ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான இந்தப் பூவுலகில் மனிதனால் புரியப்படும் பல்வேறு காரணிகளால் அதன் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி வருகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியில் முன்னேரிச்செல்லும் மனிதன் அதிகமாகவே இயற்கைகையச் சீண்டிவிட்டுள்ளான். இதனால் புவி வெப்பமடைதல் (Global worming), ஓசொன் படலத்தில் துவாரம், வளி, நீர் என்பன மாசடைதல் என பல்வேறு சவால்களை இன்று இவ்வுலகம் எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலமாக பூவுலகின் உயிர்ப் பல்வகைமை அழிவைநேக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இப்புவியிவன் இருப்புக்கும் ஆரோக்கியமான மனித வாழ்வுக்கும் உயிர்பல்வகைமை என்பது மிக மிக அத்தியவசியமாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில்தான் வருடாந்தம் மே மாதம் 22 ஆம் திகதி சர்வதேச உயிர்ப்பல்வகைமை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இதன் முக்கியதுவம் உணரப்பட்மமையால் இந்த 2010 ஆம் ஆண்டையே உயிர்ப்பல்வகைமைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
உயிர்ப் பல்வகைமை (Bio diversity) என்பது பஞ்ச பூதங்கள் எனும் நிலம்;;;இ நீர், காற்று, ஆகயம் என்பன மூலம் நாம் எமது அன்றாட நடவடிக்கைகளுக்காகப் உயிர் வாழ்க்கைக்காகப் பெற்றுக்கொள்கின்ற சேவைகளையேயாரும். சுருக்கமாகச் சொல்வதாயின் நாம் உட்கொள்ளும் உணவு முதல் உடை, இருப்பிடம், மருத்துவம், பொழுது போக்கு, கலாசாரம், கலை என அனைத்திலும் இந்த உயிர்ப்பல்வகைமை செல்வாக்குச் செலுத்துகின்றது.
உயிர் வாழ்க்கைக்கு உணவு அவசியம். உணவுற்பத்திக்கு வளமான மண், மாசற்ற நீர் என்பன அவசியம். நீரின்றி வாழ்வில்லை எனுமளவுக்கு உயிர் வாழ்வு நீரில் தங்கியுள்ளது. இப்பிரபஞ்சமே நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளதாக அல்குர்ஆனே தெளிவுபடுத்துகின்றது. சுவாசிக்க வளி அவசியம். வளி புவிக்கோளத்தில் உள்ள வாயுக்களுக்கிடையிலான சமநிலையைப் பேணுகின்றது. மனிதன் பயன்படுத்தும் சக்தியின் அடிப்படை வடிவமாக நெருப்பு காணப்படுகிறது. இப்படி மொத்தமாகப் பார்த்தால் இந்த நிலம், நீர், வளி, தீ என்பன உயிர்ப்பல்வகைமை எமக்கு வழங்கும் சேவைகளை எடுத்தியம்புவனவாகவே கணப்படுகின்றன.
மனிதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்காது செய்யும் செயல்களால் இவ்வுயிர்ப்பல்வகைமை தரும் சேவைகளை இழந்துவருகின்றான். இதனால் மதிப்பிட முடியாத பாரிய இழப்புகளை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளோம். உயிர்ப்பல்வகைமையின் அழிவு தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழுவும் ஜேர்மனிய அரசும் மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வுகளின்படி இவ் உயிர்ப்பல்வகைமையின் இழப்பு தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும்போது உலகம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏழு சதவிகிதமான அளவு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டுகின்றது.
உயிர்ப்பல்வகைமையின் இழப்பினால் ஏற்படும் பாரிய ஆபத்தினைத் தவிர்ப்பதற்கான அடுத்த கட்ட உத்திகளைச் சிந்திக்க வேண்டியவர்களாகவும் அவற்றை நடைமுறைப் படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டியது எமது கடமை. இதனைத் தவிர்ப்பதற்கானதொரு வழிமுறையாகத்தான் அண்மையில் “கிரீன் டெக்னொலஜி (Green Technology)” என்ற ஒரு விடயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பச்சைத் தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிபெயர்ப்பதை விட சுற்றுச் சூழல் தொழில்நுட்பம் என்று அழகாக மொழியாக்கம் செய்து பயன்படுத்துவோம்.
இதுவரை காலமும் எரிவாயு, மசகு எண்ணெய் என்பவற்றையே பொருளாதாரத்தின் அச்சானியாகக்கொண்டு இயங்கிய உலகம் இவ்வாண்டு முதல் (2010) இந்த சுற்றுச் சூழல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டே செயற்படத்திட்டமிட்டுள்ளது.
உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு உரமாயிருந்த மனிதனின் செயற்பாடுகளுக்கு மாற்றீடாகவே இயற்கையுடன் இயைந்துபோகும்படியான இப்புதிய தொழில்நுட்பம் அமையப்போகின்றது. நாம் உபயோகித்துவிட்டு குப்பையில் எரிந்துவிடும் யோகட் கப் முதல் விண்வெளி நோக்கி ஏவும் ரோக்கெட் வரை அனைத்திலும் இந்;த சுற்றுச் சூழல் தொழில்நுட்பத்தை மையமாகக்கொண்ட மாற்றங்கள் நிகழப்போகின்றன.
வாசகர்களே !!!
உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பிற்கு இது ஒரு வழி முறை மாத்திரமே. இனி நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துச் செயற்பட வேண்டியது எமது பொறுப்பே!!!
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...