"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 January 2013

எனது முதல் நூல்: படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்

நூல்: படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்
நூலாசிரியர்: அஷ்ஷெய்க் ஆலிப் அலி (இஸ்லாஹி)
அணிந்துரை: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி)
வெளியீடு: இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையம்
பக்கங்கள்: 95 + X

இது எனது முதலாவது நூல். பல சஞ்சிகைகளிலும் பல பத்திரிக்கைகளிலும் பல ஆக்கங்களை எழுதியிருந்தாலும் எனது படைப்புகள் நூலுறுப் பெறுவது இதுதான் முதற் தடவை. அதற்காக அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி கூறுகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

நான் க.பொ.த. சாதாரண தரம் (O/L)  கற்கும் நாற்களில் தான் எனது எழுத்துக்கள் அச்சேறத்துவங்கின. அதற்கு முன் எனது ஆக்கங்கள் அனைத்தும் பாடசாலைச் சுவர்ப்பத்திரிகையில் மட்டுமே தஞ்சம்கிடந்தன. முதல் ஆக்கம் அரங்குக்கு வந்ததுமே இன்னும் இன்னும் இன்னும் எழுதவேண்டும் என்ற  உத்வேகம் உள்ளுக்குள் பிரளயமானது. அது முதல் எழுதினேன். இன்று ஒரு நூலையும் வெளியிட என்னால் முடிந்ததையிட்டு அடக்கத்துடன் ஆனந்தமடைகின்றேன்.

தொடர்ச்சியாக அகரம் சஞ்சிகையில் பிரசுரமாகிய ஆக்கங்களில் இருபது ஆக்கங்களைத் தெரிவுசெய்து இங்கே நூலுறுப்படுத்தியுள்ளேன். இம்மாதம் (ஜனவரி) 14ம் திகதி இஸ்லாஹிய்யாவில் எமக்கான பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மறுநாள் கொழும்பு மேமன் மண்டபத்தில் இஸ்லாஹிய்யாவின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவும் கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் எனது நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றதையிட்டு மும்மடங்கு மகிழ்ச்சியடைகின்றேன்.

இத்தகைய தலைப்பில் நூல் எழுதப்பட்டமைக்கான நோக்கத்தை இதனை வாசிக்கும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். இதனை வெளியிடுவதில் உதவிபுரிந்த இஸ்லாஹிய்யாவின் வெளியீட்டு மையம் உற்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது எழுத்துப் பணி மென்மேலும் தொடர வாசகர்கள் உங்களது ஒத்துழைப்பையும் பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்றேன். ஜஸாகுமுல்லாஹு கைரன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

fathima said...

fathima...........
alhamdulillah..........
umathu muyatchi ivvalavu viraivaha munneriyathai ittu perumitham kolgiren.....
allahvin aasiyoduumathuentha muyatchium tholviperamal ithu pol panmadangu vetri kana vendum....... aaameeen....

M.I.M.Waffa(Gafoori) said...

masha allah......

உமது கன்னி முயற்சி உண்மையில் பாராட்டக்கூயது...... புத்தகத்தின் தலைப்பை பார்த்த மாத்திரத்திலேயே வாசிக்கத் தூண்டியது.... வாசித்த போது உமது மெழிநடை அருமையாக இருந்தது... ஒவ்வெரு அத்தியாயத்திற்கும் நீர் இட்ட தலைப்பு மேலும் வாசிக்கத் தூண்டியது....நாளைய எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் என்பார்கள்....நாத்திகக் கொள்கைகளையும் இறை மறுப்புக் கொள்கைகளையும் தகர்க்கும் வகையில் உமது எழுத்து மேலும் வளர வேண்டும்...ஆமீன்

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...