ஆலிப் அலி (இஸ்லாஹி)
பிரபஞ்சம் என்பது நாம் வாழும்; பூமி உட்பட பூமிக்கு வெளியில் இருக்கும் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், வாயுக்கள், ஏனைய கோள்கள், பால்வீதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாகும். இதன் பிரமாண்டத்தை விளக்குவதாயின் பிரபஞ்சம் 300million இற்கும் அதிகமான Galaxies எனும் பால்வீதிகளைக் கொண்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பால்வீதிகள் 250billion இற்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளன. அதாவது பூமியில் உள்ள அனைத்துக் கடல் மணற்துணிக்கைகளையும் விட பிரபஞ்சததிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். சூரியன் இந்த மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமே. எவ்வளவு தூரம் மைல்கணக்கில் சென்றாலும் பிரபஞ்சத்தின் எல்லையை அடையவே முடியாது. இத்தரவுகள் மூலம் பிரபஞ்சம் என்பது எவ்வளவு விசாலமானதும், பிரமாண்டமானதும் என்பதை எம்மால் புறிந்து கொள்ள முடியும்.
இப்பிரமாண்டமான பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு கருத்து சரியானதும் மற்ற இரண்டும் பிழையானதுமாகும். இம்மூன்று கருத்துக்களையும் உதாரணங்களுடன் சற்று ஆராய்வோம்.
பிரபஞ்சம் எதேச்சையாக உருவானவொன்றோ அல்லது படைக்கப்பட்டவொன்றோ அல்ல
“பிரபஞ்சம் திடீரெனத்தோன்றியதோ, இறைவனால் படைக்கப்பட்டவொன்றோ அல்ல. மாறாக ஆரம்பமொன்றே இல்லாமல் தொடர்ந்து இருந்து வருவதும், என்றுமே அழியாததுமாகும்” என்ற கருத்தில் சிலர் இருக்கின்றனர். இதுவொரு குழப்பமான கருத்து. இக்கருத்து பிழையானது என்பதைச் சில உதாரணங்களுடன் விளங்குவோம்.
நீங்கள் போகும் பாதையில் ஓர் இடத்தில் சிலையொன்றைக் காண்கிறீர்கள். அது யாராலும் செதுக்கப்படவுமில்லை, எதேச்சையாகத் தோன்றவுமில்லை என்று யாராவது உங்களிடம் கூறினால் கூறியவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவரது புத்தி குழம்பியிருக்குமென நினைக்கமாட்டீர்களா? ஒன்று இச்சிலை யார்மூலமாவது செதுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது எதேசசையாகத் தோன்றியிருக்க வேண்டும். இவ்விரண்டையும் தாண்டி வேறு ஒன்று நிகழாது என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே அவரையும் அவரது கருத்தையும் நீங்கள் புறக்கணித்துவிடுவீர்கள். அதன் மூலம் எந்தப் பொருளும் இல்லாமையிலிருந்தே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொளிவீர்கள்.
பிரபஞ்சம் இல்லாமையிலிருந்தே தோன்றியது என்பதை முதன் முதலாக 1929இல் Edwin Hubble என்ற விண்ணியலாளர் மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அவர் “நான் வானத்தை ஆராயும்போது, நட்சத்திரங்கள் பூமியைவிட்டும், ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தை விட்டும் சீராக ஏதோ ஒன்றை நோக்கிப் பயணிப்பதை அவதானித்தேன்” எனக் கூறினார். இதன்படி பிரபஞ்சம் படிப்படியாக வளர்ந்து வருவதும் (விரிவடைவதும்), ஆரம்பத்தில் இல்லாமையிலிருந்தே உருவாகியது என்றும் அவர் கூறினார். இக்கருத்தை விளங்குவதற்குக் கீழ்வரும் கேள்விகளுக்கு விடையளித்துப் பாருங்கள்.
