"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 March 2011

பதுங்கித் தாக்கும் பயங்கர முதலை (Crocadile)

ஆலிப் அலி  (இஸ்லாஹியா வளாகம்)
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின்படி உலகில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினங்களின் வரிசையில் முதலையும் ஒன்றகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முதலை மிகவும் பயங்கரமான ஆபத்தானதொரு விலங்கு. இதனைக் கருவாகவைத்து நிறைய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இன்று ஸர்கஸ் காட்சியரங்குகளில் முதலைகளுடன் சாகசம் புரிந்து, பார்வையாளர்களை மயிர்கூச்சரியவைப்பது வாடிக்கையாகிவிட்டுள்ளது.
பல்லியனத்திலேயே (Lizerd) மிகவும் பெரிய உயிரினம் இந்த முதலைதான். முதலை, கபரகொயா (சலமந்தரா), உடும்பு, ஓனான், பல்லி என யாவும் ஒரே குடும்பமாகவே கருதப்படுகின்றன. இவை சுமார் ஐந்து மீட்டர்கள் வரை நீண்டு வளரக்கூடியன. பொதுவாக முதலைகள் அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் இடங்களிலும் அதிகமாக வாழ்கின்றன. இதுவரை 12 வகையான முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முதலைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பைக்கொண்டிருப்பதனால் அவை ஈரூடகவாழி எனப்படுகின்றன. சிறிய குட்டையான நான்கு கால்களைக்கொண்டு இவை மெதுவாகவே தரையில் ஊhந்து செல்லும். ஆனால் நீரில் மிக வேகமாக நீந்த முடியும். இதற்கேற்ற விதத்தில்தான் அல்லாஹ் இவற்றின் விரல்களுக்கு இடையே வாத்துகளின் கால்களினதைப் போன்ற தோல்மடிப்புக்களை அமைத்துக்கொடுத்துள்ளான். அவ்வாறே நீந்துவதற்கு உதவியாகவும் எதிரிகளை அல்லது இறைகளைத் தாக்கிப்பிடிப்பதற்கு இலகுவாகவும் நீண்டதொரு வாலையும் அமைத்துக்கொடுத்துள்ளான்.
முதலைகள் காடுகளில் உள்ள குழங்களிலும் பாலடைந்த நீர் நிலைகளிலும் ஆறுகளிலும்தான் அதிகமாக வாழ்கின்றன. சேற்று நிற மங்ககளான நீர்நிலைகளில் தமது கண்களையும் மூக்கின் மூச்சுத் துவாரத்தையும் மாத்திரம் நீர்ப்பரப்புக்கு மேலால் வைத்து சுவாசித்துக்கொண்டிருக்கும். இவ்வாறு அவை அமைதியக இருப்பதை இலகுவில் எம்மாலோ பிற விலங்குகளாலோ இனங்கண்டுகொள்ள முடியாது. இதனை அறியாமல் அருகில் வரும் விலங்குகளை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து படித்து இறையாக்கிக்கொள்ளும்.
இவற்றிற்கு அல்லாஹ் வழங்கியுள்ள மற்றுமோர் அற்புத அம்ஷம்தான் நீருக்கு அடியில் வெகுநேரத்திற்கு மூச்சுவிடாமல் இருக்க முடியும். நீரினுள் மூழ்கியதும் மூக்கின் இரு ஓரங்களிலும் அமைந்திருக்கும் சிறிய இரு அடைப்பான்கள் (Flaps) மூக்கினுள் நீர் உட்புகாதவாறு இருக அடைத்துக்கொள்ளும். நீரின் ஆழத்தில் வைத்து இறையைப் பற்றினாலும் நீர் உட்புகாதவாறு இறையை மட்டும் விழுங்கக்கூடிய அமைப்பையும் அல்லாஹ்வே இவற்றுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளான்.
முதலைகளின் தோழ், மட்டைபோன்று மிகக் கடிணமான சுரசுரப்பான தன்மைகொண்டது. ஆனால் வயிற்றுப் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். அத்தோடு கூச்ச கூபாவமும்கூடியது. ஒருவேளை முதலையிடம் யாரும் சிக்கிக்கொண்டால் அவர் முதலையின் கண்களைக் காயப்படுத்தியோ அல்லது அதன் அடிவயிற்றைப் பலமாகக் கூச்சம் காட்டினாலோ அதனிடமிருந்து தப்பிக்கொள்ள முடியும்.
