"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 August 2012

ஞாயிற்றுத் தொகுதியின் அற்புதம்

ஞயிற்றுத் தொகுதி என்பது சூரியனையும் அதன் ஈர்ப்பு விசையின் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கியதாகும். இது சூரியக் குடும்பம்சூரிய மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Solar System என்றும் அழைக்கப்படுகின்றது. ஞாயிற்றுத் தொகுதியானது எட்டு கோள்களையும்இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 162 உப கோள்களையும் வால்வெள்ளிஎரிகற்கள்விண்கற்கள்விண்துகள்கள் செய்மதிகள் விண் குப்பைகள் இன்னும் அறியப்படாதவைகள் என இலட்சக்கணக்கான பிற பொருட்களையும் கொண்டுள்ளது.

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக் கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள் (Mercury காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus)புவி (Earth)செவ்வாய் (Mars)வியாழன் (Jupiter)சனி (Satan)யுரேனஸ் (Uranus)நெப்டியூன் (Neptuneபோன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன் (Plutoநவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும் வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத் தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.

ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் பற்றி விஞ்ஞானிகளிடத்தில் பல முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இரண்டு விடயங்களில்  அவர்கள் ஒருமித்த கருத்துக்கொண்டுள்ளனர். ஒன்றுஇற்றைக்கு 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஞாயிற்றுத் தொகுதி உருவாகியது என்றும் இரண்டுஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் சூரியனுக்கு அண்மையில் காணப்பட்ட வாயுக்கள்தூசு துணிக்கைகள் என்பன ஒன்று சேர்ந்து உருவாகியுள்ளன என்பதுமாகும். கலிபோனியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு எரிகல்லை வைத்து ஆய்வுசெய்ததில் சூரியமண்டலத்தின் வயது 456 கோடியே 50 இலட்சம் வருடங்களென துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளனர்.

கிறிஸ்துக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மேலை நாட்டில் வாழ்ந்த தொலமி (Ptolemy) என்பவரின் காலம் முதல் பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் அனைத்தும் சுற்றிச் சுழல்கின்றன என்ற புவி மையக் கோட்பாடு (Geocentric Theory) முன்வைக்கப்பட்டு வந்தது. கி.பி. 1512 ல் நிகலஸ் கோபர்நிகஸ் (Nicolas Copernicus) என்ற அறிவியலாளர் கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றிவருகின்றன என்றும் சூரியனோ சூரிய மண்டலமோ அசையாது ஒரே இடத்தில் நிற்கின்றன என்றும் விளக்கினார். இதனை சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் நகரும் கோட்பாடு (The Heliocentric theory of planetary motion) என அழைக்கின்றனர். அதன் பின் 1609 இல் ஜெர்மன் நாட்டவரான கெப்ளர் (Johannes Kepler) என்ற விஞ்ஞானி கோள்கள் யாவும் முட்டைவடிவ (Elliptical Shapes) பாதையில் சூரியனைச் சுற்றி வருவதோடு அவை ஒவ்வொன்றும் தம் அச்சில் ஒழுங்கற்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் தனது Astronomia Nova என்ற நூலில் வெளியிட்டார்.

கோள்களும் உபகோள்களும் தமக்கே உரிய பாதைகளில் சுழல்கின்றன என்பதனைக் குறிக்கும் விதத்தில் பின்வரும் அல் குர்ஆனிய வசனம் அமைந்துள்ளமையை இங்கு அவதானிக்கலாம். பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக” (51:7)(85:1) “சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாதுஇரவு பகலை முந்த முடியாது. இவ்வாறு ஒவ்வொன்றும் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (36:40) “ அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் தமது பாதையில் நீந்துகின்றன.” (21:33)

சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றி வலம் வருவதுபோன்றுஎமது பூமியும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனைச் சுற்றி வலம் வருகின்றது. அதேபோன்றுதான் எமது இப்பரம்மாண்டமான ஞாயிற்றுத் தொகுதியும் பிரபஞ்சத்தில் ஒரு இடத்தில் தங்கியிருக்காது கோள்கள் உபகோள்கள் பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு தன்னைத்தானே சுற்றுவதோடு ஒரு விண்பொருளை நோக்கி மிக வேகமாக நீந்திச் சென்றுகொண்டிருக்கின்றது. செக்கனுக்கு 19Km, மணிக்கு 720 ஆயிரம் மைல் வேகத்தில்  ஹெர்கியுலஸ் - Hercules” எனும் நட்சத்திரக் கூட்டத்திலுள்ள வெகா – Vega” என்ற விண்மீனின் திசையில் எமது ஞாயிற்றுத் தொகுதி சென்றுகொண்டிருக்கின்றது. இது ஒரு நாளில் 17,280,000 km தூரம் பிரயாணிக்கின்றது. ஞாயிற்றுத் தொகுதி செல்லும் இவ்விடத்தை Solar Apex (சூரிய முகடு) என விண்ணியல் விற்பன்னர்கள் பெயரிட்டுள்ளனர். சூரியன் ஒரு நிர்ணயிக்கப்பட்டதோர் இடத்தைநோக்கிச் (Fixed place) சென்றுகொண்டிருப்பதாகவும் அதுவே அதன் கடைசி காலம் என்பதையும் பின்வரும் அல் குர்ஆனிய வசனங்கள் மிக அழகாகக் குறிப்பிடுகின்றன. இன்னும் சூரியன் அதற்குரிய இடத்தின்பால் சென்றுகொண்டிருக்கின்றது.” (36:38 / 13:2 / 35:13 / 39:5)  சூரியக் குடும்பம் தனது சுற்றுப் பாதையில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 25 கோடி ஆண்டுகள் செல்கின்றன.

விண்வெளி ஆய்வின் ஆரம்ப கட்டங்களில் ஞாயிற்றுத் தொகுதியில் சனிக் கிரகமே கடைசியானதென 17ம் நுற்றாண்டு வரை நம்பப்பட்டது. அதன் பின் 1781 இல் யுரேனஸ{ம் 1846 இல் நெப்டியூனும் கண்டுபிடிக்கப்பட்டன. இறுதியாக 1930 இல் புளுட்டோவும் ஒரு கோளாகக் கண்டுபிடிக்கப்பட்டது. என்றாலும் புளுட்டோ கிரகமொன்று பெறவேண்டிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி கூடப்பட்ட சர்வதேச வானியல் ஒன்றியத்தின் மாநாட்டில் அதன் உருப்புரிமை ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து ரத்துசெய்யப்பட்டது.

ஞாயிற்றுத் தொகுதியிலிருந்து ஒரு கோள் நீக்கப்பட்டாலும் தற்போதைக்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பவை எட்டு கோள்கள் என்றாலும் இவற்றைத் தவிர இன்னும் பல கோள்கள் எமது ஞாயிரின் குடும்பத்தில் இருப்பதற்கான சான்றுகள் உள்ளதாகவே விண்ணியல் விஞ்ஞானம் நம்புகின்றது. அவற்றையும் இன்னும் சில வருடங்களிலோ அல்லது பல வருடங்களிலோ விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவும் கூடும்.