தற்போது உங்களது வயதென்ன? இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு உங்களது வயதென்ன? அதற்கு 2 வருடங்களுக்கு முன்பு...? இப்படிப் படிப்படியாக பின்னோக்கிச் சென்றால் ஒரு கட்டத்தில் உங்களுடைய வயது 1வருடம் எனக்கூறுவீர்கள். அதற்கு முன்பு உங்களுடைய வயதைக் கேட்டால் பூச்சியம் என்றே கூறுவீர்கள். அந்தப் பூச்சிய வயதிற்கு 1வருடத்திற்கு முன்பு உங்களுடைய வயதைக்கேட்டால் நிச்சயமாக இகற்கு உங்களால் பதிலளிக்க முடியாதிருக்கும். ஏனென்றால் நீங்கள் அப்போது இவ்வுலகிலேயே இல்லாதிருந்தீர்கள். அதாவது நீங்கள் இல்லாமையிலிருந்தே தோன்றி தற்போது படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளீர்கள்.
எனவே வளர்ந்து வருமொன்று பூச்சியத்திலிருந்தே (இல்லாமையிலிருந்தே) உருவாகியிருக்கிறது என்பது விளங்குகின்றது. ஆக பிரபஞ்சம் வளர்கிறது என்றால் Edwin Hubble கூறுவதுபோல் அது பூச்சியத்திலிருந்தே (இல்லாமையிலிருந்து)தான் உருவாகியிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அப்படியானால் யாதும் இல்லாமையிலிருந்தே உருவாகின்றது என்பதையும் முதலாவது கருத்து பிழையானது என்பதையும் தெளிவாக விளங்கியிருப்பீர்கள். அப்படியானால் இவை இல்லாமையிலிருந்து திடீரென உருவாகின்றதா? அல்லது உருவாக்கப்படுகின்றதா? என்ற ஒரு குழப்பம் தற்போது உங்களுக்கு ஏற்படலாம்…
பிரபஞ்சம் எதேச்சையாக திடீரெனத் தோன்றியது
“பிரபஞ்சம் திடீரென (சில பொருட்கள் சேர்ந்து) தோன்றியதாகும்” என்ற இக்கருத்தை அதிகமாக இறை நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் இக்கருத்து பகுத்தறிவினால் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும். இதனை ஓர் உதாரணத்துடன் விளங்க முயற்சிப்போம்.
உங்களிடம் யாராவது வந்து “நான் ஒரு பெட்டியில் கொஞ்சம் நீரையும் வைக்கோளையும் அமிலங்களையும் மையையும் (Ink) போட்டு மூடிவைத்தேன். ஒரு மாதத்தின் பின்பு அப்பெட்டியைத் திறந்து பார்த்தால் அதிலே சஞ்சிகையொன்று எதேச்சையாக உருவாகியிருந்தது” என்று கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா? அவரை ஒரு பைத்தியகாரர் என்றே நினைப்பீர்கள். எவ்வாறு சில பொருட்கள் சேர்ந்து இச்சஞ்சிகை எதேச்சையாக உருவாக முடியாதோ அதேபோன்றுதான் இப்பிரபஞ்சமும் சில பொருட்கள் சேர்ந்து எதேச்சையாக உருவாக முடியாது.
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இப்பத்திரிகை உங்கள் கரங்களை அடையும் முன்பு, ஆக்கங்களைச் சேகரித்து அவற்றைத் திட்டமிட்டு, வடிவமைத்து மேலும் பல தொழிற்பாடுகளின் பின்புதான் பத்திரிகையாக வெளியிடுகின்றனர். அப்படியானால் பிரமாண்டமான இப்பிரபஞ்சத்துடன் இதனை ஒப்பிடுகையில் இதனை வெளியிடவே இத்துனை வேளைகளும் திட்டமிடல்களுமென்றால் அழகான இப்புவியையும் கோள்களையும் நட்சத்திரங்களையும் பால்வீதிகளையும் உள்ளடக்கியிருக்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்க எத்தனை வேளைகள் எத்தனை தொழிநுட்பவியலாளர்கள் தேவைப்படும். இதன் மூலம் பிரபஞ்சம் திடீரென, எதேச்சையாகத் தோன்றியது என்ற இரண்டாவது கருத்தும் பொய்யாகின்றது. பிரபஞ்சம் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற சகல ஏற்பாடுகளையும் செய்த ஒரு மூலகர்த்தா இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. ஆகவே சரியான கருத்து என்ன என்பதைத் தற்போது நீங்கள் விளங்கியிருப்பீர்கள்.
