"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 April 2012

Inception திரை விமர்சனம்

முதலாவது காட்சியில் கதாநாயகன் கோப் (Cobb) ஒரு கடற்கரையில் வீழ்ந்து கிடக்கிறார். எழுந்து பார்த்ததும் இரண்டு பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சற்று நேரத்தில் ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கியால் அசைத்து கொப்பை அதட்டுகின்றான். இடுப்பில் துப்பாக்கி. ஒரு வயது முதிர்ந்தவரிடம் கொப் இழுத்துச் செல்லப்படுகின்றார். அவரிடம் அத்துப்பாக்கியும் பம்பரம் போன்ற இன்னுமொரு பொருளும் ஒப்படைக்கப்படுகின்றது. அதனைப் பார்த்துவிட்டு அவர் கேட்கும் முதல் கேள்வி “Are you here to kill me?” இக்கட்டம் நடப்பது ஒரு கனவில். இதன் விளக்கம் படத்தின் இறுதியில்தான் லின்க் ஆகின்றது.

கனவு… கதாநாயகன் கொப்பின் தொழில் பிறரது கனவுகளில் நுழைந்து முக்கிய விஷயங்களைத் திருடுவது. அத்தோடு ஏழவே இருக்கும் மனப் பதிவுகளை அழித்துவிட்டு வேறு பதிவுகளை உருவாக்கி அவர்களது போக்கையே மாற்றிவிடுவது. இதற்காக கோப்புடன் ஒரு டீமே செல்படுகிறது.

ஒவ்வொரு மனிதனின் மனதிலும், ஒவ்வொரு விதமான ஆளுமை பதிந்துள்ளது. அந்த ஆளுமையின் விளைவாகக் கனவுகள் நேர்கின்றன.  இக்கனவுகளில், பல சமயம், நம்முள் ஒரு எண்ணம் விதைக்கப்படுகின்றது. நம்மையறியாமல் நம் மனதில் விதைக்கப்பட்ட இந்த எண்ணம், சிறிது சிறிதாக நமது செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது. இந்த அடிப்படைக் காரணத்தை நோக்கியே, நாம் மெதுவாக நமது முடிவுகளை மாற்றியமைக்கத் தொடங்குகிறோம். அதுவே நமது லட்சியமாக மாறிப்போகிறது. அந்த லட்சியம், நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. எனவே ஒருவரது வாழ்க்கையை உயர்த்தவும் இன்னொருவரது வாழ்க்கையைத் தாழ்த்தவும் கோப் இத்திரைப் படத்தில் கனவைப் பயன்படுத்துகின்றான்.

ஸைடோ என்பவர் ஒரு பெரும் வியாபாரப் புள்ளி. அவருக்குப் போட்டியாக வியாபாரத்தில் குதித்திருப்பவர்தான் ரொர்ட் பிஸ்ச்சர். ஸைடோ கதாநாயகன் கோப்பை இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு உட்படுத்தி கோப் மூலம் தனது எண்ணத்தை சாதிக்க முயற்சிக்கின்றான். அதாவது தனக்குப் போட்டியாக உள்ள பிஸ்ச்சரின் மனதில் நுழைந்து அவனிடமுள்ள வியாபார வேட்கையை அழித்துவிட்டு, அவனது மனதில், தனது நிறுவனத்தை இழுத்து மூடும் எண்ணத்தை விதைக்க வேண்டும். அல்லது வேறு எண்ணத்தைப் புதைக்க வேண்டும். அப்டிச் செய்தால் கோப்பிற்கு அவனது குழந்தைகளோடு சேர்ந்துகொள்ள உதவுவதாகவும் ஸைடோ கூறுகின்றார்.

முதலாவது காட்சியில் கடற்கரையில் இரு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்களே அதுதான் கோப்பின் குழந்தைகள். இவர்கள் கோப்பின் மனதில் வெகுவாகப் பதிந்துவிட்டுள்ளனர். எனவே கோப் கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் நுழைந்தாலும் அங்காங்கு கோப் இவர்களைக் காண்கின்றான். இக்குழந்தைகள் மட்டுமன்றி கோப்பின் மனைவி மோலும் அடிக்கடி கோப்பின் கனவுலகத்தில் சஞ்சரிக்கிறாள். என்ன காரணம்…

கனவுக்குள் ஊடுருவும் அற்புதத்தை முதலில் கோப் தனது மனைவி மோலை வைத்தே பரீட்சித்துப் பார்க்கின்றாள். ஒரு ரயில் தண்டவாளத்தில்….. அதிலிருந்த உண்மையான உலகுக்கு மீண்டும்கூட மோலினால் இது உண்மையான உலகம் தான் என்பதை ஊகிக்க முடியாது போகின்றது. அது அவளை ஒரு மனநோயாளியாக மாற்றுகின்றது.

