"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 August 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தலின் பின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எர்துகான் மக்கள் முன் ஆற்றிய முதல் உரை.

இந்தத் தேர்தலில் எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரைக்கும், எனக்காக பிரார்த்தித்த, தங்களது வாக்குகளை உரிய முறையில் வழங்கிய அனைத்து துருக்கியருக்கும் எனது நன்றிகள். இன்று, புதிய துருக்கி வெற்றி பெற்றுள்ளது, 81 மாகாணங்கள் வெற்றி பெற்றுள்ளன. துருக்கி மாத்திரம் அல்ல, பொஸ்னியா, அர்பில், இஸ்லாமாபாத், காஸா வெற்றி பெற்றுள்ளன!

சென்ற றமலான் மாதத்தில் அனைத்து இடர்களையும் பாராது எமது கூட்டங்களில் கலந்து முழு ஆதரவையும் வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. இன்று பழைய ஒரு தவணையை முடித்து விட்டு புதிய ஒரு துருக்கிக்கான நுழைவாயிலில் கால் தடம் பதிக்கின்றோம். இன்றிலிருந்து சன்கயாவுக்கும் (ஜனாதிபதி மாளிகை) மக்களுக்கும் இடையிலான அனைத்து தடைகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இனிமேல், இந்த நாட்டின் விதி முழுமையாக இருக்கப்பெரும் மக்களுக்கு நான் ஒரு அமானிதமாக வழங்கப்பட்டுலேன்.இன்றிலிருந்து 'அரசு' 'மக்கள்' எனும் இரண்டு கோட்பாடுகளும் இரண்டு திசைகளிலல்ல ஒரே திசையை நோக்கியே செல்லப் போகின்றது. ஆகஸ்ட் 14 2001 இல் நாம் எமது கட்சியை உருவாக்கிய போது (மறைந்த முன்னால் ஜனாதிபதி) மெந்தெரெஸ் கூறியது போன்றே 'போதும்! சொல் மக்களினதே' என்றோம்; மேலதிகமாக இதனையும் சேர்த்துக்கொண்டு,'சொல்லும் முடிவும் மக்களினதே' என்று நாம் கூறினோம். 13 வருடங்களுக்கு முன்பதாக நாம் இந்த கட்சியை உருவாக்கியதிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு தேர்தலிலும் ஏறு வரிசையில் வெற்றி பெற்றே வந்துள்ளோம். ஒவ்வொரு தேர்தலின் பின்னாலும் மாடிமுகப்புக் கூட்டத்தில் எம் இதயத்தோடு உங்களுக்கு சில வாக்குறுதிகளை செய்தோம், அவற்றை நிறைவேற்றினோம். 9ஆவது தேர்தலின் பின்னாலும் அதே உணர்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்தத் தேர்தலில் எவரும் தோல்வி பெறவில்லை. எங்களுக்கு வாக்களிக்காத எவரும் கூட தோல்வியடையவில்லை. தோல்வி கண்ட ஏதும் உண்டா? ஆம், சமூகத் தகுதிநிலை (Status quo) தோல்வி கண்டுள்ளது, அழுகிய அரசியல் தோல்வி கண்டுள்ளது.

நாம் புதியதொரு சமூகம் தழுவிய தேசியத்துவத்தை நோக்கிப் பயணிக்கப்போகின்றோம். பழைய வாதங்களை பழைய துருக்கியோடு விட்டு விடுங்கள். இதுவரையில் எமது பாதையில், ஏதும் தவறு விட்டிருந்தால் அவற்றை உங்கள் முன்னால் குறிப்பிட்டு இயன்ற வரையில் எம்மை திருத்திக் கொள்ள முயற்சித்துள்ளோம். நாம் செய்துள்ள நல்லவற்றை பணிவோடு உங்கள் முன்னிலையில் வைத்துள்ளோம். நாம் எந்த ஒருவரினதும் வாழ்க்கை முறையில் குறிக்கிடவில்லை, எமக்கு வாக்களிக்காத எவரையும் கேலி செய்ய வில்லை. எம்மை ஒவ்வொரு விடயத்திலும் குறை கூறி வருபவர்கள் நாம் கடந்து வந்த 12 வருடங்களையும் திரும்பிப் பார்க்கட்டும், அதன் பின்னர் ஏதாவது கூற வேண்டுமானால் கூறிக் கொள்ளட்டும்.நாம் ஒரே நாகரீகத்தின், ஒரே வரலாற்றின் குழந்தைகள் ஆவோம். எமக்குள் இருக்கும், துருக்கி, குர்தி, அரபி, லாஸ்,பொஷ்ணாக் என்ற வித்தியாசங்களின் முன்னால், ஷியா, சுன்ணி, மூஸவீ, சுர்யாணி, யஸீதீ என்ற வித்தியாசங்களின் முன்னால் 'நான் ஒரு துருக்கியன்' என்ற உண்மையை ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். எம்மத்தியில் இருக்கும் வித்தியாசங்களை வித்தியாசங்களாகவல்ல, செல்வமாகக் கருதி பொது விழுமியங்கள் மதித்து ஒரு புதிய நாகரீகத்தை கட்டியெழுப்புவோம்.

