"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 July 2011

பசுமைக் கணினியாக்கம் (Green computing)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

குறிப்பு : ஜுலை மாத எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமானது.

புதியன புகுதல், பழையன கழிதல்என்பது இன்றைய உலக நடைமுறையில் தவிர்க்க முடியாத ஒரு கலாசாரமாக மாறியுள்ளது. எமது வாழ்வுடன் கழந்துவிட்ட புதிய விடயங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பு அதனை முந்திக்கொண்டு இன்னும் ஏராலமான புதிய விடயங்கள் புதிய புதிய மாற்றங்களுடன் எம் முன் அரங்கேறிவிடுகின்றன. பிற துறைகளைவிடவும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையிலேயே இந்த மாற்றங்கள் அதிகளவில் உணரப்படுகின்றன. நவீன, வேகமான கணினிகள் அதி நவீன, அதிவேகமான கணினிகளின் வருகையால் பின்தள்ளப்பட்டு போகின்றன. கணினிகளில் மாத்திரமன்றி சகல துறைகளிலும் இது இன்று தவிர்க்க முடியாததாக மாறிவிட்டுள்ளது.

புதிய வருகைகளினால் பழமைகள் பின்தள்ளப்படுவதில் கணினிகளே முதலிடத்தில் நிற்கின்றன. இதனால் பழைய கணினிகளின் குப்பைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. இன்று பலராலும் பரவலாகப் பேசப்படும் புவி வெப்பமடைதல் (Globle worming)என்ற எண்ணக்கருவுக்கு பிரதான காரணியாகத் தெரிவது இலத்திரணியல் கழிவுகளாகும் (Electronic wastes). அதிலும் முன்னணி வகிப்பது இந்த கணினிகளேயாகும். மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விதத்தில் இலத்திரனியல் சாதனங்களால் சூழலிற்கு விடுவிக்கப்படும் சக்தி அல்லது சடப்பொருளே இலத்திரனியல் கழிவுஎனப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நய்ரோபியில் (Nairobi) உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் அலுவலகத்தில் சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாடு இடம்பெற்றது. இதில் உலகம் எதிர்நோக்கியிருக்கும் கழிவு தொடர்பான பிரச்சினைகள் பற்றி மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. அதிலே கலந்துகொண்ட ஐக்கிய நாடுகள் சூழல் செயற்றிட்ட (United Nations Environment Program - UNEP) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஸிம் ஸ்டெய்னர் (Achim Steiner) ஒரு சம்பவத்தைக்கு குறித்துக்காட்டி இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். கடந்த வருடம் (2005) ஒகஸ்ட் மாதம் ஐவரி கோஸ்டில் பத்துப்பேரைக்கொன்று இன்னும் 70,000 இற்கும் அதிகமானவர்களைச் சிகிச்சை பெறச்செய்யவைத்த துயரமான சம்பவம், ஆபத்தான கழிவுகள் மனிதனது சுகாதாரம் மற்றும் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதையே சுட்டிக்காட்டுகின்றதுஎன்றார். குறித்த பிரதேசத்தில் பழுதடைந்த கணினிகள் விடுவிக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

சுற்றுச் சூழலின் சமநிலைத் தன்மையிலும் ஆரோக்கியத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதில் கணினிகளின் வகிபாகம் தொடர்பாக ஜப்பானின் பல்கலைக்கழகங்களுக்கான ஒன்றியம் சார்பாக பேராசிரியர்களான ரொடிகர் கூஹ் (Ruediger Kueh) மற்றும் எரிக் விலியம்ஸ் (Eric Williams)” ஆகியோர் ஓர் அறிக்கையை சமர்பித்தனர். இவ்வறிக்கை தற்போது “Computers and the Environment: Understanding and Managing their Impacts” என்ற பெயரில் புத்தகமாக சந்தையில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கின்றது. கணினி உற்பத்தியின்போது அதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற மூலப் பொருட்கள் குறித்தும் அவற்றின் அளவுப் பெருமானம் குறித்தும் அவற்றினால் சூழலுக்கும் உயிரிகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.