அல்குர்ஆனில் 12 அத்தியாயத்தில் 04 ஆம் வசனத்தில் சூரியக் குடும்பத்தைக் குறிப்பதுபோன்றதொரு செய்தி கூறப்பட்டிருப்பதும் அதில் குறிப்பிடப்படும் கோள்களின் எண்ணிக்கையும் இங்கு கவனிக்கத்தக்கது. யூசுப் (அலை) அவர்கள் சிறுவயதில் கண்ட கனவொன்றைத் தமது தந்தைக்கு இவ்வாறு கூறுகிறார். என் தந்தையே! பதினொரு கோள்களும் சூரியனும் சந்திரனும் என்னை சிறம்பணிபவையாக அவற்றை நான் (கனவில்) கண்டேன்”  என்று கூறினார். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள வியாழன்சனிநெப்டியூன்யுரேனஸ் ஆகிய நான்கும் பூமியைவிடவும் பெரியவை. மற்றையவை சிறியவை. புதன்வெள்ளிசெவ்வாய்வியாழன்சனி என்பன சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதால் பிரகாசம்மிக்க நட்சத்திரங்களைப் போன்று கீழ் வானில் அழகாகக் காட்சியளிக்கின்றன. நிச்சயமாக நாம் அடி வானத்தில் கிரகங்களை அமைத்துப் பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்” (15:16)

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் யாவும் தமது பாதைகளை விட்டு விலகிச் செல்லாமலிருக்கக் காரணம் அவற்றிற்கு மத்தியில் காணப்படும் ஈர்ப்பு விசையும் ஒவ்வொரு கோளினதும் சுழற்சி மற்றும் சுற்றும் வேகமுமாகும். சூரியன் மையத்திலிருந்து பிற கோள்கள் அனைத்தையும் தன் பால் ஈர்த்துக்கொண்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு கோளும் பிற கோள்களையும் தம் உப கோள்களையும் ஏனைய விண்பொருட்களையும்தம்பால் ஈர்த்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இதனால் அவற்றின் சுழற்சிசுற்றும் வேகத்தினால் தெரிப்படைந்து பிரபஞ்சத்தில் தொலைந்துவிடாது பிற கோள்களுடன் முட்டி மோதாது ஒரு கட்டுப்பாட்டுடன் காணப்படுகின்றன.

அதே போன்று கோள்கள் யாவும் மிக வேகமாகத் தம்மைத் தாமே சுற்றுவதாலும் சூரியனைச் சுற்றிச் சுழல்வதாலும் அபரிமிதமான சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு இழுபட்டுச் செல்லாமல் தமது பாதையில் நிலைத்திருக்கின்றன. இவ்வாறு அல்லாஹ் கோள்களை ஈர்ப்பாற்றலால் கட்டுப்படுத்திவைத்துள்ளான். சூரியன் பூமியைவிடவும் 28 மடங்கு அதிகமான கவர்ச்சிவிசையைக் கோள்களின் மீது பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது. இதனால்தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமலும் தமது பாதைகளிலிருந்து விலகிவிடாமலும் இயங்குகின்றன. அத்தோடு அவை நேர் பாதையில் செல்லாது சுற்றுப் பாதையில் செல்வதற்கும் சூரியனின் இத்தகைய ஈர்ப்பு விசையே காரணம். அல்லாஹ் கூறுகின்றான். வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமா அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான். அவை இரண்டும் விலகுமாயின் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது.” (35:42)

எமது சூரியனும் ஒரு நட்சத்திரம் என்ற வகையில் இந்த நட்சத்திரத்தைச் சூழ எட்டு கோள்களும் உப கோள்களும் இருக்கின்றன. எமது பால்வீதி எனும் கெலக்ஸியில் மாத்திரம் 250 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எமது பால்வீதி கெலக்ஸி போன்று அண்டத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸிகள் இருக்கின்றன. சற்று சித்தித்துப் பாருங்கள். இத்துனை கெலக்ஸிகளிலும் எத்துனை எத்துனை நட்சத்திரங்கள் இருக்;கும். அத்துனை நட்சத்திரங்களுக்கும் எத்துனை எத்துனை கோள்கள் இருக்கும் உப கோள்கள் இருக்கும். இதனால்தான் இப்பிரபஞ்சத்திலுள்ள எண்ணிலடங்காத கோள்களில் சிறிய புள்ளிபோன்ற கோளான எமதுபூமியில் மட்டும்தான் உயிர்கள் வாழ்கின்றன என்று சிந்திக்க முடியாதுள்ளது. எமது பிரபஞ்சத்தில் காணப்படும் இலட்சக் கணக்கானமில்லியன் கணக்கான ஞாயிற்றுத் தொகுதிகளில் நிச்சயமாக உயிர்வாழ்க்கைக்கு உகந்த கோள்கள் இருக்கலாம் என்ற இத்தகைய கருதுகோளினாலே விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்காது தொடர்ந்தும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எமது பால்வீதியில் மனிதன் வாழ ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக பிரான்சின் வானியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். அத்தகைய கோள்களிலும் எம்மைப்போன்ற அல்லது எம்மைவிட அறிவார்ந்த உயிரினங்கள் வாழலாம் என்பதுவே விஞ்ஞானிகளின் ஊகம். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.

ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள எட்டுக் கோள்களும் அவற்றின் பருமனும் சுழற்சி மற்றும் சுற்றும் வேகங்களும் ஈர்ப்பு விசையாற்றல்களும் உண்மையில் பல்வேறு துல்லியமான திட்டமிடல்களுடனே அமைக்கப்பட்டுள்ளன. ஒருவகையில் அவை புவியின் இருப்புக்குப் பக்கபலாமாய்க் காணப்படுகின்றன. எட்டுக் கோள்களைப் பற்றியும் சற்று அறிந்துகொள்வது இறை வல்லமையை உணர்த்தும் என்று நினைக்கின்றேன்.

1. புதன் : புதன் கிரகம் சூரியனுக்கு மிகவும் அண்மையில் முதலாவது நீள்வட்டப்பாதையில் அமைந்துள்ளது. அனைத்துக் கிரகங்களிலும் புதனே மிகச் சிரிய கிரகம். சந்திரனைவிடவும் சிரியது. இதன் விட்டம் 4800 Km களாகும். புதன் செக்கனுக்கு 30 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றுகின்றது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள் செல்கின்றன. இதனால் புதனில் நீண்ட நாட்களுக்கு இரவும் நீண்ட நாட்கள் பகலாகவும் இருக்கும்.

2. வெள்ளி : சூரியனிலிருந்து அடுத்த பாதையில் இருப்பது வெள்ளிக் கிரகமாகும். இது பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருக்கின்றது. இதன் விட்டம் 12,320 Km களாகும். இக்கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றிவர 224 நாட்கள் செல்கின்றன. இக்கிரகத்தைச் சுற்றி வெண்மேகப் படலங்கள் அமைந்திருக்கின்றன.

3. பூமி : மூன்றாவது பாதையில்தான் நாம் வாழும் பூமி காணப்படுகின்றது. ஞாயிற்றுத் தொகுதியிலேயே உயிர்வாழ்க்கைக்கு உகந்த இடமாக பூமிப் பந்து காணப்படுகின்றது. பூமியின் விட்டம் 12,683 Km களாகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஒரு நாளும் சூரியனைச் சுற்றிவர 365 நாட்களும் செல்கின்றன.

4. செவ்வாய் : அடுத்த பாதையில் இருப்பது செவ்வாய்க் கிரகம். சூரியனை இக்கிரகம் ஒரு முறை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் செல்கின்றன. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஒரு நாளும் 37 நிமிடங்களும் எடுக்கின்றன. பூமி 23 ½ பாகைக் கோணத்தில் சரிந்திருப்பதுபோன்று செவ்வாய் 24 பாகைக் கோணத்தில் சரிந்து காணப்படுகின்றது. தொலை நோக்கியால் பார்க்கும்போது இக்கிரகம் செம்மஞ்சல் நிறத்தில் காட்சிதரும். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்றும் அதில் வாழ முடியுமா என்றும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விட்டம் 4216 மைல்களாகும்.

