"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

24 September 2012

கருவறை முதல் கற்றுக்கொடுங்கள்

அநேகமான பெற்றோர் குழந்தை பிறந்ததன் பின்புதான் அக்குழந்தைக்கும் தமக்குமிடையிலான உறவைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஆனால் இவ் உறவு கருவறை முதலே ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்பதுவே உண்மை. கருவறையிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியிலும் முதிர்ச்சியிலும் பெற்றோரின் மனநிலை செல்வாக்குச் செலுத்துகின்றது. அதிலும் குறிப்பாக தாயின் மனவெழுச்சிகள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பல்வேறு தாக்கங்களைச் செலுத்துகின்றன.

கருவிலிருக்கும் குழந்தை தாயின் ஒரு அங்கமாகக் காணப்படுவதால் தாயை ஆட்கொள்ளும் இன்பம், துன்பம், கவலை மற்றும் அச்சம் என்பன மூளையிலிருந்து தாயின் உடல் முழுதும் கணத்தாக்கங்களாகப் (Impulses) பறிமாற்றப்படுகின்றன. இதன்போது தாயின் ஒரு அங்கமாக இருக்கும் குழந்தைக்கும் அது கடத்தப்படுவது இயல்பானதே! எனவே தாயின் மகிழ்ச்சியை உணர்ந்து குழந்தையும் மகிழ்கிறது. தாய் அச்சத்திற்கோ கவலைக்கோ ஆட்பட்டால் குழந்தை அதனை இருக்கமாக உணர்கின்றது. அத்தோடு உயர்ந்த சப்தங்கள், அதிர்வுகள், தாயின் அடிவயிற்றில் படும் ஒளி, குரலோசை மற்றும் இதயத் துடிப்பு என்பவற்றுக்கும் குழந்தை எதிர்வினைபுரிகின்றது.

கருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத் துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும். கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும். முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச் சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும். ஏழாம் மாதமாகும்போது சூழலை நன்கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும். இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.

எனவே கருவுற்ற ஆரம்பம் முதலே வெளியில் இருக்கும் நாம் குறிப்பாகக் கர்ப்பிணித் தாய்மார் தாம் பெற்றெடுக்க ஆவலுடன் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி, விருத்திகளைக் கருத்திற்கொண்டு செயற்படல் வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாயின் வயிற்றிலிருந்தே ஆரம்பிக்கின்றது. மேலும் அவ்வளர்ச்சி ஊட்டச் சத்துக்களாலும் சூழலினாலும் பெற்றோரின் மனநிலைகளாளும் நெறிப்படுத்தப்படுகின்றது. இதனால் குழந்தையின் மூளையில் உள்ள நரம்புக்கலங்கள் (Neurons) இன்னும் சிறப்பாக வளர்ச்சியடைகின்றன. நரம்புக்களங்களின் இத்தகைய வளர்ச்சியின்போது தாயினதும் சேயினதும் உறவு வலுப்பெறல் வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை இங்கு குறிப்பிடுகின்றேன்.

குழந்தையோடு உறவாடுங்கள்.
நாம் பேசுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நாம் பேசும்போது அதனைக் குழந்தை செவியுறுகிறது. நாம் அன்பாக பாசத்தோடு ஏற்ற இறக்கங்களோடு கதைக்கும்போது வெளிப்படும் உணர்ச்சியை அதனால் புரிந்துகொள்முடியும். எனவே பல விடயங்களையும் உங்கள் குழந்தையுடன் கதையுங்கள்.

என்ன செய்கிறீர்கள் என்று, என்ன செய்யப் போகிறீர்கள் என்றெல்லாம் கூறுங்கள். தூங்கச் செல்லும்போது அன்றைய நாள் குறித்து கதையுங்கள். எங்கெல்லாம் சென்றீர்கள் என்று கூறுங்கள். வீர வரலாறுகளையும் சரித்திரங்களையும் சப்தமிட்டுப் படியுங்;கள். ஒழுக்கப் பண்புகள் குறித்துப் பேசும் நூட்களையும் படியுங்கள். இச்செயற்பாடுகள் உங்களுக்கும் உங்கள் சிசுவுக்கும் இடையில் பலமானதொரு பிணைப்பைக் கட்டியெழுப்பும்.

