மற்ற பூச்சிகள்
எல்லாம் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இரையும் இணையும் தேடிச்செல்லும்போது குளவி மட்டும் வெயில் நன்கு உச்சிக்கு
வந்ததன் பின்னர்தான் வெளியே வருகின்றது. “சூரியனைப் பார்க்க எழும்புபவன் சீதேவி, சூரியன் அவனைப்
பார்த்தபின் எழும்புபவன் மூதேவி” இந்தப் பழமொழியை குளவிக்கு ஒப்பிடவேண்டாம். ஏனெனில்
குளவியின் அடி வயிறு பூராகவும் சின்னச்
சின்ன ஃபோட்டோ செல்கள் காணப்படுகின்றன.
நல்ல
வெயிலில்தான் அதற்கு உற்சாகம்
கிளம்பும் ஹோமோன்கள் சுறக்கின்றன.
குளவியின்
பழுப்பு-மஞ்சள் பட்டைகளில்தான் சூட்சுமமே இருக்கிறது. பழுப்பு வரிகள் சூரிய ஒளியை வகிர்ந்து கொடுக்க,
மஞ்சளில் உள்ள நிறமிகள் அதை மின்சார சக்தியாக
மாற்றுகின்றன. பறந்து திரியும்போது தன் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள,
அதனிடம் ஒரு திறன் வாய்ந்த உஷ்ணப் பம்ப் அமைப்பொன்றும் இருக்கிறது. குளவி பற்றி விரிவானதொரு கட்டுரை
எழுதிக்கொண்டிருக்கின்றேன். இடுகையிட்டதும் பார்க்கவும்.
ஆலிப் அலி
(இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...