இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. 31% ஆனோர் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் 30% ஆனோர் சம்பளம் வழங்கப்படாமை குறித்தும் 44% ஆனோர் உணவு வழங்கப்படாமை குறித்தும் 25% ஆனோர் உறங்குவதற்கான இடம் தரப்படாமை குறித்தும் முறையீடு செய்துள்ளனர்.
கரிட்டாஸ் நிறுவனத்தினால் அண்மையில் கொழும்பில் நடாத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சட்ட நிபுணரான சியாமளி ரணராஜா “வெளிநாட்டுப் பணிப்பெண்ணாகச் செல்லும் 90% ஆனோர் அதற்கு முன்பு தொழில் ஒன்றும் செய்யாதவர்ளே! சொந்த நாட்டில் பணிபுரியாத ஒரு பெண்ணுக்கு வெளிநாடுசென்று பணிபுரிவது கடினமாகத்தான் இருக்கும்” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...