"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

14 June 2012

பிறவிக் குருடனும் புத்தரும்

புத்தர் ஒரு மாபெரும் தர்க்க வாதியாக இருந்தார். அவரை தர்க்கத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. அதனால் இந்து சாமியார்களால் அவரது கருத்துக்களை பொய் என்று நிரூபிக்க முடியவில்லை. புத்தர் தன் பிரச்சாரத்தை மேற்கொண்ட வழியில் ஒரு கிராமத்தில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவன் வெளிச்சமே இல்லை என்று வாதம் செய்தான். அவனை அந்த ஊரில் யாராலும் வெல்ல இயலவில்லை. வெளிச்சத்தை என் கையில் கொடுங்கள், அதை நான் சுவைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னான். இதனால் யாரும் அவனை ஜெயிக்க முடியவில்லை.

புத்தர் அந்த வழியே வரும் செய்தியை கேட்டு அந்த குருடன் ஆனந்தமடைந்தான். புத்தர் பற்றி கேள்விப் பட்டிருந்த அவன் புத்தரை தர்க்கத்தில் வென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டான்.

புத்தர் அந்த கிராமத்திற்கு சென்ற உடனே அவரை வரவேற்ற கிராம மக்கள் அந்த குருடனைப் பற்றி சொன்னார்கள். அவனை வாதத்தில் ஜெயிக்க முடியவில்லை என்றும் சொன்னார்கள். உடனே புத்தர் அந்த குருடனை அழைத்து வரச் சொன்னார். அவன் ஒரு பிறவிக்குருடன் என்பதை அறிந்து கொண்ட அவர் இவனுக்கு தேவை தர்க்கம் அல்ல வைத்தியம் என்று கூறி அவனை தனது வைத்தியரிடம் அனுப்பி வைத்தார்.

அந்த வைத்தியர் மூன்று மாத சிகிச்சை அளித்ததில் அவனுக்கு பார்வை கிட்டியது. அந்த குருடன் புத்தரை வாயார புகழ்ந்தான். தன்னோடு வாதம் செய்தவர்கள் யாரும் இதைச் செய்யவில்லை என்று கூறினான்.

...ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து...
குறிப்பு : ஈமெயிலில் கிடைத்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...