கனவுலகத்திலிருந்து மீளவேண்டுமானால் ஒரு Kick தேவைப்படுகின்றது. அதற்குப் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். மோல் தான் இருப்பது ஒரு கனவில் என்று நினைத்துக்கொண்டு நிஜ உலகுக்குப் போவதற்காக ஒரு மாடியிலிருந்து கீழே குதிக்கிறாள். இறந்துவிடுகிறாள். கோப்தான் மோலைக் கொலைசெய்ததாக குடும்பத்தினர் நினைத்துக்கொண்டிருப்பதால் தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியாது கோப் தவிக்கிறான். இந்நிலையில்தான் ஸைடோ கோப்பினூடாக தனது காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார்.

கோப்பும் விடயத்திற்கு ஒப்புக்கொண்டு காரியத்தில் இறங்குகின்றனர். கனவுக்குள் ஊடுருவும்போது புறச் சூழலை உண்மையானது போன்று வடிவமைக்கவும் வேண்டும். ஒரு நாடகத்தை ஒத்திகை பார்த்துவிட்டு அதனை அரங்கேற்றுவது போன்று. எனவே புறச் சூழலை மெய்நிகர் வடிவில் வடிவமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவி ஆர்க்கிடெக்ட் அரியாட்னியைக் கோப் பயன்படுத்துகின்றான். அரியாட்னியை கனவுக்குள் அழைத்துச் சென்று கற்றுக்கொடுகின்கின்றான்.

படிப்படியாக புறச் சூழலை அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு வடிவமைக்கின்றனர். வடிவமைப்பில் தவறுவிட்டதால் கனவின் ஒரு கட்டத்தில் தண்டவாளத்தில் செல்ல வேண்டிய ட்ரைன் நடு ரோட்டில் ஓடிவரும். அங்குள்ள ஆட்கள் அனைவரும் Projection ஆல் உருவாக்கப்பட்டவர்கள்.

அனைத்துத் திட்டங்களும் சரி. தற்போது டீம் களத்தில் குதிக்கப்போகின்றது. பிஸ்ச்சர் விமானத்தில் செல்லும் நேரம்தான் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மயக்க மருந்தை பிஸ்ச்சரிற்குக் கழந்து கொடுத்து அவனை மயக்கமாக்கி அவனது கனவிற்குள் நுழைகின்றனர் டீம்.

இங்கு நேரம் மிக முக்கியம். நிகழ்காலத்திற்கும் கனவில் உள்ள காலத்திற்கும் நேரப்படி வித்தியாசம் உண்டு. நிகழ்காலத்தில் ஐந்து நிமிட  நேரம் என்றால், கனவில் அது  ஒருமணி  நேரம்.  இது ஏனெனில், கனவில், நாம் எத்தகைய பரிமாணத்தையும் கடக்க இயலும் என்பதால், இந்த நேர வித்தியாசம் நேர்கின்றது. உதாரணமாக கருந்துளையில் சிக்கினால் அங்கு ஒரு வருடம் சென்றாலும் வயது ஏறாது. ஆனால் பூமியில் அதற்கு நேர் மாற்றமாக இருக்கும். இதுபோன்றுதான் கனவிலும்.

விமானம் செல்லும் நேரம், பத்து மணி நேரம். ஆகவே, ஃபிஸ்ச்சரின் கனவில் தாங்கள் ஊடுரூவும் வேலையை, இரண்டாகப் பிரிக்கிறார்கள் காப் அணியினர். அதாவது, இந்த எண்ணம் ஃபிஸ்ச்சரின் மனதில் விதைக்கப்படுவதற்கு, ஒரு வாரம். அடுத்து, அந்த எண்ணம் செயல்பட ஆரம்பிப்பதற்கு, பத்து வருடங்கள். அதாவது, கனவுக்குள் நிகழும் காலம் இது. நிகழ்காலத்தில், பத்து மணி நேரத்தில் விமானம் பயணித்து நிற்பதற்குள், இக்காரியம் முடிந்து, அவரவர்கள் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.

