"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 November 2012

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இடம்பெறுவது சுகாதாரத் துறையில்தான்

இலங்கையில் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் துறையாக சுகாதாரத்துறை அமைந்துள்ளது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.சுகாதார அமைச்சு மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கடமையாற்றி வரும் பெண்கள் அதிகளவில் பாலியல் ரீதியாக வேட்டையாடப்படுகின்றனர்.நிறுவனங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகளினால் பெண்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.

 ஓர் வைத்தியசாலையில் கனிஷ்ட நிலை பெண் சிற்றூழியர் ஒருவர் தமது பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்த காரணத்தினால், அவரை பிரேத அறையில் கடமைக்கு அமர்த்தியுள்ளனர்.குறித்த பெண் பிரேத அறையில் மயங்கி விழுந்துள்ளார்.விழித்தெழுந்து பார்த்த போது உடம்பில் ஆடையின்றி, பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தை குறித்த பெண்ணே என்னிடம் முறைப்பாடு செய்தார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல பெண்கள் முறைப்பாடு செய்கின்றனர். எனினும், எழுத்து மூலம் எவரும் முறைப்பாடுகளை செய்வதில்லை.பெண் வைத்தியர்கள் கூட இடமாற்றம் போன்ற தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, உயர் அதிகாரிகளின் பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

உயர் பதவி வகிக்கும் பெண்கள் முதல் கடை நிலை பணிகளில் ஈடுபடும் பெண்கள் வரையில் பாலியல் ரீதியான வன்கொடுமைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறிப்பு : ஈமெயிலில் கிடைத்த செய்தி

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

5 comments:

நலன்புரி said...

அநாச்சாரங்களும் ஒரு காரணம் தான்

மூர்த்தி (லண்டன்) said...

சிறந்த செய்தி வாழ்த்துக்கள்

அப்துல் பாஸித் said...

எல்லா அரச துறைகளிலும் இது இன்று சகஜமாகி உள்ளது

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த கொடுமைகள் நீங்க / நீக்க வேண்டும்...

நல்லது நடந்தால் சரி...

Anonymous said...

fathima...
iruthi kaalam nerungittu

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...