திர நாடாக, இறைமையுள்ள அரசாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கானதொரு கோறிக்கையை ஜப்பானிய ஆட்சியாளரிடம் முன்வைத்தனர். அதற்கமைய ஹிஜ்ரி 1352(1933)ல் கிழக்குத் துர்கிஸ்தான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது. எனினும் ஒரு வருடத்திற்குள் சீனா ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜப்பானைத் துரத்தியடித்து ஹிஜ்ரி 1353(1934)ல் மீண்டும் கிழக்குத் துர்கிஸ்தானை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அப்போதைய கிழக்குத் துர்கிஸ்தானின் ஜனாதிபதி Xoja நியாஸ் என்பவரையும் பிரதமர் டமொல்லாவையும் இன்னும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சிவிலியர்களையும் தூக்கில் போட்டுக் கொன்றது. அதற்குள் 1939ம் ஆண்டு தொடக்கம் 1945ம் ஆண்டுவரை இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதன் விளைவாக ஜப்பான் சீனாவிடம் தோல்விகண்டு பின்வாங்கியது. அதற்கிடையில் மாஓஸேதுங் கம்யுனிச சிந்தனையில் புரட்சியை சீனாவில் ஏற்படுத்தினர். அதன் விளைவாக 1949ம் ஆண்டில் சீனா அரசாங்கம் கம்யுனிஸக் கொள்கைக்கு மாறியது. எனவே கம்யுனிஸ ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்த சீனா 1956ஆம் ஆண்டு கிழக்குத் துர்கிஸ்தானை முழுமையாக ஆக்கிரமித்து மீண்டும் அதனை சிங்சியாங் மாகாணமாக இணைத்துக் கொண்டது.  
இன்று கிழக்குத் துர்கிஸ்தானிய மக்களின் நிலை:
சீனாவின் இரும்புக்கற சர்வாதிகாரத்தின் கீழ் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அடக்கு முறைகற்கும்,  கொடூர சித்திரவதைகற்கும்,  கலாசார அழிவுக்கும் உரிமை மறுப்புகற்கும் இரையாகி வந்த சின்ஜியாங் அதாவது கிழக்குத் துர்கிஸ்தானின் உய்குர் மக்கள் இன்றும் அதன் தொடர்ச்சியை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
கிழக்குத் துர்கிஸ்தானில் 95 வீதமான அளவு பெரும்பான்மையாக முஸ்லிம்களே வாழ்ந்தனர். என்னும் அப்பெரும்பான்மையை விகிதாசார அடிப்படையில் குறைப்பதற்காக சீன அரசாங்கம் வரையரையற்ற குடியேற்றங்களைச் செய்கின்றது. 1949ம் ஆண்டளவில் ஆறு இலட்சமாக இருந்த சிறுபான்மை சீன மக்கள் குறிப்பிட்ட சில வருடங்களில் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர். சொந்த மண்ணிலே அந்த உய்குர் முஸ்லிம்கள் கைதிகளாகவும் அகதிகளாகவும் வாழ்க்கைப்படுகின்றனர். இஸ்லாமிய மார்க்கக் கிரியைகளைக்கூட சுதந்திரமாக நிறைவேற்றத் தடைசெய்யப்பட்டுள்ளனர்.
உலக உய்குர் காங்கிரஸின் (World  Uygur  Congress) தலைவரான ரஸியா கதீர் கூறுகையில் மூன்று அல்லது நான்கு முஸ்லிம்கள் தெருவில் ஒன்றாகக் கூட முடியாது. உடனே சிவில் உடையில் உள்ள காவல் துறையினர் அங்கு வந்து விடுவர். ஓன்று அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறுவர். அல்லது வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வர். உய்குர் பள்ளிகளிலும் சிவில் ஆடைகளில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறாக ஏதும் நடைபெறுகிறதா என்று கண்கானிப்பர்.என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
வரலாற்று நெடுகிலும் இந்த உய்குர் மக்கள் தமது விடுதலைக்காக இலட்சோபலட்ச உயிர்களைப் பரிகொடுத்திருக்கின்றார்கள். நாள்தோரும் அவர்கள் படும் அல்லல்களை ஊடகங்கள் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்காது மூடி மறைத்து வருகின்றன. பல ஊடகங்கள் சீன அரசினால் கடும் கண்கானிப்பின் கீழ் தனிக்கை செய்யப்பட்டதன் பின்பே வெளியிடப்படுகின்றன. இம்மக்களின் அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் சில முஸ்லிம் நாடுகள் எடுத்துப் பேசியபோதிலும் அவற்றுக்கு எப்பெறுமானமும் வழங்கப்படவில்லை.