ஒரு கணினியை உற்பத்தி செய்வதற்காக 22கி.கி. நிறையுடைய பல்வேறு இரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கணினியொன்றை முழுமையாத் தயாரித்து முடியும் தருவாயில் அதற்காக 1.5 டொன் நீர் உபயோகிக்கப்படுகின்றது. ஒரு கணினி உற்பத்திசெய்யப்படுகையில் 90கி.கி கழிவும் உற்பத்தியாகின்றது. இது நவீன ரக ஜீப் வண்டியொன்றைத் தயாரிப்பதற்காகச் செலவிடப்படும் மூலசக்திக்கு நிகரானது என மேற்குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட ஒரு கணினியை இயக்கும்போது அதற்காக பாரியளவில் சக்தி (Energy) செலவிடப்படுகின்றது. இந்த சக்தி முகாமைத்துவத்திற்காக இயங்கும் அமெரிக்காவின் கிறீன் கொம் செலேன்ஜ்(www.greencommchallenge.com) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி என்நேரமும் உலகளவில் நூறுகோடி (ஒரு பில்லியன்) கணினிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. பத்து இலட்சம் தரவுத் தகவல் மையங்கள் (Data Information Centers) நித்தம் பணியில் இருக்கின்றன. இந்தக் கணினிக்காக மாத்திரம் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் சக்தியில் 10% ஆன சக்தி செலவிடப்படுகின்றது. இது 2020 ஆம் ஆண்டாகும் பொழுது 15% ஆல் அதிகரிக்குமெனவும் புள்ளிவிபரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

எமது சுற்றுச் சூழலிலிருந்து கணினிகளால் உறிஞ்சப்படுகின்ற இவ்வளவு தொகையான சக்தி அனைத்துமே முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமில்லை. உறிஞ்சப்படுபவற்றில் 20% முதல் 40மூ வரையான சக்தி வீணாக சூழலுக்கு விடப்படுகின்றது. இவ்வாறு வீணாக சூழலுக்கு விடப்படும் சக்தியால் சூழல் மென்மேலும் வெப்பமடைந்து புவியும் வெப்பமடைகின்றது. இவ்வாறு ஒரு வருடத்தில் 22 மில்லியன் கார்களிலிருந்து வெளியேறும் சக்திக்குச் சமனான சக்தி ஒரு வருடத்திற்கு கணினிகளிலிருந்து பயன்படுத்தப்படாத நிலையில் வெளியேறுகின்றது.

கணினித் திரை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து டிரினனில் பொஸ்பேட்எனும் ஒருவகை நச்சுக் கதிர்கள் வெளியேறுகின்றன. இது கணினித் திரையைச் சூழ சுமார் இரண்டு அடிகள்வரை பரவுகின்றன. இக்கதிர் சுவாசக் கோளாரு, மூச்சுத் தினறல், கண்கள் காய்தல், முகத்தில் சரும நோய் ஏற்படுதல் போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றது. அப்படியாயின் கணினிகளால் நிறைந்து வழியும் அலுவலகங்கள், இணையக் கெபேக்களின் நிலை எவ்வாறாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்!

கணினிகளில் கோளாரு ஏற்படும்போதோ அல்லது புதிய கணினிகளைக் கொள்வனவு செய்வதற்காகவோ பழுதடைந்த கணினிகளும் பழைய கணினிகளும் மூன்று முறைகளில் பாவணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கழிவாக்கப்படுகின்றன. ஒன்று, செல்வந்த நாடுகளில் இக்கணினிகளை மீள் உற்பத்தி, மீள் சுழற்சி செய்வர். இரண்டு, சில வர்ளர்முக நாடுகள் பழுதடையும் கணினிகளை பாவணைக்கு இயலுமான விதத்தில் சரிசெய்து வரிய நாடுகளுக்குக் குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றன. இதனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் குப்பைத் தொட்டியாக வரிய நாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மாதமும் நைஜீரிய துறைமுகத்திற்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பாவிக்கப்பட்ட கணினிகளும் செல்லிடத் தொலைபேசிகளும் வருகின்றன. இவற்றில் 75 வீதமானவை செயழிலந்தவையாகும். மூன்று; வரிய நாடுகளில் குப்பையாக்கப்படும் கணினிகளிலிருந்து தேவையான உலோகங்களைப் பெறுவதற்காக அவை உடைக்கப்பட்டு, பகுதி பகுதியாக வேறாக்கப்பட்டு, எரிக்கப்பட்டுவிடுகின்றன. இம்மூன்று முறைகளிலுமே சூழல் பாதிப்புக்குள்ளாகத்தான் செய்கின்றது.

இலத்திரணியல் குப்பைகள் அதிகம் குவிக்கப்படும் இடங்களாக ஆப்ரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளே இனங்காணப்பட்டுள்ளதாக “Exporting Harm; The Hi-Tech Trashing of Asia” என்ற தலைப்பில் அமெரிக்காவின் Basel Action Network என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. சாதாரண கணினியாக இருக்கும்போது ஏற்படும் பாதிப்புகளைவிடவும் நூற்றுக் கணக்கான கணினிகளை ஓரிடத்தில் ஒன்றாகக் குவித்து வைத்திருப்பதால் ஏற்படும் விளைவுகள் பேராபத்தானவை. குவிக்கப்பட்டிருக்கும் கணினிகள் வெப்பமடைந்து அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைவாய்ந்த இரசாயனங்கள் பூமியுடனும் நீருடனும் கலந்து பெரிய அழிவை ஏற்படுத்த வல்லன.

