"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 March 2012

முஸ்லிம் அறிவுஜீவிகளைக் கொலை செய்யும் மேற்கின் உளவுஸ்தாபனங்கள்

முஃதஸிம் பில்லாஹ்வுடைய ஆட்சிக்காலத்தில் அண்ணிய நாட்டுப்படையின் சில  வீரர்கள் ஒரு முஸ்லிம் பெண்ணைக் கடத்திச் சென்றபோது அப்பெண் முஃதஸிம் பில்லாஹ்வை நோக்கி வா முஃதஸிமாஎன்று இட்ட கூக்குரலைக்கேட்ட அன்றைய முஸ்லிம் படையினர் படையெடுத்துச் சென்று அப்பெண்ணை மாத்திரமல்லாது அந்நாட்டையே கைப்பற்றி இஸ்லாத்திற்குள் கொண்டுவந்த வரலாறு முஸ்லிம்களின் வீர வரலாறு. ஆனால் இன்றோ ஈராக்கென்றும் ஆப்கானென்றும் பலஸ்தீன், காஷ்மீர், உய்குர் என்றெல்லாம் நாடு நாடாக முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கருவறுக்கப்பட்டு கற்பலிக்கப்பட்டபோதிலும் கோட்கப் பார்க்க யாருமில்லாது நாதியற்று நிற்கின்றோம். விரும்பியவர்கள் வந்து முஸ்லிம்களைக் கால்பந்தாடிவிட்டுச் செல்லும் நிலைதான் நீடித்துவருகின்றது.

ஆனால் இதற்கு முன்பு இருளில் மூழ்கியிருந்த மேற்கு நாடுகளுக்கு அறிவியல் ஒளியூட்டி வாழ்க்கைக்கும் நாகரிகத்திற்கும் வழிகாட்டியது இஸ்லாமியர்கள்தாம். பல்வேறு துறைகளிலும் விற்பண்ணர்களாக இருந்ததும் முஸ்லிம்கள்தாம். ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாணவர்கள் முஸ்லிம்களின் கல்விச் சுனையிலிருந்து அறிவு பருகுவதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். ஆனால் இன்று பல்வேறு காரணங்களால் முஸ்லிம்கள் மேற்கு நாடுகளிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது. அதற்குப் பிரதான காரணம் இஸ்லாமியர்களிடம் காணப்பட்ட அறிவுக்கருவூலங்கள் அழிக்கப்பட்டமையும் அவை மேற்கு நாடுகளைநோக்கி நகர்த்தப்பட்டமையும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் கொலைசெய்யப்பட்டமையும் அவர்கள் சிந்தனைச் சிக்களுக்குட்படுத்தப்பட்டு மேற்கு சார்புடையவர்களாக மாற்றப்பட்டமையும்தான் என்று கூறலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் மாத்திரமன்றி உலக வரலாற்றிலேயே அறிவியல் வீரியம்பெற்றமைக்கு முக்கிய காரணமாயமைந்தது நூலகங்களே. இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த பல நாடுகளிலும் பல துறைகளையும் உள்ளடக்கிய இலட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான நூல்களைக்கொண்ட பல ஆயிரம் நூலகங்கள் காணப்பட்டன. ஆனால் பிற்பட்ட காலங்களில் இஸ்லாமிய நாடுகளைநோக்கி நாடுகாண் பயணங்கள் என்ற பெயரில் மேற்கு நுழைந்து அறிவுக் கருவூலங்கள் மேற்கு நோக்கி நகர்த்தப்பட்டதும் சிலுவைப் பேர்களாலும் மங்கோலியத் தாத்தாரியப் படையெடுப்புகளாலும் அந்நூலகங்களும் பல்கலைக்கழகங்களும் கல்விநிலையங்களும் அழிவுள்ளாக்கப்பட்டு அங்கிருந்த அறிவு ஜீவிகளும் மாணவர்களும் படுகொலைசெய்யப்பட்டதும் இஸ்லாமிய அறிவியல்துறை பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட காரணங்களாயமைந்தன.