இந்தக் கூட்டத்தில் தலையை மறைத்த பெண்களும், திறந்திருக்கும் பெண்களும் கூடி நிற்பதைக் காண்கிறேன். இதனைத்தான் 'பன்மையில் ஒருமை' என்று சொல்கிறோம். எமது தேசியக்கொடி ஒன்றே, தேசியக் கீதம் ஒன்றே. எமது வரலாறு மாத்திரம் அல்ல இன்றும் நாளையும் கூட ஒன்றே! அனைத்து வாதங்களையும் எமக்க்குப் பின்னால் விட்டு விடுவோம், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரினதும் கண்களைப் பார்ப்போம், இதயம் திறந்து உறவாடுவோம்!
2002இல் நாம் ஆட்சி ஏறும் போது வெறும் 230 பில்லியன் டாலர் தேசிய வருமானதோடு எமது பயணத்தை துவங்கினோம், இன்று 3 மடங்கிலும் அதிகமாக 820 பில்லியங்களையும் தாண்டிவிட்டோம். உலக வங்கிக்கு 23 பில்லியன் டாலர் கடன் இருந்தது, இன்று அந்த அனைத்து கடன்களும் தீர்ந்த நிலையில் 5 பில்லியன் டாலர்கலை உலக வாங்கிக்கு கடனாகக் கொடுக்கவுள்ளோம். 63% வட்டி வீதமாக இருந்தது; இன்றோ ஒரு இலக்கத்தில் காணப்படுகிறது.பரலல்(ஃபெதுல்லஹ் குலென் ஜமாஅத்) அமைப்பில் இருக்கும் எனது அன்பர்களிடம் நான் வினையமாக வேண்டிக் கொள்வது என்னவென்றால், இன்று முழுத் துருக்கியிற்குமே புதியதொரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது உள்ளங்களிலும் புதியதொரு பக்கம் திறந்து கொள்ளட்டும். பதுவா(சாபம்) செய்பவர்களோடு நாம் பயனிப்பது எமக்கு அழகல்ல. எமது பணி ஒரு தனி நபரைச் சார்ந்தது அல்ல, மாறாக இது துருக்கி என்ற ஒரு நாட்டின் பணியாகும். எமது பணி ஒரு நாகரீகத்திற்கான, ஒரு பலமுல்ல துருக்கியிற்கான பனியாகும். இந்தடிப்படையில், எமது நாட்டிற்கு சவாலாக, அச்சுருத்தலாக எவர் செயற்படினும் அவர்களது முன்னிலையில் எம்மைக் கண்டு கொள்வர்!

இன்று புதியதொரு துருக்கியிற்க்கான உருவாக்க நாளாகும். எமக்கு வாக்களித்தவர்களுக்காக மாத்திரம் அல்ல, இதற்கு முன்பும் நாம் செய்தது போன்றே இந்த நாட்டின் 77 மில்லியன் மக்களுக்காகவும் நாம் சேவை செய்யப் போகிறோம். எனவே எந்தொருவரும் இன்றைய தினம் தோற்றதாகக் கருத வேண்டாம். நாம் திரும்பியிருக்கும் திசை நேற்றைய தினத்தை விட பன்மடங்கு ஒளி பொருந்தியதாக எம்முன்னால் வீற்றிருக்கிறது.மீண்டும் ஒரு முறை இந்த நாட்களை எமக்குத் தந்ததற்காக அதிகம் அதிகம் இறைவனைப் புகழ்ந்தவனாக எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

முகநூலிலிருந்து

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...