பல பெற்றோர் குழந்தை பிறந்த பின்னர்தான் குழந்தைக்குப் பெயர் தேட ஆரம்பிக்கின்றனர். நவீன ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் கருவறையில் இருப்பது ஆணா, பெண்ணா என்று அறிந்துகொள்வது இன்று மிக எளிதாகியுள்ளது. அதனை அறிந்ததிலிருந்து அக்குழந்தைக்குப் பெயர் சூட்டி அழையுங்கள். அடிக்கடி அப்பெயரைச் சொல்லி அழையுங்கள். தாலாட்டுப்பாடல்களை கருவறையிலிருக்கும்போதே பாடுங்கள். குழந்தை பிறந்ததன் பின்னரும் அதே பாடல்களைப் பாடுங்கள். அவர்கள் அதனைச் செவியுறுவார்கள்.

கருவறை முதலே கற்றுக்கொடுங்கள்.
ஒழுக்க விழுமியங்களைக் கருவறை முதல் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள். நீங்கள் பிறருடன் உறவாடும்போதும் இதனைக் கருத்திற்கொண்டு உங்கள் வார்த்தைப் பிரயோகங்களை நல்ல முறையில் அமைத்துக்கொள்ளுங்கள். கெட்ட, தீய வார்த்தைகளை முழுமையாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள். தூங்கும்போதும் தூங்கி எழும்போதும் ஓதும் துஆக்களைச் சப்தமிட்டு ஓதுங்கள். அதுவல்லாத  பிற சந்தர்ப்ப துஆக்களையும் குழந்தை கேட்கும் வண்ணம் சப்தமிட்டு ஓதுங்கள். அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். காலையிலும் மாலையிலும் உங்கள் குழந்தைக்கு ஸலாம் கூறுங்கள். பிறருடன் ஸலாம் கூறிக் கதைப்பதை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் ஸலாம் கூறுவது உங்கள் இருவருக்கிடையிலும் அன்பை அதிகரிக்கச் செய்யும் என்பது நபிமொழி.

இதுபோன்ற சிறு சிறு விடயங்களைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது போன்று நீங்களும் அதிகமான விடயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இதுவும் குழந்தையின் மூளைக் களங்களின் வளர்ச்சிக்கு உறமாகும். குழந்தை வயிற்றிலிருக்கும் பத்து மாத காலமும் தாய் அறிவுபூர்வமான விடயங்களை அதிகம் கற்பதாலும் பேசுவதாலும் குழந்தையை அறிவாளியாக்கலாம் என்பது ஆய்வுகளின் முடிவு.

உலகில் யூதர்கள் அறிவியலில் முன்நிலை வகிப்பதற்கு என்ன காரணம் என்று மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் குழந்தை கருவறையில் இருக்கும்போது அத்தாய் புதிராhன கணக்குகளைத் தீர்ப்பதில் அதிகம் ஈடுபடுவதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே கருவில் உள்ள சிசுவிற்குக் கற்றுக்கொடுப்பதோடு நீங்களும் கற்றல் விடயங்களில் அதிக ஈடுபாடுகாட்டுங்கள். உங்கள் குழந்தையையும் ஜீனியஸாக்கலாம்.

அடிவயிற்றை மெதுவாகத் தடவிக்கொடுங்கள்
இப்பருவத்தை குழந்தை அடைகையில் அதன் மூளையின் கோர்டெக்ஸ் பகுதி வளர்ச்சியுற்றிருக்கும். எனவே அது அம்னியோடிக் பாய்மத்தில் மிதந்துகொண்டிருப்பினும் வெளிப்புறமிருந்து வரும் தொடுகை உணர்ச்சியை உணர்ந்துகொள்ளும். எனவே நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அன்போடு அடிவயிற்றைத் தொட்டுத் தடவிவிடுங்கள். அடிவயிற்றில் விழும் வெளிச்சத்திற்கும் குழந்தை சிலபோது துலங்களைக் காட்டும். குழந்தையின் தந்தையையும் இதில் பங்குகொள்ளச் செய்யுங்கள். அத்தோடு வேறு சிறிய பிள்ளைகளும் உங்களுக்கு இருந்தால் அவர்களையும் இவ்விடயத்தில் பக்குவமாக வழிநடாத்துங்கள்.

