"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 June 2013

உமர் (ரழி) அவர்களின் பணிவு

இந்தியாவில் நீதியான ஆட்சி வேண்டுமா? உமரின் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்” (மஹாத்மா காந்தி)

ஒரு முறை கலீபா உமர் (ரழி) அவர்களும் அவரது தோழர் ஒருவரும் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது முன்னால் வந்த ஒரு முதிய பெண்மனி உமர் அவர்களை எதிர்கொண்டார். அப்பெண்மனி கலீபா உமர் அவர்களிடம்

ஏ உமரே! நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? ஒரு காலத்தில் உனது பெயரை அம்ர்என்று அழைத்தாய், பின்னர் உமர்என்று ஆக்கிக்கொண்டாய், தற்போது அமீருல் முஃமினீன்என்று அறிமுகப்படுத்துகிறாய். இவ்வாறெல்லாம் மாற்றி மாற்றி அழைக்க யார் சொல்லித்தந்தது?” என்று கேட்டுவிட்டார்.

சற்றும் முகம் சுழிக்காது அவர் கூறுவதையே செவிதாழ்த்திக் கேட்டுக்கொண்டுடிருந்தார் உமர். பக்கத்தில் இருந்த தோழருக்கோ கோபம் வந்துவிட்டது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரிடம் இப்படியா பேசுவது என்ற சினத்தில் நீர் யாருடன் பேசிக்கொண்டிருக்கின்றீர் என்று தெரியுமா?” என்று அப்பெண்மனியைக் கேட்டுவிட்டார் தோழர்.

உடனே உமர் அவர்கள் தம் தோழரை கையமர்த்தவிட்டு இதோ இப்பெண்மனியின் பேச்சை ஒரு சமயம் பிரபஞ்சத்தின் படைப்பாளன் அல்லாஹ்வே கேட்டுக்கொண்டிருந்தான் என்றால் இந்த உமர் எம்மாத்திரம்? நீர் அமைதியாக இரும். அவர் பேசட்டும்என்றார்.

அப்பெண்மனி யார் தெரியுமா? தனது கணவன் விடயத்தில் நபியவர்களிடம் வந்து முறையிட்டபோது

قَدْ سَمِعَ اللَّـهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّـهِ وَاللَّـهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّـهَ سَمِيعٌ بَصِيرٌ

நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் – மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:01)

என்ற வசனத்தை அல்லாஹ் உடனே இறக்கிவைத்தானே அந்த ஸஹாபிப் பெண் கவ்லா பின்த் ஸஃலபாஎன்பவர்தான் அம்முதிய பெண்மனி. இந்த சம்பவத்தை வைத்துத்தான் உமர் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்தும் செவிதாழ்த்தி நின்றார்கள்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

fathima said...

intraiya arasiyal thalaivarhaluku nalla padippinaiyaha amaiyattum

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...