பிரபஞ்சம் அல்லாஹ்வால் திட்டமிட்டுப் படைக்கப்பட்டது.
நேர்த்தியாகவும், அழகாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சம் அல்லாஹ்வால் திட்டமிட்டுப் படைக்கப்பட்டவொன்று. பிரபஞ்சத்தின் அற்புதமான வரலாற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது பிரபஞ்சம் என்பது இல்லாமையிலிருந்து படைக்கப்பட்ட ஒன்றாகும். இது படைக்கப்பட முன்னர் ஒன்றுமற்ற ஒரு சூனியமாகவே இருந்தது. அப்போது நீரல்ல மலையல்ல இடைவெளி (Space) கூட இருக்கவில்லை. அதுபோன்றதோர் இடத்தை எம்மால் கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாதல்லவா?
அங்கு எமது கண்களுக்குப் புலபடாத மிகச்சிறியதொரு இடமே இருந்திருக்கின்றது. இவ்விடத்தில் சிறிய சடத்துணிக்கைகள் மிக நெருக்கமாகி, ஒன்றாகி ஒரு புள்ளி (Speck) போன்று கானப்பட்டது. அதனுள் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக அது பாரிய அழுத்தத்துடன் வெடித்து அதனுள் இருந்த துணிக்கைகள் எல்லாம் சிதறின. இப்பாரிய வெடிப்பையே விஞ்ஞானம் ‘பெருவெடிப்பு (Big bang)’ எனப் பெயரிட்டுள்ளது. சிறிய துணிக்கைகள் ஒன்றோடொன்று இணைந்து பிரபஞ்சப் பொருட்கள் (சூரியன், புவி...) உருவாகின. இவ்வனைத்து செயற்பாடுகளும் இயற்கையாக நிகழ்ந்தவையல்ல. அல்லாஹ்வின் திட்டமிடலும், ஒழுங்கமைப்புமாகும் என்பதை நீங்கள் தௌ;ளத் தெளிவாக விளங்கியிருப்பீர்கள்.
மேற்கூறிய முதல் இரண்டு கருத்துக்களும் ஆதாரமற்றவையும், பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாதவையுமே என்பதையும் மூன்றாவது கருத்து பகுத்தறிவு ஏற்றுக்கொள்வதும் ஆதாரமுள்ளதுமாகும் என்பதை உதாரணங்களுடன் விளங்கினோம். அல்லாஹ்தான் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை எவ்வித ஐயமுமின்றி ஏற்றுக்கொண்டோம்.
அப்படியென்றால் அல்லாஹ்வின்; இத்திட்டமிடலைப் பாருங்கள். உங்களிடம் ஒரு “க்ளே” (களி) யைத்தந்து அதன் மூலம் ஏதாவது செய்யுமாறு கேட்டால் நீங்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு கிளியையோதான் செய்ய முயற்சிப்பீர்கள். அதாவது இதற்கு முன்னர் நீங்கள் கண்ணால் கண்ட, உங்கள் மனதில் பதிந்துள்ள ஒன்றையே செய்வீர்கள். நீங்கள் காணாத, இவ்வுலகத்தில் இல்லாத ஒன்றை உங்களால் செய்ய முடியாது. ஆனால் அல்லாஹ் இதற்கு முன்பு பிரபஞ்சமென்று ஒன்று இருக்காத நிலையில் எவ்வித முன்னுதாரணமுமின்றி கற்பனைபன்னி இப்பிரபஞ்சத்தைப் படைத்துள்ளான். பார்த்தீர்களா அவனது வல்லமையை. அவன் அல்-காலிக் எதனையும் முன்னுதாரனமின்றிப் படைப்பவன்.
