ஆலிப் அலி (இஸ்லாஹி)
வல்ல நாயன் அல்லாஹ்வின் படைப்புக்களின் தொடரில் வரும் மற்றொன்றுதான், தும்பி. ஆங்கிலத்தில் dragonfly என்றழைக்கப்படுகிறது.எமது சு10ழலில் காணப்படுகின்ற எனினும் எமது சிந்தனைக்குப் புலப்படாத ஒரு சிறிய உயிரினம்தான் இது.அல்லாஹ் சர்வ வல்லமை பொருந்தியவன் என்ற வகையில் இதிலும் ஏராளமான அற்புதங்களை எமக்குக் காண்பிக்கின்றான்.அவ்வகையில் தும்பிப்பூச்சி பற்றி சற்று நோக்குவோம்.
எமது சு10ழலில் பல்வேறு வகையான தும்பிகள் காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும் உடற் பருமனிலும் நிறத்திலும் வேறுபடுகின்றன.பொதுவாக இவை பறப்பதற்கு இயலுமான மெல்லிய நான்கு சிறகுகளைக் கொண்டிருக்கும்.இச்சிறகுகள் ஒலி ஊடுருவக்கூடிய பொலித்தீன் போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.அவற்றில் மிக நுன்னிய இரத்த நாளங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
இச் சிறகுகளுக்கு அல்லாஹ் ஓர் அபார சக்தியை வழங்கியுள்ளான்.அதாவது இவற்றால் ஒரு மணி நேரத்தில் 80-97 மஅ தூர வேகத்தில் பறந்து செல்ல முடியும்.இந்த வேகத்தில் துரிதமாக சிறகடித்துப் பறக்கும் போது அம்மெல்லிய சிறகுகள் பிய்ந்து விடாது இருக்கும் வகையிலும் ,எதிர்ப்படும் கடும் காற்றுக்கும் ஈடு கொடுத்துச் செல்லும் வகையிலும், எதிரி விலங்குகளிடம் இருந்து தப்பித்துக்கொள்ள தனக்கு வேண்டிய விதத்தில் திடீர் திடீரென திசையை மாற்றிப் பறப்பதற்கும் உகந்த வகையிலும் அல்லாஹ் இவ் அற்புதத்தை வழங்கியுள்ளான்.அது மட்டுமன்றி பறந்துகொண்டிருக்கும் போதே அதே வேகத்தில் திசை மாறி தனது உணவைப் பற்றும் ஆற்றலையும் அந்தரத்தில் அசையாது ஒரே இடத்தில் நிற்கும் ஆற்றலையும் அல்லாஹ் இவற்றிற்கு வழங்கியுள்ளான்.
தும்பிகள் சிவப்பு,பச்சை,நீலம்,வெள்ளை,மஞ்சள் மற்றும் கறுப்பு போன்ற பல நிறங்களிலும் பல்வேறு நிறங்களைக் கொண்ட கலப்பு வடிவிலும் காணப்படுகின்றன.தும்பியின் உடல் பெரிய தலைப்பகுதியையும் அதனை ஒத்;த உடற் பகுதியையும் நீண்டதொரு வாலையும் ஆறு கால்களையும் கொண்டிருக்கும்.இவற்றின் உடம்பு மற்றும் கால்களில் சிறிய மயிர்கள் சு10ழ்ந்து காணப்படும்.படைட எனப்படும் சிறு தும்பிகள் மீன்களைப்போன்று செதில்களாலேயே சுவாசிக்கும்.
உண்மையில் தும்பிகளின் தலைரயை விடவும் அவற்றின் கண்களே பெரிதாகக் காணப்படுகின்றன.குண்கு மணிகள் போன்ற இந்தப் பெரிய இரு பாதிக் கண்களும் அவற்றின் தலை முழுதும் பரவிக் காணப்படுகின்றன.நாம் மேல் வாரியாகப் பார்த்தால் தும்பிகளுக்கு இரண்டு கண்கள் என்று தான் கருதுவோம்.ஆனால் உண்மை அதுவல்ல.அவை பறக்கும் போது அவ்வேகத்திற்கேற்ப பல திசைகளிலும் பார்வையைச் செலுத்தும் வகையில் அல்லாஹ் அக் கண்களில் ஓர் அற்புதத்தை வைத்துள்ளான்.
பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.எனவே பல மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சிறிய அசையாப் பொருளாயினும் இவற்றால் எளிதாகவும் விரைவாகவும் அதனை இனங்கான முடியும்.இது வல்ல நாயன் அவற்றிற்கு வழங்கிய ஓர் அற்புதமாகும்.
ஆண் மற்றும் பெண் தும்பிகள் எப்போதும் தனித்தனியேதான் வாழும்.அவற்றின் இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து விட்டு மீண்டும் பிரிந்து விடும்.பெண் தும்பிகள் அவற்றின் முட்டைகளை நீர் மேற் பரப்பில் அல்லது நீர்த்தாவரங்களின் மீதுதான் இடுகின்றன.சுமார் 3 வாரத்தில் முட்டைகளிலிருந்து குஞ்சுத்தும்பிகள் வெளியேறி விடும்.அப்போது அவற்றிற்கு சிறகுகள் இருக்காது.சுமார்4-5 மாதங்களுக்கு தொடர்ந்தும் நீரிலேயே இருந்து தமது நீண்ட ஊசி போன்ற உதட்டினால் சிறு பூச்சிகளையும் நீர்ப்பிராணிகளையும் உண்டு வாழ்கின்றன.சில வகைப்பெரிய தும்பிகள் சிறிய தவளை,மீன் குஞ்சுகள் என்பவற்றையும் உண்டு வாழும்.இவ்வாறு அவற்றின் சிறகுகள் நன்கு வளர்ந்து உடலும் பலம் பெறும் வரை நீர் மேலேயே வாழ்ந்து வரும்.அதன் பின்பு அங்கிருந்து பறந்து சென்று விடும்.அதன் பின்பு இவை சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் மாத்திரமே உயிர் வாழ்கின்றன.
மற்றொரு முக்கிய விடயம் என்னவென்றால், இன்று மனிதன் யுத்த நடவடிக்கைகளுக்காகத் தயாரிக்கின்ற யுத்த விமானங்கள் குறிப்பாக ஹெலிகொப்டர்கள் அல்லாஹ்வின் இவ் அற்புதப்படைப்பை மையமாகக் கொண்டவையாகும்.
தும்பியைப் போன்று தேவைக்கேற்ப பறந்த நிலையிலேயே திசையை உடனே மாற்றிக் கொள்வதற்கும், அந்தரத்தில் ஒரே இடத்தில் நின்றவாறு இருக்கவும் தரையிலிருந்து திடீரென மேலே எழுந்து பறப்பதற்கும் என பல நடவடிக்கைகளுக்கு தும்பியின் இறகு,உடல்,நிறை என்பவற்றைத் துணையாகக் கொள்கின்றனர். தும்பிகள் முன்னும் பின்னுமாக இரண்டு சோடி இறக்கைகளைக் கொண்டுள்ளன. இவை பறக்கும் போது முற்பகுதி இறக்கைகள் மேல் நோக்கியும் பிற்பகுதி இறக்கைகள் கீழ் நோக்கியும் மாறி மாறி அசைகின்றன. எனினும் அந்த அல்லாஹ்வின் படைப்போடு இந்த ஹெலிகொப்டர்களின் செயற்பாட்டை ஒப்பிடுகையில் இவை அற்பமானவையே!
இவ்வாறு அநேகமான சந்தர்ப்பங்களில் இப்பலவீனமான மனிதன் இவ்விலங்குகளிடம் பாடம் கற்க வேண்டி ஏற்படுவதைக் காண்கிறோம்.இத்தும்பியிடம் காணப்படும் ஒவ்வொரு நுட்பமான துல்லியமான கட்டமைப்புக்களும் திட்டமிட்ட படைப்பாளனின் வல்லமையை எமக்கு உணர்த்துகின்றன.
நிச்சயமாக இவை பரிணாம அடிப்படையில் தோன்றியவை என்று ஒரு போதும் கூற முடியாது.320 மில்லியன் (32 கோடி)ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தும்பிதான் இன்றும் இருக்கின்றது என்பதை தொல்பொருள் ஆய்வுகளே உண்மைப்படுத்துகின்றன. அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்திப்போருக்கு அதில் நிறைய சான்றுகள் உள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...