அன்று எவ்வாறு முஸ்லிம்களின் அறிவுத்துறை திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டனவோ அதேபோன்று அதன்தொடர் இன்றும் மேற்கு நாடுகளால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2007 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் டென்ஸி பல்கலைக்கழகத்தின் (University of Tennessee) சட்டத்துறைப் பேராசிரியர் ரினோல்ட் (Glenn “Instapundit” Reynolds)”“ஈரானினது இஸ்லாமியத் தலைவர்களையும் அணுவாயுத விஞ்ஞானிகளையும் அமெரிக்கா அழித்துவிடவேண்டும்என்று கூறிய செய்தி இதற்குப் போதுமான சான்றாகும். ஈரான் என்று இங்கு குறிப்பிட்டுக் கூறப்பட்டாலும் முழு உலக முஸ்லிம் நாடுகளையும் கருத்திற்கொண்டே இன்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் செயற்படுகின்றன.

ரஷ்யாவின் கம்யூனிஸ ராஜ்யம் 1990களில் உடைந்து பல நாடுகளாக பிளவுபட்டபோது கிர்கிஸ்தான், தஜ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், செச்னியா, டெகஸ்தான் மற்றும் இங்குஸ்ஹிடியா போன்றன விடுதலைபெற்று தனி நாடுகளாக சுதந்திரம்பெற்றன. என்றாலும் அங்கெல்லாம் ஒவ்வொருமுறையும் பல முஸ்லிம் விஞ்ஞானிகளும் புத்திஜீவிகளும் கடத்தப்பட்டு காணமல்போயுள்ளதோடு பலர் கொலைசெய்யப்பட்டுமுள்ளனர். இத்தகைய கெடுபடிகளுக்குப் பின்னால் ரஷ்ய கம்யுனிஸ மேலாதிக்கங்கள் செயற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்து முதல் 18 மாதங்களில் மாத்திரம் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக இவர்களில் சிலர் அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள். அதேபோன்று 17500 இற்கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டைவிட்டும் வெளியேரிவிட்டனர். அதிகமானவர்கள் மேற்கின் மேலாதிக்கத்தில் இயங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என எகிப்திய ஆய்வுமையமென்று வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இக்கொலைகளின் பின்னணியில் அமெரிக்க, இஸ்ரேலிய உலவு நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அவ்வாய்வு குறிப்பிடுகின்றது.

ஆப்கான், ஈராக் போர்களின் பின்னர் தனது மூக்கை ஈரான், துருக்கி, பாகிஸ்தான் நாடுகளின் பால் நுழைக்க ஆவலாயுள்ள அமெரிக்கா இந்நாடுகளிலும் தனது வேலையைச் செய்துவருகின்றது. அமெரிக்காவுக்குப் பெரும் தலையிடியாயிருக்கும் ஈரானின் அணுவுற்பத்தியைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் CIA உம் இஸ்ரேலின் மொஸாட் உம் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலைக் கையில்வைத்துக்கொண்டு ஒருவர் ஒருவராகத் தேடித்தேடிக் கொலைசெய்துவருகின்றன.

பலஸ்தீனை ஆக்கிரமித்து அராஜகம் புரியும் இஸ்ரேல் அங்கிருக்கும் முக்கிய விஞ்ஞானிகளையும், பேராசிரியர்களையும், ஆசிரியர்களையும் தேடித்தேடி குறிவைத்துக் கொலைசெய்துவருகின்றனர். ஈராக், ஆப்கான் நாடுகளை ஆக்கிரமித்த அமெரிக்கா அங்குள்ள விஞ்ஞான ஆய்வு மையங்களையும் நிறுவனங்களையும் சேதப்படுத்தி நாசப்படுத்தி அங்கு ஆய்வுகளுக்கான வளங்களையும் தேடித்தேடி அழித்தமை அவர்களது உள்நோக்கத்தைக் காட்டுகின்றது.