இப்பிரமாண்டமான பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு கருத்து சரியானதும் மற்ற இரண்டும் பிழையானதுமாகும். இம்மூன்று கருத்துக்களையும் உதாரணங்களுடன் சற்று ஆராய்வோம்.
முதலாவது கருத்து:-
பிரபஞ்சம் எதேச்சையாக உருவானவொன்றோ அல்லது படைக்கப்பட்டவொன்றோ அல்ல
நீங்கள் போகும் பாதையில் ஓர் இடத்தில் சிலையொன்றைக் காண்கிறீர்கள். அது யாராலும் செதுக்கப்படவுமில்லை, எதேச்சையாகத் தோன்றவுமில்லை என்று யாராவது உங்களிடம் கூறினால் கூறியவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவரது புத்தி குழம்பியிருக்குமென நினைக்கமாட்டீர்களா? ஒன்று இச்சிலை யார்மூலமாவது செதுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது எதேசசையாகத் தோன்றியிருக்க வேண்டும். இவ்விரண்டையும் தாண்டி வேறு ஒன்று நிகழாது என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். எனவே அவரையும் அவரது கருத்தையும் நீங்கள் புறக்கணித்துவிடுவீர்கள். அதன் மூலம் எந்தப் பொருளும் இல்லாமையிலிருந்தே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொளிவீர்கள்.
பிரபஞ்சம் இல்லாமையிலிருந்தே தோன்றியது என்பதை முதன் முதலாக 1929இல் Edwin Hubble என்ற விண்ணியலாளர் மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அவர் “நான் வானத்தை ஆராயும்போது, நட்சத்திரங்கள் பூமியைவிட்டும், ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தை விட்டும் சீராக ஏதோ ஒன்றை நோக்கிப் பயணிப்பதை அவதானித்தேன்” எனக் கூறினார். இதன்படி பிரபஞ்சம் படிப்படியாக வளர்ந்து வருவதும் (விரிவடைவதும்), ஆரம்பத்தில் இல்லாமையிலிருந்தே உருவாகியது என்றும் அவர் கூறினார். இக்கருத்தை விளங்குவதற்குக் கீழ்வரும் கேள்விகளுக்கு விடையளித்துப் பாருங்கள்.
தற்போது உங்களது வயதென்ன? இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு உங்களது வயதென்ன? அதற்கு 2 வருடங்களுக்கு முன்பு...? இப்படிப் படிப்படியாக பின்னோக்கிச் சென்றால் ஒரு கட்டத்தில் உங்களுடைய வயது 1வருடம் எனக்கூறுவீர்கள். அதற்கு முன்பு உங்களுடைய வயதைக் கேட்டால் பூச்சியம் என்றே கூறுவீர்கள். அந்தப் பூச்சிய வயதிற்கு 1வருடத்திற்கு முன்பு உங்களுடைய வயதைக்கேட்டால் நிச்சயமாக இகற்கு உங்களால் பதிலளிக்க முடியாதிருக்கும். ஏனென்றால் நீங்கள் அப்போது இவ்வுலகிலேயே இல்லாதிருந்தீர்கள். அதாவது நீங்கள் இல்லாமையிலிருந்தே தோன்றி தற்போது படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளீர்கள்.
