"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 August 2011

யார் இந்த கிறீஸ் மனிதன்?

ஆலிப் அலி (இஸ்லாஹி)

தற்போது இலங்கை புராகவும் கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய  அச்சம் மக்கள் மத்தியில் குடிகொண்டுள்ளது. இரவு நேரங்களில் உடல் புராகவும் கறீஸ் தடவிக்கொண்டு வீடுகளை நோக்கி இவர்கள் வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களைக் குழப்பிவிட்டு ஓடிவிடுவதாகவும் பல்வேறு செய்திகள் நாட்டின் நாளா புறமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றது. இச்செய்தியைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கிறீஸ் மனிதன் சம்பவம் நிகழ்ந்ததாக தொலைபேசி வாயிலாக ஒரு நண்பர் தெரிவித்தார். கண்டி, கம்பளை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநேகலை, புத்தளம், அக்கரைப்பற்று, ஓட்டமாவடி என பல பிரதேசங்களிலும் இந்த விவகாரம் தலைக்குமேல் போய்க்கொண்டிருக்கின்றது.

சிலர் இந்த மா்ம மனிதரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும் பொலிஸார் எந்தவித அக்கரையும் இன்றி அவர்களை விடுதலைசெய்துள்ளனர். அக்கரைப்பற்றில் இவ்வாரானதொரு சம்பவம் நிகழவும் கோபமுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். கம்பளைப் பிரதேசத்திலும் பொதுமக்கள் ஒருவரைப் பிடித்து பொலீஸாரிடம் ஒப்படைத்தபோது பொலீஸார் அவனை விடுவித்துள்ளனர்.

இதனால் இவ்விடயம் பொலிஸாரின் உதவியுடன் நடைபெறுவதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். இன்னும் சிலர் இது அரசாங்கத்தின் வேலையென்றும் கூறுகின்றனர். இன்னும் சிலா் ஜனாதிபதியின் சில சொந்தக் காரணிகளுக்கா இவ்வாறு செய்யப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

எது உண்மையோ எது பொய்யோ பொதுமக்கள் இவ்விடயத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தல்கஸ்பிடி பகுதியில் கிறீஸ் மனிதன் என்று எண்ணி அப்பகுதி மக்கள் அநியாயமாக ஒருவரை அடித்து அவரது வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். குறித்த மனிதர் மரணித்துவிட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.

கடந்த 5ம் திகதி வெள்ளிக்கிழமை தினகரன் பத்திரிகையிலும் “கிறீஸ் மர்மமனிதன் உங்களில் ஒருவன்” என்ற தலைப்பில் முன்பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் கூட இதுவெருமனே சாதாரண விடயம் என்ற வகையில் எழுதப்பட்டிருந்தது. உண்மையில் இது சாதாரணமாக விட்டுவிடக்கூடிய விடயமல்ல. கிறீஸ் மனிதர்கள் முஸ்லிம்கள் செரிவாக வாழக்கூடிய பகுதிகளில் நடமாடுவதாலும் பெண்களையே குறிவைப்பதாலும் பலர் வெட்டுக் குத்துக்களுக்கு இலக்காகியுள்ளதாலும் இதுகுறித்து அரசாங்கம் ஆழமாக கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உங்கள் கருத்து:

2 comments:

Unknown said...

திட்டமிட்ட குழுவா? இல்லை ஆள் ஆளுக்கு இப்படி வெளிக்கிட்டு திரிகிறார்கள??

Aalif Ali said...

சகோதரரே! எனது கருத்துப்படி இது திட்டமிட்ட குழுவாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு ஒரு வேன் வருவதாகவும் இதுபோன்ற கிறீஸ் புசிய மனிதர்களை விட்டுவிட்டுச் செல்வதாகவும் மீண்டும் அதே வேன் வந்து அவர்களைக் கொண்டுசெல்வதாகவும் மக்கள் கண்டு அறிவித்துள்ளனர்.

அத்தோடு அரசாங்கத்தின் அடியாட்கள் என்றும் இராணுவத்தினரென்றும் கூறப்படுகின்றது

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...