2009 ஆம் ஆண்டு புனி ஹஜ் யாத்திரைக்காகச் சென்ற ஈரானிய அணு விஞ்ஞானி சஹ்ராம் அமீரி அமெரிக்க புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டார். பின்பு 2010ம் ஆண்டு விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய அவர் தன்னை அமெரிக்காவின் CIA உலவுப் பிரிவினNர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தடுத்து வைத்து விசாரணை நடாத்தியதாகவும் நாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் 50 மில்லியன் டொலர்களை வழங்குவதாகவும் பல இரகசிய தகவல்களைப் பெற முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் (12.01.2010) ஈரானின் அணுவாயுத விஞ்ஞனியும் பல்கலைக்கழக முதுநிலைப் பேராசிரியருமான மசூத் முஹம்மதி அவரது வீட்டினருகே ரிமோட் மூலம் இயக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில் குண்டின் மூலம் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கடந்த ஜனவரி மாதத்தில் (11.01.2012) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து காரில் பொருத்தப்பட்டிருந்த குண்டொன்றை வெடிக்கவைத்து அணுவிஞ்ஞானியான முஸ்தபா அஹமது ரோஷன் என்பவரும் கொலைசெய்யப்பட்டுள்ளார். இவர் வாயுக்களைப் பிரித்தெடுக்க உதவும் பொலிமெரிக் இழைகளின் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதோடு பிரபலமானதொரு கல்லூhயில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். மேலும் கடந்த 2010 நவம்பரில் மஜீத் ஷஹ்ரியாரி என்ற விஞ்ஞானியும் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற மற்றுமொரு கார் குண்டுத் தாக்குதல் முயற்சியில் ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவரான பரீதுன் அப்பாஸி அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியமையும் அதே வருடம் ஜுலை 23 அன்று தாரிஉஷ் ரெஷானிஜத் என்ற அணுவிஞ்ஞானி இனந்தெரியாத நபர்களால் கொலைசெய்யப்பட்டமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.  அவரது மனைவியான ஷொஹ்ரர் இதுகுறித்து ஐ.நா சபையும் மனித உரிமை அமைப்புகளும் மௌனம் காப்பதைக் கண்டித்து ஐநாவுக்கு எழுதிய கடிதமொன்றில் தீவிரவாதத்தை மிகப் பாரிய அச்சுறுத்தலாக சித்தரிக்கும் ஐநா சபை ஈரானின் விஞ்ஞானிகளைக் குறிவைக்கும் தீவிரவாதிகளைத் தடுக்க முயற்சிக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பது அமெரிக்க, இஸ்ரேலிய பயங்கரவாதமென ஈரான் குற்றம்சாட்டுவதாக ஈரானின் இல்னா செய்தி இஸ்தாபனம் கூறுகின்றது. தொடரும் இக்கொலைத் தாக்குதல்களை ஐ.நா.பெதுச்சபை கண்டிக்கவேண்டுமென்றும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டுமெனவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அனுப்பிய கடிதத்iதில் ஐநாவின் ஈரானுக்கான தூதுவர் முஹம்மது கஸாஇ கோரிக்கை விடுத்துள்ளார்.

2003 ஆண்டு மார்ச் 30ல் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா சித்தீகி என்ற பெண் விஞ்ஞானியும் அமெரிக்க உலவாளிகளால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட இவர் ஆப்கானில் உள்ள பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். 2008ஆம் ஆண்டு பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி இவர் பற்றிய செய்திகளை வெளிக்கொணர்ந்து அமெரிக்காவின் சதித்திட்டங்களை உலகுக்கு அம்பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு நாடுகளில் பணிபுரியும் முஸ்லிம் விஞ்ஞானிகள்கூட தமது வணக்க வழிபாடுகளைச் செய்கின்றபோது பயங்கரவாத அமைப்புகளால் கைதுசெய்யப்படுகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் விஞ்ஞானி ஒருவரும் அவரது சகோதரர்களும் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில்வைத்து கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அடிக்கடி இஸ்லாமிய முஜாஹித்களின் இணைய தளங்களைப் பார்வையிடுவதும் ஐந்து நேரம் தொழுவதும் தாடி வைத்திருப்பதும்தான் இவர்களைக் கைதுசெய்தமைக்குக் காரணிகளாயிருந்தன.