முதலையின் கண்ணில் இருந்து ஒரு வகைத் திரவம் வெளியாகின்றது. உண்மையில் இது கண்ணீரல்ல. முதலையின் உடல் மிகவும் கடினமான தன்மையைக் கொண்டதென்பதால் அதன் உடலிலிருந்து வியர்வை வெளியாவது தடுக்கப்படுகின்றது. எனவே அவ் உப்புக்கலந்த திரவமே முதலைகளின் கண்கள் வழியாக வழிந்து செல்கின்றது. போலியாக யாரும் அழும்போது நாம் முதலைக் கண்ணீர் என்று சொல்வது இதனால்தான்.
முதலைகள்  மீன்கள், பறவைகள், ஆமைகள் என பலதையும் இவை உணவாகக்கொள்கின்றன. சில சமயங்களில் நீரருந்த கரையைநோக்கி வரும் மான்கள், எருதுகள், வரிக்குதிரைகளைக்கூட நீருக்கடியில் பதுங்கியிருந்து திடீரெனப் பாய்ந்து பிடித்துக்கொள்கின்றன. சிறு படகுகளையும் தாக்கி அவற்றில் பிரயாணிப்பவர்களையும் கொன்று தின்றுவிடும் அபாயகரமான உயிரினம்தான் இந்த முதலைகள். சிறிய இறைகளை உடனே விழுங்கி விட்டாலும் பெரிய இறைகளைப் பொருத்தவரை அவற்றைக் கொன்று இழுத்துச்சென்று எங்காவது ஒரு பெரிய வலையினுள் அழுக வைக்கும். அது அழுகியதன் பின்புதான் உணவாக்கிக்கொள்ளும்.
முதலையின் பற்கள் மிகவும் கூர்மையானவை. இறையைப் பற்களால் பற்றிய உடனே மிகவேகமாக சக்கரம்போன்று நிலத்தில் புரல ஆரம்பிக்கும். இதனால் இறையின் ஒரு பகுதி பிய்ந்து முதலையின் வாயினுள் சென்றுவிடும். முதலைகளிடம் உள்ள விஷேட அம்சம்தான் அவற்றுக்கு மற்ற விலங்குகளைப் போன்று நாக்கு காணப்படுவதில்லை. நாக்கின்றியே அல்லாஹ் அவ்விலங்கைப் படைத்துள்ளான். எனவே உணவை வாயில்வைத்து புரட்டிப் புரட்டி உண்ணாமல் உடனே லபக்என்று விழுங்கிவிடும்.
பெண் முதலை முட்டையிடும் பருவத்தை அடைந்ததும் கரையை அடைந்து சூரிய ஒளி படக்கூடிய மணற்பரப்பில் சற்று ஆழமான குலியைத் தோண்டுகின்றது. பின்பு அதற்குள் ஒரேதடவையில் சுமார் 40 முட்டைகளை இடுகின்றது. முட்டைகள் கோழியின் முட்டையினளவை ஒத்திருக்கும். பின்பு அக்குலியை மூடிவிட்டு அவை சென்றுவிடுகின்றன. சூரிய உஷ்னத்தில் முட்டையினுள் இருக்கும் குஞ்சுகள் படிப்படியாக வளர்கின்றன. வேறு சில முதலைகள் முட்டையிட்டுவிட்டு அவ்வலையினறுகே குஞ்சுகள் வெளிவரும்வரை காத்திருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. குஞ்சுககள் வெளிவந்ததும் அவற்றைத் தமது வாயில் சுமந்துசென்று நீர்நிலைகளில் பாதுகாப்பான ஒரு இடத்தில் சேர்க்கின்றன.
முட்டையினுள் இருக்கும் குஞ்சு முதலைகளின் மூக்கின் இருபக்கத்திலும் இரண்டு கூரான பற்கள் காணப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தியே முட்டையின் மேலோட்டை இவை உடைத்துக்கொண்டு வெளியேறுகின்றன. வெளியே வந்து இரண்டு நாட்களில் தானாகவே அப்பற்கள் வீழ்ந்துவிடும். இவ்வமைப்பு அக்குஞ்சுகள் தாமாகவே ஏற்படுத்திக்கொண்டதோ அல்லது முட்டையிடும்போதே தாய் முதலை அமைத்துக்கொடுத்ததோ அல்லது இயற்கைத் தேர்வின்படி உருவானதோ அல்ல. மாறாக சர்வமும் அறிந்த வல்லவன் அல்லாஹ் அவற்றின் தேவைக்காகவே படைத்ததுதான் அவ்வமைப்புகள் யாவும்.

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

இறைவனின் படைப்புகள் அற்புதம்!

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...