வயிற்றில் உள்ள குழந்தைக்கு உங்களது மற்ற பிள்ளைகளையும் இவர்களுக்கு கருவறையில் உள்ள குழந்தையையும் அறிமுகப்படுத்தி வையுங்கள். அநேக பிள்ளைகள் தமக்குக் கிடைக்கும் அன்பைப் பங்குபோட, தமது விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாட இன்னுமொருவர் வருவதை விரும்பமாட்டார்கள். எனவே இச்செயலானது புதிதாக வர இருக்கும் குட்டி விருந்தாளி மீது உங்கள் பிள்ளைகளிடத்தில் அன்பை வளர்க்கும். அவரது வருகையின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். விருந்தாளியின் வரவை ஏற்று அங்கீகரிக்க உங்கள் பிள்ளைகள் உளரீதியாகத் தயாராய் இருப்பார்கள்.

ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு. கர்ப்பினிப் பெண் ஒருவரை ஒரேவகையான பிஸ்கட்டுகளை அதிகமாக உண்ணச் செய்திருக்கின்றனர். குழந்தை பிறந்து சில நாட்களில் அதே வகை பிஸ்கட்டை குழந்தையின் மூக்கினருகில் வைத்தபோது குழந்தை ஆரம்பத்தில் பெற்ற அனுபவத்திற்கு ஏற்ப அதற்கு இசைவான துலங்களைக் காட்டியுள்ளது. கருவறையில் உள்ள குழந்தை மனம், சுவை, சப்தம், தொடுகை உணர்ச்சி என்பவற்றுக்குப் பழக்கப்படும்போது குழந்தை பிறந்தாலும் அவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதாக அவ்வாய்வின் முடிவு வெளியிடப்பட்டது. எனவே தந்தையையோ பிள்ளைகளையோ குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் அடிவயிற்றைத் தொடும்படி செய்வதால் குழந்தைக்கு இவர்கள் பற்றிய முன் அனுபவம், அறிமுகம் கிடைக்கின்றது. இந்த உணர்ச்சி உங்கள் கருச் சிசுவைப் பரவசப்படுத்தும். குழந்தை பிறந்தபின்னும் இவர்களது தொடுகைக்கு இசைவடையும்.

அல்குர்ஆனைச் செவியுறச் செய்யுங்கள்
தாளம், இராகம், சுருதி என்பவற்றைக்கொண்ட இதமான மெல்லிசை குழந்தையின் மூளை விருத்தியைப் பல வழிகளிலும் துண்டுவதோடு அதற்குக் குழந்தை அமைதியடைவதாகவும் அறியப்பட்டுள்ளது. உங்களது குழந்தைகளை இசையைவிடவும் இனிமையான அல்குர்ஆன் கிராஅத்களைக்  கேட்கச் செய்யுங்கள். அழகாக, இதமாக அல்குர்ஆனை நீங்களும் ஓதுவதோடு யாராவது ஒருவரது கிராஅத்தைத் தொடர்ந்தும் கேட்கச் செய்யுங்கள். குழந்தை பிறந்தபின்பும் அதே கிராஅத்தைத் தொடர்ந்து கேட்கச்செய்யுங்கள். இதனால் குழந்தை அல்குர்ஆனை எளிதில் மனனம்செய்யவும் வாய்ப்புண்டு.

குழந்தையோடு விளையாடுங்கள்
குழந்தை நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் பிரசவத்திற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு இதனைச் செய்துபார்க்கலாம். மெதுவாக அடிவயிற்றில் அமத்துங்கள். பதிலுக்கு குழந்தையும் சிறிய உதைகளைத் திருப்பித்தரும். சில தடவைகள் தொடர்ந்து செய்யுங்கள். பின்பு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்பு செய்துபாருங்கள். குழந்தை உங்களோடு விளையாடத் தயாராகும்.

மொபைல்போன் பாவிப்பதைத் தவிர்ந்துகொள்ளுங்கள்
28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது சிறுவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் அதேபோல் 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றி சேகரிக்கப்பட்ட விவரங்களையும் வைத்து ஆராய்ந்தபோது கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டமை தெரிய வந்தது. எனவே கர்ப்பிணி பெண்கள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அறியக்கிடைத்துள்ளது. எனவே மொபைல்போன் பாவிப்பதைவிட்டும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமான எனது ஆக்கம்
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சிறப்பான பகிர்வு... மிக்க நன்றி...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...