இவ்வாறு உலகளவில் இருக்கும் முஸ்லிம் விஞ்ஞனிகளினதும் கல்விமான்களினதும் பெயர்பட்டியலை அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது கைகளில் வைத்துக்கொண்டு அவர்களை அழித்துவிடுவதற்காகத் தருனம்பார்த்துக் காத்திருக்கின்றன. இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்கள்போன்று அறிவியல் துறையில் முஸ்லிம்கள் முன்னேரினால் மீண்டும் இஸ்லாம் உலகை ஆளும் சக்தியாக மாறும் என்ற அச்சத்தில் எவ்வாறு இஸ்லாமிய அறிவியல் கருவூலங்களை அழித்து அவற்றை மேற்கு நோக்கி நகர்த்தினவோ அதேபோன்று மீண்டும் முஸ்லிம்கள் அறிவியல் துறையில் வளர்ச்சியடையக் கூடாதென்பதிலும் அவர்கள் குறிப்பாயுள்ளனர். என்றாலும் இஸ்லாமியர்களின் அண்மைக்கால அறிவியல் துறை வளர்ச்சி பரந்தளவில் எழுச்சிபெற்று வருகின்றமையை யாராலும் மறுக்கமுடியாது. இதனை மேற்குலகமே வியந்து பார்ப்பதோடு இவ் அறிவியல் எழுச்சிக்கான காரணத்தையும் ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் நடைபெற்ற சர்வதேச பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் (Korea International Women’s Invention Exposition) முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் 12 தங்கப் பதக்கங்களையும் 5 வெள்ளிப் பதக்கங்களையும் 6 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று முதலிடம்பெற்றனர். விஞ்ஞான உலகில் சாதனைபடைக்கும் 25 நாடுகள் இதில் கலந்துகொண்டன.  முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர் மின் உற்பத்தித் திட்டம் (Electricity Generator System) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார். சுற்றுப் புறச் சூழலுக்கு மாசு விளைவிக்காத மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாட்டுக்கு உகந்த முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இது சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.

சோனியா சப்ரீ என்பவரின் பல்வேறு மூலப்பொருட்களின் துணையுடன் உருவாக்கும் நெனோ கம்போஸைட்என்ற கண்டுபிடிப்பு World Intellectual Property Organization (WIPO) என்ற விருதினைப் பெற்றுள்ளது. மர்யம் இஸ்லாமி என்பவரின் எழும்புகள் தொடர்பான நோய் அறுவைச் சிகிச்சை முறைக்கான புதிய தொழில்நுட்பம் International Federation of Inventors’ Associations (IFIA) வின் விருதை வென்றுள்ளது. இவ்வாறு சர்வதேச ரீதியில் முஸ்லிம் பெண் விஞ்ஞானிகளும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.

ஈரானிலும் துருக்கியிலும் NUCLEAR CHEMISTRY, அணு இரசாயனவியல், NUCLEAR ENGINEERING அணுப் பொறியியல் என அணு விஞ்ஞானத்தின் இரண்டு முக்கியத் துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. இதிலுள்ள விஷேசம் என்னவென்றால் இத்துறைகள் பற்றி அமெரிக்காவோ, இஸ்ரேலோ இன்னும் ஆழ்ந்த அறிவைப் பெறவில்லை என்பதுதான்.