அதேபோல், இன்னொரு விஷயம் என்னவெனில், வழக்கமாக, கனவுகளில் பயணிக்கும்போது மரணம் நேர்ந்தால், நிகழ்காலத்தில் நாம் கண் விழித்துக் கொள்ளலாம். வேறு ஒன்றும் ஆகாது. ஆனால், இங்கு கனவுலகிற்குள் செல்வது செயற்கையாக இயங்திர, மருந்து உதவிகளுடன் என்பதால் ஃபிஸ்ச்சரின் கனவில் இருக்கையில் மரணம் சம்பவித்தால், நிகழ்காலத்துக்கு வர இயலாது. அதற்குப் பதில், அண்டவெளியில் உள்ள கருந்துளை போன்றதொரு கனவு உலகில் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அதில் இருந்து வெளிவருவதற்கு, பல்லாண்டுகள் ஆகக்கூடும். காப்பின் டீமைச் சேர்ந்தவர்களுக்கு, இவ்வுண்மை சொல்லப்படுவதில்லை. காப்புக்கும், ஆர்க்கிடெக்டான அரியாடினுக்கும் மட்டுமே இவ்வுண்மை தெரியும்.

கனவுலகில் வைத்து ஸைடோவும் பிஸ்ச்சரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்துவிடுகின்றனர். எனவே இருவரும் கருந்துளைபோன்ற கனவுலகில் மாட்டிக்கொள்கின்றனர். இருவரையும் காப்பாற்றிவதற்காக அரியாடினியும் கோப்பும் கனவுலகத்திற்குள் நுழைகின்றனர். அரியாடினி பிஸ்ச்சரை மீட்டிக்கொண்டு செல்கின்றாள். கோப் ஸைடோவைத் தேடும் போதுதான் கடற்கரையில் அடித்துவரப்பட்டு ஒரு வயதான மனிதரிடம் ஒப்படைக்கப்படுகின்றான். அந்த முதலாவது காட்சியில் வரும் மனிதன்தான் இந்த கடைசிக் கட்டத்தில் கோப் தேடிவரும் ஸைடோ.

திட்டம் அழகாக நிறைவேறுகிறது. இறுதியில் விமான நிலையத்திலிருந்தே அனைவரும் வீடுகளுக்குச் செல்கின்றனர். கோப் பிள்ளைகளைக் காண்கின்றான்.

சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராக அறியப்படும் க்ரிஸ்டோஃபர் நோலனின் தயாரிப்புதான் இந்த INCEPTION திரைப்படம். ஆரம்பம் என்று பொருள். கனவுலகத்துடன் தொடர்பு படுத்தி கனவுகளுக்கே வித்தியாசமானதொரு வரைவிலக்கனம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படித்தான் நோலனின் கற்பனையில் உதித்ததுவோ? ஏனெனில் படத்தைப் பார்க்கும்போதே மண்டை குழம்பிப் போகின்றது. நான் உளவளத்துணையில் டிப்லோமாக் கற்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றேன். இத்திரைப்படமும் உளவியலோடு தொடர்புபட்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டும் என்று எண்ணினேன். அதனடிப்படையிலே இத்திரைப் படம் பற்றி இங்கு பதிவிடுகின்றேன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)முதலாவது காட்சியில் கதாநாயகன் கோப் (Cobb) ஒரு கடற்கரையில் வீழ்ந்து கிடக்கிறார். எழுந்து பார்த்ததும் இரண்டு பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சற்று நேரத்தில் ஒரு இராணுவ சிப்பாய் துப்பாக்கியால் அசைத்து கொப்பை அதட்டுகின்றான். இடுப்பில் துப்பாக்கி. ஒரு வயது முதிர்ந்தவரிடம் கொப் இழுத்துச் செல்லப்படுகின்றார். அவரிடம் அத்துப்பாக்கியும் பம்பரம் போன்ற இன்னுமொரு பொருளும் ஒப்படைக்கப்படுகின்றது. அதனைப் பார்த்துவிட்டு அவர் கேட்கும் முதல் கேள்வி “Are you here to kill me?” இக்கட்டம் நடப்பது ஒரு கனவில். இதன் விளக்கம் படத்தின் இறுதியில்தான் லின்க் ஆகின்றது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...