"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 December 2012

நோயெதிர்ப்பைத் தூண்டும் தாய்ப்பால்

இவ்வேதம் உண்மையானது என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக எமது அத்தாட்சிகளை உலகின் பல பாகங்களிலும் (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம்.”(41:53)

அல்லாஹ் மனிதனுள் பதித்திருக்கும் எண்ணிலடங்கா அற்புதங்களுள் தாய்ப்பாலும் ஒன்று. தாய்ப்பால் கொண்டிருக்கும் அற்புதத்தைப் பார்த்து விஞ்ஞானிகளே வியக்கின்றனர். தாய்க்கும் சேய்க்கும் இடையில் பலமானதொரு அன்புப் பிணைப்பை ஏற்படுத்துவதில் தாய்ப்பால் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒரு குழந்தையின் ஆரோக்கியமான உடலியல் மற்றும் உளவியல் ரீதியான வளர்ச்சி, முதிர்ச்சிகளுக்கும் சிறு பருவத்தில் முறையாகத் தாய்ப்பால் பருகுவது இன்றியமையாததாகும்.

குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் மார்பிலிருந்து ஒரு நாளைக்கு 2 லீட்டர் முதல் 1 லீட்டர் வரை பால் சுரக்கின்றது. பால் சுரக்கும் பொறிமுறையானது மிகவும் அற்புதமானதொரு அம்சம். தாயின் மார்பகங்களில் குழந்தை வாய் வைக்கும்போது தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) எனும் ஹோமோன் தூண்டப்படுகிறது. பின்னர் அந்த ஹோமோன் இரத்தத்தைப் பாலாக மாற்றறுகிறது. ஒக்ஸிடோசின் (Oxytocin)   எனும் மற்றொரு ஹோமோன் சுரப்பதனால் இரத்தமாக மாற்றப்பட்ட பால் மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக குழந்தையின் வாயை அடைகின்றது. சிலபோது குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும் என்ற ஆர்வம்கூட தாய்ப்பாலைச் சுரக்கவைக்கும்.

கருவறையில் மகிவும் பாதுகாப்பாக இருந்துவிட்டு வெளி உலகிற்கு வரும் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் முழுமையாக வேலை செய்வதில்லை. இதனால் குழந்தை பல வழிகளிலும் நோய்த்தொற்றுக்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே அத்தகைய நோய்களுக்கான நோயெதிர்ப்புச் சக்தியை அல்லாஹ் தாய்ப்பாலில் வைத்திருக்கின்றான். தாயின் பாலில் உள்ள இம்யூனோக்ளோபின் ஏஎன்ற பொருள் குழந்தையிடம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது.

சிறுபராயத்தில்தான் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் அணுக்கள் உடலில் நன்கு உற்பத்தியாகின்றன. நோயெதிர்ப்பு அணுக்களை உற்பத்தியாக்கவே சிறுவயதில் நோய்த்தடுப்பு ஊசிகள் ஏற்றப்படுகின்றன. உண்மையில் அவ் ஊசிகளில் இருப்பது மருந்தள்ள. மாறாக ஆயிரக்கணக்கான நோய்க் கிருமிகளே!. இவற்றை உடலில் செலுத்தியதும் நோயை எதிர்த்துப் போராடும் உயிரணுக்கள் உருவாகி அவற்றைத் தாக்கி அழிப்பதோடு இறுதிவரை குறித்த வகை நோய்க்கிருமிகள் உடலில் நுழையும் போதெல்லாம் அவற்றைத் அழிக்கும் தொழிலில் அவை ஈடுபடுகின்றன. இதுபோன்று தாய்ப்பால் அருந்துவதனூடாகவும் ஆரம்பம் முதலே நோய் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்திசெய்யப்பட்டு விடுகின்றன. குழந்தைப் பருவத்தில் தாய்ப்பாலை வழங்காது பெட்டிப்பாலை (பசுப்பால்) அருந்தச் செய்வதால் இத்தகைய பலன் கிடைப்பதில்லை.

சுவீடனில் உள்ள லுண்ட் மற்றும் கோட்டன்பெர்க் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் பின் கூறியதாவது தாய்ப்பாலில் இருக்கும் ஹேம்லெட்”  ன்ற ஒருவகைப் பொருளானது நாட்பது வகையான புற்றுநோய்க் கலங்களை அழிக்;கும் சக்தியைக்கொண்டுள்ளதுஎன்றார்கள். அதேபோன்று குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் பருகுவதால் ஒவ்வொமை நோய், நீரிழிவு நோய் போன்றவை பீடிக்கும் விகிதமும் குறைகிறது. முறையாகத் தாய்ப்பால் பருகி வளரும் குழந்தைகள் 80% மருத்துவமனைக்குச் செல்லும் தேவை குறைகிறது.

