நல்ல செயலாக இருப்பினும்
குற்றச் செயலாக இருப்பினும் நீதமான, பொறுத்தமான தீர்ப்பு வழங்குவது இவ்வுலகில் சாத்தியமில்லை. நடு நிலையாக நின்று தீர்ப்பு
வழங்கும் நீதிபதிகள் இன்று மிக மிக அரிது. அவ்வாறு இருந்தாலும் கூட வாதத்திறமையினால்
குற்றவாளி நிரபராதியாவதும் நிரபராதி குற்றவாளியாவதும் இன்று சகஜமாகிவிட்டுள்ளது.
கடுமையான குற்றங்களைச்
செய்து சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சில மாதங்களில் பிணையில் வெளிவருகின்றனர். அரசியல்
பலத்தோடு, பண பலத்தோடு குற்றமிழைப்பவர்கள் பாதுகாப்புடன், சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். சிலபோது இவர்களுக்கு சிறைக் கூடங்களே சொகுசான
வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கின்றது. இன்னும்
பலர் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைந்து வாழ்கின்றனர்.
சிறைத் தண்டனை வழங்கியவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பதிலாக அங்குள்ள வேறு
பெரிய பெரிய குற்றம் செய்தவனுடனெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்னும் பல குற்றங்களைப்
பழகிக்கொண்டு வெளியேறுகின்றனர்.
பெரும்பாண்மைக்கு ஒரு நீதி சிறுபாண்மைக்கு ஒரு நீதி, அரசியல் வாதிக்கு ஒரு நீதி பாமரனுக்கு ஒரு நீதி
என நீதி வழங்குவதில் சமத்துவமின்மை நிலவுகின்றது.
இவ்வுலகில் செய்த குற்றச்
செயலுக்கு வழங்கப்படும் தண்டனையில் நியாயமற்ற நிலை காணப்படுகின்றது. ஒரு கொலை செய்தவனுக்கும்
100 கொலை செய்தவனுக்கும் ஒரே தண்டனைதான வழங்க முடியும். இருவருக்கும் ஒரு முறைதான்
மரண தண்டனை நிறைவேற்றவும் முடியும். உண்மையில் இது நியாயமாகாது.
சில போது வழங்கப்படும்
தண்டனைகள் எவ்விதத்திலும் பகுத்தறிவுக்குப் பொருந்துவதில்லை. உதாரணமாக 1993-06-24 இல் ஸ்பைன் நீதிமன்றம் ஒரு கொலைக் குற்றவாளிக்கு 1338 வருட சிறைதண்டனை வழங்கியது.
அதேபோன்று 2010-ளநி.-27 தினக்குரல் செய்தியின்படி பிளிப்பைன்ஸில் ஒரு தந்தை
தன் மகளுடன் ஒரு வருடகாலம் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் 14,400 வருட சிறைதண்டனை வழங்கியது.
கோதமாலா யுத்தத்தில்
201 பொதுமக்களைக் கொன்ற அமெரிக்க இராணுவ வீரருக்கு 6060 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (சத்தியக்குரல் - ஏப்ரல் -2012)
ஒரு மனிதன் 100 வயது வரை வாழ்வதென்பதே நிச்சயிக்க முடியாதவொன்று. அப்படியிருக்க 1000 கணக்கான வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படுவதென்பது எப்படி பகுத்தறிவினால் ஏற்றுக்கொள்ள
முடியும்.
இதையெல்லாம் வைத்து யதார்த்தமாகச்
சிந்தித்தால் நீதமாகவும் பொறுத்தமாகவும் தீர்ப்பு வழங்குவதென்பது இவ்வுலகில் அசாத்தியத்திலும்
அசாத்தியமானதொன்று. ஆனால் மனித உள்ளமோ குற்றத்திற்குத் தகுந்த தண்டனையையோ நற்செயலுக்கு
உகந்த கூலியையோதான் எதிர்பர்க்கின்றது. அதனை சரியான முறையில் வழங்கவே அல்லாஹ் மறுமை
நாளை ஏற்படுத்தி வைத்துள்ளான்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:7,8)
இவ்வுலகில் கொம்புள்ள
ஓர் ஆடு கொம்பில்லாத ஓர் ஆட்டை அநியாயமாகக் குத்திக் கொன்றிருந்தால் நானை மஹ்ஷரில்
அல்லாஹ் அவ்விரண்டையும் எழுப்புவான். கெம்பில்லாததற்குக் கொம்பையும் கொம்புள்ளதன் கொம்மை
இல்லாதாக்கியும் செய்துவிட்டு கொம்புள்ளதை இல்லாததற்குக் குத்திக் கொலைசெய்ய வைப்பான்.
பின்னர் இரண்டையும் மண்ணோடு மண்ணாக அழித்துவிடுவான். (புகாரி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...