எனவே வளர்ந்து வருமொன்று பூச்சியத்திலிருந்தே (இல்லாமையிலிருந்தே) உருவாகியிருக்கிறது என்பது விளங்குகின்றது. ஆக பிரபஞ்சம் வளர்கிறது என்றால் Edwin Hubble கூறுவதுபோல் அது பூச்சியத்திலிருந்தே (இல்லாமையிலிருந்து)தான் உருவாகியிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அப்படியானால் யாதும் இல்லாமையிலிருந்தே உருவாகின்றது என்பதையும் முதலாவது கருத்து பிழையானது என்பதையும் தெளிவாக விளங்கியிருப்பீர்கள். அப்படியானால் இவை இல்லாமையிலிருந்து திடீரென உருவாகின்றதா? அல்லது உருவாக்கப்படுகின்றதா? என்ற ஒரு குழப்பம் தற்போது உங்களுக்கு ஏற்படலாம்…
இரண்டாவது கருத்து:-
பிரபஞ்சம் எதேச்சையாக திடீரெனத் தோன்றியது
உங்களிடம் யாராவது வந்து “நான் ஒரு பெட்டியில் கொஞ்சம் நீரையும் வைக்கோளையும் அமிலங்களையும் மையையும் (Ink) போட்டு மூடிவைத்தேன். ஒரு மாதத்தின் பின்பு அப்பெட்டியைத் திறந்து பார்த்தால் அதிலே சஞ்சிகையொன்று எதேச்சையாக உருவாகியிருந்தது” என்று கூறினால் நீங்கள் அதை நம்புவீர்களா? அவரை ஒரு பைத்தியகாரர் என்றே நினைப்பீர்கள். எவ்வாறு சில பொருட்கள் சேர்ந்து இச்சஞ்சிகை எதேச்சையாக உருவாக முடியாதோ அதேபோன்றுதான் இப்பிரபஞ்சமும் சில பொருட்கள் சேர்ந்து எதேச்சையாக உருவாக முடியாது.
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இப்பத்திரிகை உங்கள் கரங்களை அடையும் முன்பு, ஆக்கங்களைச் சேகரித்து அவற்றைத் திட்டமிட்டு, வடிவமைத்து மேலும் பல தொழிற்பாடுகளின் பின்புதான் பத்திரிகையாக வெளியிடுகின்றனர். அப்படியானால் பிரமாண்டமான இப்பிரபஞ்சத்துடன் இதனை ஒப்பிடுகையில் இதனை வெளியிடவே இத்துனை வேளைகளும் திட்டமிடல்களுமென்றால் அழகான இப்புவியையும் கோள்களையும் நட்சத்திரங்களையும் பால்வீதிகளையும் உள்ளடக்கியிருக்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்க எத்தனை வேளைகள் எத்தனை தொழிநுட்பவியலாளர்கள் தேவைப்படும். இதன் மூலம் பிரபஞ்சம் திடீரென, எதேச்சையாகத் தோன்றியது என்ற இரண்டாவது கருத்தும் பொய்யாகின்றது. பிரபஞ்சம் எவ்வாறு இயங்கவேண்டும் என்ற சகல ஏற்பாடுகளையும் செய்த ஒரு மூலகர்த்தா இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. ஆகவே சரியான கருத்து என்ன என்பதைத் தற்போது நீங்கள் விளங்கியிருப்பீர்கள்.
மூன்றாவது கருத்து:-
அங்கு எமது கண்களுக்குப் புலபடாத மிகச்சிறியதொரு இடமே இருந்திருக்கின்றது. இவ்விடத்தில் சிறிய சடத்துணிக்கைகள் மிக நெருக்கமாகி, ஒன்றாகி ஒரு புள்ளி (Speck) போன்று கானப்பட்டது. அதனுள் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக அது பாரிய அழுத்தத்துடன் வெடித்து அதனுள் இருந்த துணிக்கைகள் எல்லாம் சிதறின. இப்பாரிய வெடிப்பையே விஞ்ஞானம் ‘பெருவெடிப்பு (Big bang)’ எனப் பெயரிட்டுள்ளது. சிறிய துணிக்கைகள் ஒன்றோடொன்று இணைந்து பிரபஞ்சப் பொருட்கள் (சூரியன், புவி...) உருவாகின. இவ்வனைத்து செயற்பாடுகளும் இயற்கையாக நிகழ்ந்தவையல்ல. அல்லாஹ்வின் திட்டமிடலும், ஒழுங்கமைப்புமாகும் என்பதை நீங்கள் தௌ;ளத் தெளிவாக விளங்கியிருப்பீர்கள்.