தாய்ப்பாலில் புரதம், காபோஹைத்ரேட், கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இருப்பு, கல்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுப் பொருட்களும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகின்றன. குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான D.H.A (Docosahexaenoic Acid) மற்றும் A.R.A. (Arachidonic Acid) என்பனவும் காணப்படுகின்றன. குழந்தை பிறந்து மூன்று நாட்களில் சுரக்கும் தாய்ப்பால் கொலஸ்ட்ரம் என்றழைக்கப்படுகின்றது. இது வெளிர் மஞ்சல் நிறத்தில்  காணப்படும். இதில் அதிகமானளவு நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்துக்களும் காணப்படும். மூன்றாம் நாளின் பின்பு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், மாச்சத்து, விட்டமின்கள், தாதுப்பொருட்கள் என்பன சரிவிகித அளவில் இருக்கும். இரண்டு வருடங்கள் பூர்த்;தியாகுகையில் குழந்தைக்குத் தேவையான கொழுப்புச் சத்துக்கள் தாய்ப்பாலினூடாகக் குழந்தைக்குச் செல்லும். எனவேதான் தாய்ப்பாலுக்கு இணையான உணவு எங்கும் இல்லை என்கிறோம்.

தாய்ப்பால் புகட்டப்படும்போது குழந்தையின் மூளைச் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றதென யுனிசெப் ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. எனவே அவர்கள் எதிர்காலத்தில் அறிவுத்திறன் மிக்கவர்களாகவும் மற்றும் புத்திக் கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள் என அவ் ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. அத்தோடுஇதன் பிரதிபலனை ஐந்து, ஏழு, பதினொன்று மற்றும் பதின் நான்கு ஆகிய வயதுகளில் வாசிப்பு, எழுத்து, கணிதம், ஆகிய துறைகளில் கண்டுகொள்ளலாம் எனவும் அவ்வாய்வு கூறுகிறது.

இதனால்தான் முதல் இரண்டு வருடங்களில் குழந்தைகளுக்குக் கட்டாயம் தாய்ப்பாலை வழங்வேண்டுமென வைத்தியர்கள் வலியுருத்துகின்றனர். வல்லவன் அல்லாஹ் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கவேண்டிய கால எல்;லையைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் பின்வருமாறு கூறுகின்றான். இன்னும் (பால்குடி மறக்கடிக்கப்படுவது) இரண்டு வருடங்களிலாகும்” (லுக்மான்:14) (பகரா:233) இந்த ஆரம்ப இரண்டு வருடங்களிலும் பாலூட்டுவதானது குழந்தையின் உள, உடல் வளர்ச்சி மற்றும் விருத்திகளில் எவ்வளவு முக்கியம் வகிக்கின்றது என்பதை மேலே அவதானித்தோம்.

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற தாயப்பாலுடன் தொடர்பான இரண்டு வலக்கு விசாரணைச் சம்பவங்களை இங்கு ஞாபகிப்பதும் பயன்தரும். ஒரே சமயத்தில் இரண்டு பெண்மனிகள் ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்தனர். பெண் குழந்தை இறக்கவே அதன் தாய் ஆண் குழந்தைதான் தன்னுடையது என்று வாக்குவாதப்பட்டாள். இரண்டு தாய்மாறும் விசாரணைக்காக அன்றிருந்த பிரபலமான காழியிடம் அழைத்துவரப்பட்டனர். அவர் இருவருடைய தாய்ப் பால்களிலிருந்தும் சிறிதளவு எடுத்து இரண்டையும் நிறுத்துப் பார்த்துவிட்டு, நிறை கூடிய பால் யாருடையதோ ஆண் குழந்தை அவருடையதே எனத் தீர்ப்பு வழங்கினார்.

