சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பின் வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில்
காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்றுசேர்ந்தே அணுக்களும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின
என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள்
உருவாகின அல்லது சந்திரன்,
பூமி, சூரியன், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், விண்
பொருட்கள், இன்னும் என்னென்னவோ மர்மங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்போது? எப்படி? என்பதுதான்
பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி.
இதற்கான விடையை இரண்டு விஞ்ஞானிகள்
தமது கோட்பாடுகளை முன்வைத்ததன் மூலம் கண்டுகொள்ள முடியுமான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
ஒருவர் இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக் மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த சத்யேந்திர
போஸ். அணுக்கள் கிரகங்கள் உருவாவதற்குக் காரணமாயிருந்த ஆற்றலையும் ஆரம்பத்தில் இருந்த
துகள்களையும் கண்டறிந்தால் மேற்சொன்ன கேள்விக்கான பதிலையும் கண்டுகொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடே “ஹிக்ஸ் போசன்” எனும் கடவுளைக் கண்டறியும் ஆராய்ச்சி.
ஹிக்ஸ் போசன் என்ற
பெயர் இப்படித்தான் வந்தது. இந்தத் துகள்
இருப்பதாக முதலில் சொன்ன பீட்டர் ஹிக்ஸ் இன் பெயரில்
பாதியை ஹிக்ஸ் என்றும், இந்தத் துகள்களில் இரண்டு வகை இருக்கிறன என கூறிய இயற்பியல் அறிஞர் சத்யேந்திர நாத் போஸும், விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
தெரிவித்திருந்தனர். அதனால் அவர்கள் பெயரை இணைத்து ஹிக்ஸ் போஸான் என இதற்குப் பெயர் சூட்டினர்!
இக்கோட்பாடு 45 ஆண்களைக் கடந்திருப்பினும்
எந்த கண்டுபிடிப்புகளும் நிகழவில்லை. ஆரம்பத்தில் இதில அமெரிக்க விஞ்ஞானிகள் களமிறங்கிச்
செயற்பட்டனர். ஆனால் அவர்களால் எந்த அடைவையும் அடைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் ஐரோப்பிய
நாடுகள் இதில் இணைந்தனர். அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகம்.(CERN)
ஜெனீவா நகருக்கு அண்மையில் மேல்நிலப் பரப்பிலிருந்து 300 அடி ஆழத்தில் 27 கி.மி. நீளத்துக்கு
ஒரு வட்டச் சுரங்க ஆய்வு நிலையத்தை (Large
Hadron Collider-LHC) அமைத்து
ஆய்வுகளைத் துவங்கியது. சுரங்கத்தின் இரு பகுதிகளாலும் ஒளியின் வேகத்தில் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் செலுத்தி
அதனை மோதச் செய்வதனூடாக பிரபஞ்ச உருவாக்கத்திற்குக் காரணமாயிருந்த அந்த நுண் துகளைக்
கண்டறிவதே இந்த ஏற்பாடு.
இத்தகைய தொடர்ச்சியான ஆய்வுகளின்
பின் கடந்த வாரம் “ஹிக்ஸ் போசன்” துகளைக் கண்டறிந்துவிட்டதாக ஆய்வுக்குழு அறிவித்திருந்தது.
இந்த செயற்கைப் பெருவெடிப்பின்போது, 125.3 ஜிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் உடைய துகளை
அவர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். இத்துகளே ஹிக்ஸ் போசனாக
இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு
என்ற போதிலும், இது தொடக்கம்தான் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.
''இயற்கையைப் புரிந்துகொள்வதில் இது ஒரு மைல்கல். இந்தத் துகள் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் பிறந்த கதை சூடுபிடித்து உள்ளது'' என்கிறார் ஐரோப்பிய அணு ஆய்வுக் கழக இயக்குநர் ஹுயர்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
1 comments:
நல்லதொரு தகவல் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...