அல்லது கணினிகளை உடைத்து தீயிட்டு எரிப்பதனால் அதிலுள்ள Cadmium, Arsenic, Astronium> ஈயம், தகரம், எண்டிமனி, பெர்லியம், செலீனியம், க்ரோமியம், கோபோல்ட் மற்றும்; இரசம் போன்ற இரசாயன மூலக் கூறுகள் புகையாக வெளியேறி வளிமண்டலத்துடன் கழந்து உயிர் வாழ்வில் அழிவை ஏற்படுத்துகின்றன. ஈயம் சுவாசம் வழியாக உடலினுள் சென்றால் அது உடலினுள் திரட்சியடைகின்றது. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு எண்பு வளர்ச்சியும் குன்றுகின்றது. மட்டுமன்றி புற்றுநோய் போன்ற பல பயங்கர நோய்கள் உருவாகின்றன. இதனால் மனிதனது ஆயுள் குறைகின்றது.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 13 கோடி கணினிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மில்லியன் கணக்கான கணினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் வருடந்தோரும் சுமார் 20 முதல் 50 மெட்ரிக் டொன் இலத்திரனியல் கழிவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 12 - 20 மில்லியன் கணினிகள் கழிவாக்கப்படுகின்றன. ஐரோப்பயி ஒன்றியத்தின் கணக்கெடுப்பின்படி இலத்திரணியல் கழிவாக்கப்படும் வீதம் வருடாந்தம் 3-5 வீதத்தால் அதிகரிக்கின்றது.

ஆக தற்போது சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் பயன்படுத்தும் கணினிகளால் மாத்திரம் எவ்வளவு துரிதமாக எமது சூழல் மாசடைந்து பாதிப்புக்குள்ளாகிவருகின்றது? இதுவல்லாமல் இன்னும் பல காரணிகளால் சூழல் மாசுற்று வருகின்றது. இந்நிலை நீடிக்குமாயின் இப்பூமிப் பந்தின் கதி என்னவாகும்?

கணினிகளிலிருந்து பாவனைக்குட்படாத நிலையில் சூழலுக்கு வெளியேறும் சக்தியை முழுமையாகப்  பயன்படுத்துவதற்காகவும் பழுதடையும் கணினிகளை மீள் சுழற்சிக்குட்படுத்துவதற்காகவும் இலத்திரனியல் கழிவுகளைக் குறைப்பதற்காகவும் பல்வேறு அமைப்புகளால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாவனைக்குட்படாத சக்தியை முழுமையாகப்  பயன்படுத்துவதற்காக சர்வதேச ரீதியாக ஒரு வேலைத்திட்டத்தை அமெரிக்காவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிலையம் (US Environmental Protection Agency) 1992 இல் அறிமுகப்படுத்தியது. “Energy Star” (www.energystar.gov) எனும் இவ்வேலைத்திட்டத்தினால் உற்பத்திசெய்யப்படும் இலத்திரனியல் சாதனங்களில் அதன் நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இச்சின்னம் பொறிக்கப்பட்டிக்கும் சாதனங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் சுற்றுச் சூழலை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதே நுகர்வோருக்கு வழங்கும் செய்தியாகும்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டியது கணினி உற்பத்தி நிறுவனங்களாகும். ஏனெனில் கணினி நிறுவனங்கள் சூழலை மாசடையச் செய்யும் தொழிற்சாலைகள் என்றுதான் கூறவேண்டும். கணினி உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவே இதனால் பல்வேறு பாதிப்புகற்கும் ஆளாகின்றனர். குறுகிய வயதிலேயே நோய் வாய்ப்படவும் அதனால் இறக்கவும் செய்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு கூகல், இன்டெல் மற்றும் அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் (USEPA) என்பன 2007-ஜுன்-30 ஆம் திகதி இது தொடர்பானதொரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தன. அதன்பின்னர் ஹேவ்லட் பகார்ட், மய்க்ரோஸொப்ட், யாஹ{, ஹிடாசி, சன் மய்க்ரோ ஸிஸ்டம்ஸ், டெல், மற்றும் ஐபீஎம் போன்ற பிரபலமான கணினி மற்றும் இணைய நிறுவனங்கள் அவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டம் Climate Savers Computing Initiatives என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் பிரதான இலக்கு எல்லா விதத்திலும் சக்தியைப் பாதுகாக்கக்கூடிய கணினியை உற்பத்திசெய்து அதன் மூலம் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதாகும். இவ்வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள கணினியே Green Computing என அழைக்கப்படுகின்றது. Green Technology, Green Drive என பசுமையை மையமாக வைத்து பல திட்டங்கள் முன்வைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோன்றதொன்றுதான் இந்த பசுமைக் கணினியாக்கல் (Green Computing) உம்.