பொதுவாக ஆரோக்கியமான குழந்தைப் பேறு என்பது ஒன்பது அல்லது பத்து மாதங்களில் குழந்தை பெற்றெடுப்பதாகும். ஆரம்பங்களில் ஆகக் குறைந்தது ஏழு மாதங்களுக்குப் பின் குழந்தை பிறந்தால் மட்டுமே அதனை வாழவைக்க முடியும் என்ற கருத்து இருந்து வந்தது. என்றாலும் ஒரு குழந்தை ஆறு மாதங்களிலும் பிறக்க முடியும் என்ற உண்மையை அல்குர்ஆன் மிக அழகாக கணித அடிப்படையில் நிறுவுகின்றது. இவ்விடயத்தை மறுத்துவந்த பிரபல முளையவியலர் பேராசிரியர் Dr.கீத்மூர் அவர்கள் கூட பேராசிரியர் அப்துல்கரீம் ஸைதான் அவர்கள் அல்குர்ஆனின் நிழலில் இதனைத் தெளிவுபடுத்தியதும் பல ஆராய்ச்சிகளின் பின் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். அல்குர்ஆன் இதனை நிறுவும் பாங்கினைப் பாருங்கள்.

கர்ப்பகாலம் தொடர்பாகவும் குழந்தைக்குப் பாலூட்டும் காலம் தொடர்பாகவும் அல்குர்ஆனில் அநேக வசனங்களைக் காணலாம். அவற்றில் மிக முக்கியமான இரண்டு வசனங்களை இங்கு நோக்குவோம்.

1.“இன்னும் (பாலறுந்துவது மறக்கடிக்கப்படுவது)இரண்டு வருடங்களிலாகும்” (லுக்மான்:14)
2.“அவனைச் சுமப்பதும் பால் குடிக்கவைப்பதும் முப்பது மாதங்களாகும்” (அஹ்காப்:15)

இந்த இரண்டு வசனங்களிலும் இரண்டுவகையான தவணைகள் கூறப்பட்டுள்ளன. பால்குடி மறக்கடிக்கச் செய்யவது இரண்டு வருடங்களில் என்றும் சிசுவைக் கருவில் சுமப்பதும் பின்னர் அதற்குப் பாலூட்டுவதும் முப்பது மாதங்கள் என்றும் வந்துள்ளன. இக்கால எண்ணிக்கைகளை நாம் மாத அடிப்படையில் கணக்கிட்டால் இரண்டு வருடங்கள் பாலூட்டுதல் என்பது 24 மாதங்களாகும். பாலூட்டுதல் 30 மாதங்கள் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக முப்பது மாதங்களில் 24 மாதங்கள் பாலூட்டுதல் என்றால் எஞ்சியிருக்கும் 6 மாதம் என்பது குழந்தையைக் கருவில் சுமக்கும் காலப்பகுதியாகும். (சுருக்கமாக : சுமப்பது 6 மாதங்கள் + பாலூட்டுதல் 24 மாதங்கள் = 30 மாதங்கள்) ஆக ஒரு குழந்தையைப் பிறசவிப்பதற்குப் போதுமான ஆகக் குறைந்த காலம் ஆறு மாதங்கள் என்பதை இதிலிருந்து விலங்களாம்.

இது ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்படுகின்றது. உஸ்மான் (ரழி) அவர்களது ஆட்சிக்காலம். ஒரு பெண் திருமணம் முடித்து ஆறு மாதங்களில் குழந்தையைப் பெற்றுவிடுகிறாள். அவ்வாறு அவள் வழமைக்கு மாறாக ஆறு மாதங்களில் குழந்தையொன்றைப் பிரசவித்தமைக்கான காரணம் அவள் திருமணத்திற்கு முன்பு தகாத உறவில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டது. எனவே மக்கள் அப்பெண்ணுக்கு விபசாரத்திற்கான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினர். இது தொடர்பாக உஸ்மான் (ரழி) அவர்களது அவையில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது அலி (ரழி) அவர்கள் மேற்குறிப்பிட்ட அல்குர்ஆனிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பெண் ஆறு மாதங்களிலும் குழந்தையொன்றைப் பிரசவிக்க முடியும் என்ற உண்மையை நிறூபித்தார்.
குறிப்பு அகரம் சஞ்சிகையில் பிரசுரமான எனது ஆக்கம்
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima......

சிறந்த இடுகை. jasakallah....

ஆனால் எனக்கு மேலதிக விளக்கமொன்று தேவை கட்டாயம் பதிலளிக்கவும் ப்ளீஸ்....... ஆண் குழந்தை, பெண் குழுந்தை இரண்டிற்கும் பாலூட்டும் கால எல்லை வேறுபாடு உண்டா????? தயவு செய்து விளக்கம் தரவும்..... please.....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...