மேற்கூறிய முதல் இரண்டு கருத்துக்களும் ஆதாரமற்றவையும், பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளாதவையுமே என்பதையும் மூன்றாவது கருத்து பகுத்தறிவு ஏற்றுக்கொள்வதும் ஆதாரமுள்ளதுமாகும் என்பதை உதாரணங்களுடன் விளங்கினோம். அல்லாஹ்தான் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதை எவ்வித ஐயமுமின்றி ஏற்றுக்கொண்டோம்.
அப்படியென்றால் அல்லாஹ்வின்; இத்திட்டமிடலைப் பாருங்கள். உங்களிடம் ஒரு “க்ளே” (களி) யைத்தந்து அதன் மூலம் ஏதாவது செய்யுமாறு கேட்டால் நீங்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு கிளியையோதான் செய்ய முயற்சிப்பீர்கள். அதாவது இதற்கு முன்னர் நீங்கள் கண்ணால் கண்ட, உங்கள் மனதில் பதிந்துள்ள ஒன்றையே செய்வீர்கள். நீங்கள் காணாத, இவ்வுலகத்தில் இல்லாத ஒன்றை உங்களால் செய்ய முடியாது. ஆனால் அல்லாஹ் இதற்கு முன்பு பிரபஞ்சமென்று ஒன்று இருக்காத நிலையில் எவ்வித முன்னுதாரணமுமின்றி கற்பனைபன்னி இப்பிரபஞ்சத்தைப் படைத்துள்ளான். பார்த்தீர்களா அவனது வல்லமையை. அவன் அல்-காலிக் எதனையும் முன்னுதாரனமின்றிப் படைப்பவன்.
3 comments:
உம்முடைய சமய நம்பிக்கையை நன் மதிக்கிறேன் ?
உம்முடைய கட்டுரையும் விளக்கங்களும் , முடிவில் இறைவனை மையப்படுத்த வேணும் என்றே எழுதபட்டுள்ளது. ஆக அல்லா என்று கூறுகின்ற இறைவனை தான் இந்துகள் சிவன் என்றும் , கிறிஸ்தவர்கள் இயேசு என்றும் கூருன்கின்றார்கள் . இப்படி பார்க்கிற போது இஸ்லாம் மதத்தின் முன்னம் இந்து மதம் தோற்றம் பெற்றது . அவ்வாறெனில் எப்படி அல்லாவால் உலகம் படைக்க பட்டிருக்க முடியும் ? அதை அல்லாவுக்கு முன் தோன்றிய சிவன் அல்லவே படைத்திருக்க வேண்டும். ஆக சமய நம்பிக்கையையும் அறிவியலையும் ஒரு பாதையில் இணைக்க முற்பட வேண்டம் . அப்படி இணைக்க படுகின்ற போது அங்கு அறிவியலுக்கான ஆதாரங்களே அதிகம் இருந்கின்றது....................
peyarillaa anparin karuththukku oru pathil.......
islaam thoandriyathu inthu matham thoandriyathaRkuppinnar endru yaar ungaLidam kooRiyathu? ulakil thoandriya muthal manithanin mathamthaan islaam. avaraiththaan naangaL aatham (Adam) enkiRoam. avarathu manaiviyai naam havvaa (Eve) enkiRoam. ivarkaLil irunthuthaan muzu manitha samuthaayamum thoatram peRukiRathu. ippadiyirukka aRiviyal endra parantha aRivin mikach chiRiya oru pakuthiyai vaiththukkoNdu iRaivanai maRukka muyalkiReerkaL? pirapanjaththai padaiththathu iRaivanthaan, avanai naangaL nerungi vittoam endru 'sama kaala ulakin ainStain' endru poatrppadum STEFEN HAWKINS kooRiyuLLa seithi ungaLukku theriyaatha sangathiyaaka irukkalaam. antha iRaivanaiththaan naangaL allaah enkiRoam. ungaLai ninaikka kavalaithaan varukiRathu.....
SUBHANALLAH
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...