"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 August 2014

ஹமாஸின் வெற்றி சியோனிசத்தின் தோல்வி

உலக வரலாற்றை நோட்டமிட்டால் ஓர் உண்மை புரியும். பலஸ்தீனம் யார் கையில் செல்கிறதோ உலகம் அவர்கள் கைவசமாகும். அந்த குறிக்கோலுக்காகத்தான் கிறிஸ்துக்கு முன்பிருந்தே பலஸ்தீனைத் தம் வசப்படுத்த பல சக்திகள் படையெடுத்துள்ளன. பாபிலோனியர்கள், பாரஸீகர்கள், ரோமர்கள், யூதர்கள், கிறிஸ்தவ சிலுவை யுத்தம், ஆங்கிளேயப் படையெடுப்பு, பிரித்தானிய காலணித்துவம், மீண்டும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டுச் சக்திகளின் இஸ்ரேல் என்ற உருவாக்கம். இவை அனைத்தும் பலஸ்தீனை மையப்படுத்தி அமைந்ததற்கு இது ஒரு காரணம்.

பலஸ்தீன் அது அருள்பாளிக்கப்பட்ட பூமி. மட்டுமல்ல அருள்பாளிக்கப்பட்ட போராளிகளைக்கொண்ட பூமியும்கூட. உலகில் எங்கு சென்றாலும் எதையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஷஹாதத் என்ற அருளை அங்குதான் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். தீய சக்திகளின் கைகளில் பலஸ்தீன் சென்றால் உலகமே அநீதிக்கும், அக்கிரமத்திற்குள்ளும் வீழும். அதனைத் தடுத்து நீதி, நியாயம், சமாதானம், சௌபாக்கியம் உலகுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் அது இஸ்லாத்தின் கைகளில் வரவேண்டும். அதற்கான போராட்டம்தான் அங்கு தொடர்கின்றது.

முழு உலக மக்களும், முஸ்லிம்களும் செய்ய வேண்டிய ஒரு மகத்தன பணியை பலஸ்தீனின் சிறு படை ”ஹமாஸ்” செய்துகொண்டிருக்கின்றது. முஹம்மத் அரீபி என்ற அறிஞர் கூறிய வார்த்தை உண்மையானது. ”பலஸ்தீன மக்கள் இரத்தம் சிந்துகிறார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம். அவர்கள் இரத்தம் உறைந்து கிடக்கும் உலக மக்களுக்கு இரத்த தானம் செய்கிறார்கள்” என்றார் அவர்.

உலகின் 4 ஆவது மிகப் பெரிய இராணுவம் இஸ்ரேல். அமெரிக்க வல்லரசையே (?) அழித்துவிடுமளவு கணரக ஆயுதங்களை வைத்து, பொருளாதார வல்லமையுடனும் பல நாடுகளின் (அரபு நாடுகள் உட்பட) உதவிகளுடனும் சுமார் 65 வருடகாலம் யுத்தம் செய்தும் அதனால் நின்று பிடிக்க முடியாமல் தோற்றுப்போய் பின்வாங்கிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். ''எத்தணையோ சிறிய படைகள் அல்லாஹ்வின் உதவியால் மிகப் பெரும் படைகளையெல்லாம் விஞ்சுகின்றனர்'' (அல் குரஆன்)

காஸா - இஸ்ரேலிய யுத்தம் நேற்றிரவு முடிவுக்கு வந்துள்ளது. காஸா மக்கள் மட்டுமன்றி முழு பலஸ்தீனும் இன்னும் பல நாடுகளிலும் இந்த போர் நிறுத்தம் பலஸ்தீனப் போராட்டத்தின் ஒரு வெற்றியாக, முக்கியமானதொரு மைல்கல்லாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் .
1.-
தாக்குதல்களை நிறுத்துதல்
2-
காஸா மீதான முற்றுகையை நீக்குதல்
3-
மனிதாபிமான மற்றும் கட்டுமானத்துக்கு தேவையான
உதவிப் பொருட்களை உடனடியாக உட்செல்ல அனுமதித்தல்
என்ற விஷயங்கள் உடன்பாட்டில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளன.

ஹமாஸின் அடுத்த கோரிக்கைகள்
1.-
விமான நிலையம்
2-
துறைமுகம்
3- இந்தப் போரின் போதும் அதற்கு முன்னரும் இஸ்ரேலினால் பிடிக்கப்பட்ட கைதிகளின் விவகாரம் என்ற மூன்று அம்சங்கள் குறித்தும் இந்தப் போர் நிறுத்தம் எந்தளவுக்கு வெற்றிகரமாக முன்கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பொருத்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவு எட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வாக்குறுதியைக் காப்பாற்றிய வரலாறுகள் அரிது என்பதால் அதற்கான பொறுப்பை எகிப்து தான் ஏற்க வேண்டுமென பலஸ்தீன் தரப்பு சொல்லிவிட்டது. இந்த உடன்பாட்டை சாத்தியப்படுத்துவதில் கட்டார் பெரும் பங்காற்றியது என அப்பாஸ் குறிப்பிட்டார். அதற்காக வேண்டி ஜோன் கெரிக்கும் கட்டாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அதே நேரம் அடுத்த வாரம் கட்டாரை இஸ்ரேலிய சட்டசபையில் தன் எதிரியாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் பிரேரனை கொண்டு வரப்படவுள்ளது. இந்த நிலையில் இனி ஹமாஸ் காஸாவினுள் ஏவுகணை தொழிற்சாலையை நிர்மாணிப்பதை எங்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய தரப்பினர் புலம்புகின்றனர்.

பதிலுக்கு கஸ்ஸாமின் ஊடகப் பிரிவு சொல்லும்செய்தியைப் பாருங்கள்.

அல்லாஹ் மீதாணையாக நாம் வெற்றி பெற்று விட்டோம்
ஆனால் சுரங்கங்கள் தோண்டப்படும்
படைகளுக்கு ஆள் சேர்க்கப்படும்
ஆயுதங்களை இன்னும் நவீனம் வாய்ந்தவையாக மாற்றுவோம்
புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வோம்
எமது நெருங்கி வரும் சுதந்திரத்துக்காக.

வரலாற்றில் அரபு நாட்டுப் படைகளால் சாதிக்க முடியாததை காஸா போராளிகள் இறை அருளால் சாதித்தனர். காஸா எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த போது அதைக் கைப்பற்ற அரை மணி நேரம் இஸ்ரேலுக்கு போதுமாக இருந்தது என்பது கசப்பான வரலாறு. இன்று காஸா கண்ணியமாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். அடுத்து,ஆட்சியில் இருந்த ஒரே வருடத்துக்குள் போராளிகள் இந்த இராட்சதப் பலத்தைப் பெற தம்மாலான உதவிகளை தந்து வழிநடாத்திய முக்கிய தலைவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உலகின் நாலா புறமிருந்து பலஸ்தீனுக்காய்க் கையேந்திய மக்களுக்கும் நன்றிகள் சேரும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...