அல்ஜஸீராவின் அறிக்கையின்படி 1953ல் குடியேறிய ஐந்து இலட்சம் சீன மக்கள் 2000ஆம் ஆண்டளவில் 75 இலட்சமாக உயர்ந்துள்ளனர். தற்போதைய கணக்கின்படி கிழக்குத் துர்கியில் உள்ள 180 இலட்சம் மக்கள் தொகையில் 42 வீதமானோர் சீன மக்களாவர்.
திடீர் திடீரென விசாரணையென்ற பெயரில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அழைத்துச் செல்லப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சொல்லொனா சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர். இவ்வாறாக உய்குர் முஸ்லிம் மக்கள் தமது சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக சர்வாதிகார சீன அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
கிழக்குத் துர்கிஸ்தானில் காணப்படும் வளங்கள்:
சீனா கிழக்குத் துர்கிஸ்தானைத் தன்வசப்படுத்தி காலணியம் செய்வதற்கு கிழக்குத் துர்கிஸ்தானின் பூகோள அமைப்பும் அங்கு செரிந்து காணப்படும் வளங்களும் ஒரு காரணமாகும். இங்குதான் வோல்டன் டெங்எனப்படும் பிரபல்யமிக்க பூந்தோட்டமும் Tkelmkat எனும் பாலை நிலமும் Tanri, Bogaa ஆகிய உலக சிறப்புப் பெற்ற ஏரிகளும் அமைந்துள்ளன. கிழக்குத் துர்கிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் 41.2 வீதமானவை விளைநிலங்களையும் காடுகளையும் கொண்டுள்ளன. சீனாவின் மொத்த நிலக்கறி உற்பத்தியில் 38 வீதமானவை இங்குதான் நடைபெறுகின்றன. இங்கு 8 பில்லியன் தொன்னுக்கும் அதிகமான எண்ணை வளம் காணப்படுகிறது. வருடாந்தம் 5 மில்லியன் தொன்னே உற்பத்தி செய்யப்படுகிறது. அத்தோடு சுமார் 122 வகையான தாதுப்பொருட்களையும் இப்பூமி கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டில் மாத்திரம் 247கோடி தொன் எண்ணை,  எரிவாயு என்பன உற்பத்தி செய்யப்பட்டன.
இவ்வாறு பல்வேறு புவியியல்ää அரசியல்,  பொருளாதார காரணிகளால் கிழக்குத் துர்கிஸ்தானிய பூர்வ குடிகளான உய்குர் மக்கள் சீன அரசால் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தனர், இன்னும் வருகின்றனர். ஈராக்,  ஆப்கானிஸ்தான்,  பலஸ்தீன்,  காஷ்மீர் மற்றும் இலங்கையில் தமிழ் மக்கள் படும் அவலங்களைப் பற்றி பேசுகிறோம். எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நாடுகளின் வரிசையில் வரும் மற்றுமொரு நாடுதான் சின்ஜியாங் எனும் கிழக்குத் துர்கிஸ்தான். எம்மில் அநேகர் இதுபற்றி அறிவதில்லை. ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் இருட்டடிப்பு செய்கின்றன.
கிழக்குத் துர்கிஸ்தானிய உய்குர் மக்கள் தொடர்ந்தும் தம் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் போராடி வருகின்றனர். அம்மக்களது துயர் துடைக்க எம்மாலான பங்களிப்பைக் குறைந்தது பிரார்த்தனைகள் மூலமாவது வழங்குவோம். உலக நாயகன் என்ற மகுடத்தை சுடிக்கொள்ள அப்பாவி மக்களை ஏணிப்படிகளாக பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. சீனாவும் அப்பட்டியலில் சேர்ந்ததுதான்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

Referense:
www.islamstory.com
 
உங்கள் கருத்து:

2 comments:

Anonymous said...

If you have time, just read this http://www.soleafterdeath.blogspot.com

Unknown said...

jazka...... very useful article.may Allah help them

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...