அணுப் பொறியியலில் ஈராணும் துருக்கியும் வெளியிட்டுள்ள ஆய்வு வெளியீடுகள் பிற உலக ஆய்வு வெளியீடுகளைவிட 250 மடங்கு அதிகமெனவும் மருத்துவத்துறையிலும் விவசாயத்துறையிலும் அவர்கள் வெளிக்கொண்டுவந்த ஆய்வுகளும் வெளியீடுகளும் உலக சராசரியைவிட 200 முதல் 250 மடங்கு அதிகமெனவும் இப்போதைய ஆய்வுகளின் வேகம் தொடர்ந்தால் 2015ல் ஈராணும் துருக்கியும் அனைத்துத் துறைகளிலும் அமெரிகாவை விஞ்சிவிடும் என்றும் சீனா மட்டுமே இந்த நாடுகளோடு போட்டிபோடும் என்றும் Monitreal Data Base இன் ஆய்வொன்று கூறுகின்றது. இந்த விஞ்ஞான வளர்ச்சியில் தனக்கேற்பட்ட பின்னடைவுகளால் ரஷ்யா இப்போது ஈரானின் நட்பை நாடி நிற்பதோடு விஞ்ஞானத்தில் பின்னடைவை எதிர்நோக்கிவரும் ரஷ்யாவிற்கு நல்ல நண்பர்கள் இவ்விரு நாடுகளும்தான் என அவ்வாய்வு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மலேசியா, ஈரான், துருக்கி போன்ற நாடுகளின் முன்னேற்றம்பற்றிய ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்த அமெரிக்க மத்திய உலவுத்துறை (CIA) தனது அறிக்கையில் இந்நாடுகளின் முன்னேற்றத்திற்கான காரணியைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. இஸ்லாத்தைப் பின் தள்ளிவிட்டு நவீனத்தை எடுத்துக்கொண்ட இஸ்லாமிய நாடுகளால் உருப்படியான எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை. ஆனால் இஸ்லாத்தை சார்ந்திருக்கும் நாடுகள் உண்மையான  விஞ்ஞான வெற்றிகளைக் குவித்துள்ளன.என்கிறது.

மேற்படி CIA  இன் ஆய்வரிக்கையை மீளாய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள் இன்னும் வியக்கத்தக்க ஒரு செய்தியை முன்வைக்கிறார்கள்.

One aspect needs to be understood here. These two countries started developing in the field of creation of knowledge only when they discarded. The so called western approach. For which the society, as such was not prepared. They grew only when they adopted Islam, may be partially

ஓர் உண்மையை நாம் இங்கே புரிந்துகொள்வது அவசியம். சமகால அறிவியல் வளர்ச்சியல் இஸ்லாமிய நாடுகள் எழுச்சியுறத்துவங்கியது அவை மேலைநாடுகளின் அணுகுமுறையைக் கைவிட்டமையால்தான். மேலைநாடுகளின் அணுகுமுறைகள் இந்நாட்டு மக்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நாடுகள் இஸ்லாத்தை அரவனைத்தபோதுதான் வளர்ச்சியடைந்தன. அவை இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றிடாமல் இருப்பதே சிறந்தது.என்கின்றது. (Quoted as reported in Radiance: 9-15 2010)

ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில்
" A CIA report confirmed that , these two countries , apart from china and india, have potential to become global power "
 “CIA இன் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது சீனா, இந்தியா அல்லாமல் இந்த ஈரான், துருக்கி ஆகிய இரு நாடுகளும் உலக வல்லரசுகளாக மாறும் சாத்தியமுள்ளது.

அண்மைக்காலமாக பல துறைகளிலும் இஸ்லாம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரிப்பு, மத்திய கிளக்கில் மக்கள் எழுச்சி, தேர்தல்களில் இஸ்லாமிய இயக்கங்கள் அடைந்துவரும் வெற்றிகள், இஸ்லாத்தை நோக்கி வரும் பிற மதத்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றோடு சேர்ந்து இத்தகைய பாரியதொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் உலக முஸ்லிம்களிடம் எழுச்சியுற்று வருகின்றமை பாரியதொரு எதிர்பார்ப்பினை அனைவர் மத்தியிலும் உருவாக்கியிருக்கின்றது.

குறிப்பு - பெப்ரவரி, 15-29, 2012 எங்கள் தேசம் பத்திரிகையில் எழுதிய கட்டுரை.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...