இப்பசுமைக் கணினியாக்கல் தொடர்பாக முறையானதும் தெளிவானதுமான விளக்கத்தை வழங்கியவர் மலேசியாவின் மல்டிமீடியா பல்கலைக்கழகத்தினதும் அவுஸ்ரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தினதும் பேராசிரியரான சென். முருகேசன் என்பவராவார். இவர் எழுதிய Harnessing Green IT; Principles and Practices என்ற அறிக்கை IPRO என்ற ஆய்வுச் சஞ்சிகையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி காலப்பகுதிகளில் பிரசுரமாகியது. குறித்த சஞ்சிகையூடாகவே உலகம் பசுமைக் கணினியாக்கல் தொடர்பான சிறந்த விளக்கத்தைப் பெற்றுக்கொண்டது. அதன்படி கணினித் திரை, Scanner, Printer, Heard Disk என கணினியின் அனைத்து உதிரிப்பாகங்களையும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில் உற்பத்தி செய்தல், அல்லது தற்போது சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல், அல்லது பாதிப்பே இல்லாமல் உற்பத்திசெய்தல், அவற்றை உபயோகித்தல், பாவனையிலிருந்து நீக்குதல் என்ற அனைத்து செயற்பாடுகளுமே பசுமைக் கணினியாக்கல் என அழைக்கப்படுகின்றன.

சுற்றுச் சூழலில் சக்தி விடுவிக்கப்படுவதற்கு கணினித் தொழிற்சாலைகளை மாத்திரம் குறை கூறிக்கொண்டிருக்க முடியாது. ஒரு வகையில் அதற்கு நாமும் காரணகர்த்தாக்கள் தாம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில் ஜப்பான் பல்கலைக்கழகங்களின் ஒன்றியத்தின் ஆய்வாளர் எரிக் விலியம்ஸ் கணினிப் பாவனை தொடர்பாக பொதுமக்களை இவ்வாறு அவதானப்படுத்துகின்றார். புதியதொரு கணினியை வாங்கும்போது அது அவசியம்தானா என்பதை முதலில் சிந்திக்வேண்டும். அடுத்து இருக்கும் கணினியை மேலும் தரமுயர்த்திக்கொள்ள (Upgrade) முயற்சிக்க வேண்டும். அதுவும் முடியாதெனில் நீங்கள் பாவிக்கும் கணினியை இலவசமாகவேனும் யாருக்காவது கொடுத்துவிட்டு புதியதொரு கணினியை வாங்கவேண்டும். இதனால் அவர் புதிதாகக் கணினியொன்றை வாங்க முற்பட மாட்டாரல்லவா?” என்கிறார்.

எனவே கணினிப் பாவனையில் நாமும் மிகக் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கணினியொன்றை வாங்கும் முன் அதன்  அவசியப்பாடு குறித்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக வீடியோ கேம் விளையாடுவதற்கும் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் கணினிகளை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும். இதனால் சூழல் மாசடைவதோடு அவர்களது படிப்பும்தான் சீர்கெடுகின்றது. அதோடு இனி கணினியொன்றை வாங்கும்போது அதில் Energy Star சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்கவேண்டும். இதன் மூலம் சூழல் மாசடைவதை ஓரளவுக்காவது குறைத்துக்கொள்ளாலம்.

கணினிகள் பழுதடைந்து உபயோகத்திற்கு உதவாது போனால் அவற்றை உடைத்து சூழலிற்கு விட்டுவிடக்கூடாது. இயன்றவரை அவற்றை மூட்டைகட்டியாவது பாதுகாக்கத்தான் வேண்டும். பழுதடைந்த கணினிகளை இழிவளவாக்குவதற்கோ, மீள்பாவனை செய்வதற்கோ, மீள் சுழற்சி செய்வதற்கோ தற்போதைக்கு எந்த ஏற்பாடுகளும் எமது நாட்டில் இல்லாபோதும் அதற்கான தேவை தற்போது உணரப்பட்டு வருகின்றது. எனவே இலத்திரனியல் கழிவு முகாமைத்துவம் செய்யும் ஒரு தளம் உருவாக்கப்பட்டால் அதற்கு பழுதடைந்த கணினிகளை கொடுத்து விடலாம். இலத்திரனியல் சாதனங்களை சூழலுக்கு விட்டு குறுகிய காலத்தில் சூழலை மாசடையச் செய்வதைவிட சிறிது காலமேனும் பாதுகாத்து இவ்வாறானதொரு ஆக்கபூர்வமான வேலையைச் செய்வது சிறந்ததொரு செயல்தானே? பசுமைக் கணினியாக்கலூடாக பசுமையானதொரு சூழலுக்கு வழியமைப்போம்...

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...