5. வியாழன் : ஐந்தாவது நீள்வட்டப் பாதையில் இருப்பது வியாழன் கோள். இது ஏனைய கிரகங்களைவிடவும் பருமனில் பெரிது என்பதால் ராட்சதக் கிரகம் (Giant Planetஎன்றும் அழைக்கப்படுகின்றது. இது தன்னைத்தானே ஒரு முறை சுற்ற ஒன்பது மணி நேரங்களும் 55 நிமிடங்களும் செல்கின்றது. அவ்வளவு வேகமாகச் சுழல்கின்றது. சூரியனை ஒரு முறை சுற்றிமுடிக்க 11 வருடங்களும் 315 நாட்களும் செல்கின்றன. வியாழனுக்கு 16 உபகோள்கள் காணப்படுகின்றன. இதன் விட்டம் 88700 மைல்களாகும்.

6. சனி : சனிக் கோள் சூரியனிலிருந்து ஆறாவது நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது. சூரியக் குடும்பத்தில் இதுவே இரண்டாவது பெரிய கோள். இதனைச் சூழ பனி மற்றும் பாறைத் துகள்களாலான வலையமொன்று காணப்படுகின்றது. இதற்கு 61 உப கிரகங்கள் காணப்படுகின்றன. இதன் விட்டம் 75000 மைல்களாகும்.

7. யுரேனஸ் : 1781 ஆம் ஆண்டுவரை ஞாயிற்றுத் தொகுதியில் ஆறு கோள்களே உள்ளதாக நம்பப்பட்டது. அதன்பின் வில்லியம் ஹர்ஷா என்பவரால் யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் 48,000 Km களாகும். தன்னைத்தானே சுற்ற 10 மணி 48 நிமிடங்கள் எடுக்கின்றன. ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 84 வருடங்கள் செல்கின்றன. இதற்கு 5 உப கிரகங்கள் உள்ளன.

8. நெப்டியூன் : நெப்டியூன் எட்டாவது பாதையில் சுற்றுகிறது. இது 1846ம் ஆண்டு பெர்லின் விண்வெளி ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. அதேபோன்று தன்னைத் தானே சுற்ற 15 மணி 40 நிமிடங்கள் செல்கின்றன. இக்கிரகம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் எப்போதும் குளிராகவே காணப்படுகின்றது. இரண்டு உப கிரகங்களும் காணப்படுகின்றன. இதன் விட்டம் 27700 மைல்களாகும்.

அடுத்து புளுட்டோ. ஞாயிற்றுத் தொகுதியில் ஒரு கோளாக ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் 2006 ஆம் ஆண்டு அது நீக்கப்பட்டது. புளுட்டோ 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சூரியனிலிருந்து 576 கோடி Km களுக்கு அப்பால் அமைந்துள்ளது. இதன் விட்டம் 3600 மைல்களாகும்.

வல்ல அல்லாஹ் இந்த ஞாயிற்றுத் தொகுதியைப் படைத்த நாள் முதல் அது எந்த முரண்பாடுமின்றி எவ்வளவு அழகாக அமைதியாக இயங்குகின்றது என்று பாருங்கள். அல்லாஹ் இட்ட கட்டளைப்படி அவை தத்தமது அச்சுகளில் தமக்கே உரிய அளாதியான வேகங்களில் சுற்றிச் சுழன்று வருகின்றன. கட்டுப்பாடுஅமைதி எனும் இரண்டும் மிக முக்கியமானவை. இதனை பிரபஞ்சம் முழுக்க கண்டுகொள்ளலாம். இஸ்லாம் என்ற பதத்தின் பொருளும்கூட கட்டுப்பாடுஅமைதி என்பதுதான். எனவே முழுப்பிரபஞ்சமும் இஸ்லாமாகிமுஸ்லிமாகி உள்ளது என்றால் பிழையாகாது. இதனையே அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
وَلَهُ أَسْلَمَ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
வானம்பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் இஸ்லாமாகி (கட்டுப்பட்டு) விட்டன.” (3:83)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான தகவல்களின் தொகுப்பு...

விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

HajasreeN said...

thnx for the new, i want to kw what islam says about aliens ?

Unknown said...

بارك الله فيك وفي علمك

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...