"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 August 2013

பிரதான படைப்புகள் : மலக்கு, ஜின், மனிதன்.

ஓர் விஞ்ஞான ஒப்பீட்டாய்வு
இப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்திஎன்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது.
சக்திக்காப்பு விதியின் படி சடப்பொருட்கள் யாவும் அழியக் கூடியன. ஆனால் சக்தி அழிவதில்லை. அது நிலைத்திருக்கக் கூடியது. எல்பர்ட் எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி (E=mc2) “சடப் பொருட்கள் அனைத்தும் இறுதியில் சக்தியாகவே மாற்றமடைகின்றன. மறுதலையாக சக்தியே சடப்பொருளாகப் பரிணமிக்கிறது. சடம் அனைத்தும் சக்தியின் வடிவங்களேயன்றி வேறில்லை.
அல்குர்ஆனின் கூற்றுப்படி இறைவனே என்றும் நிலைத்திருப்பவன். (Real Absolute being) எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி சக்தியே என்றும் நிலையானது என்கிறது. உண்மையில் என்றும் நிலைத்திருப்பவன் இறைவனே. அவனே அனைத்து சக்திகளினதும் மூலம் என்பதை நாம் அறிகிறோம். குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்(3:2) (2:255)
சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டிலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள், இரண்டு சுட்டெரிக்கும் நெருப்பின் கொழுந்தினால் படைக்கப்பட்ட ஜின்கள் (FIRE - Smokeless Flame). இதனை விஞ்ஞான ஒளியின் நோக்கினால் ஜின்கள் ப்ளாஸ்மா (Plasma) வடிவில் இருப்பதாகவே எண்ணத்தோனறுகிறது. இவை இரண்டும் சக்திக்குள் அடங்குபவை. மூன்றாவது களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கம். இது சடத்தினுள் அடங்குகின்றது.
களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்பின் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான் (55:14,15)
மனிதன் களிமண் எனும் சடத்தினால் ஆக்கப்பட்டாலும் அவனது உடலில் ஊதப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ரூஹ். அல்லாஹ் சக்தியின் மூலம், அவன் அழியாதவன் என்பதால் அவனது ரூஹிலிருந்து ஊதப்பட்ட மனித ரூஹும் அழிவதில்லை. ஏனெனில் மனித ரூஹும் ஒரு சக்தியாக (Energy) இருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன். ஜின்களும் மலக்குகளும் கூட சக்திக் கூறுகளினால் ஆக்கப்பட்டவர்கள். எனவே ரூஹ், ஜின், மலக்கு இவைகள் இவ்வுலகம் அழிந்தாலும், அழியாது நிலைத்திருக்கும் மறுமை வாழ்வை அவற்றால் அனுபவிக்க முடிகின்றது. மலக்குகளுக்கு சுவனம் நரகம் இல்லாவிட்டாலும் அவையும் நிலைத்திருக்கக்கூடியனவே!
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்புச் சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலை (Plasma-Radiant energy) அவை கொண்டுள்ளன. அதேபோன்று ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகள் ஒளிக் கீற்றுக்களைப் பாய்ச்சுபவர்களாக இல்லை. ஆனால் ஒளியின் பண்புகளான ஒளியின் வேகத்தில் பயணித்தல் (300,000Km/h), எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்களைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர்.
இம்மூன்று படைப்புகளுக்கும் கால, சூழ, வெளி போன்றவற்றுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். மலக்குகள் அதிகூடிய வேகத்தில் விண்ணில் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். காரணம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.
அதேபோன்று  மனிதர்களைப்போல் அல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் ஜின்கள் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும்.  இடம், காலம், வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல! ஜின்களுக்கு அல்லாஹ் இவ்வாற்றலை மட்டுப்படுத்தி கொடுத்துள்ளான். ஏழு வானங்களைப் படைத்து அதில் தாழ்வான வானத்தில் ஒரு தடுப்பையும் அமைத்துள்ளான். அல்குர்ஆன் கூறுகிறது.
 “நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம்.  கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.” (37:6-10) (15:16-18) (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன.
நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம். அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9)
மனிதனை  அல்லாஹ்  பூமியில்  படைத்து  அவனுக்கான வாழ்வாதாரங்களையும் வழங்கியுள்ளான். மனிதனால் சுயமாக பிரபஞ்ச வெளியைக் கடக்க முடியாவிட்டாலும் அதற்கான சுல்தான் சக்திஇல்லாமல் செல்ல முடியாது என்று அல்குர்ஆன் (55:33) கூறுகின்றது.
மொத்தமாக நோக்கும்போது இப்பிரபஞ்ச வெளி எங்கும் மலக்குகளும், ஜின்களும் உலாவிக்கொண்டிருக்கின்றனர். சிலவேளை நாம் அறியாத இன்னும் பல படைப்புகளை அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்திருக்கவும் கூடும். இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் இறைவனின் வல்லமைகளையும் நோக்கும்போது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அல்லாஹ்வின் படைப்புகளான ஜின்களையும், மலக்குகளையும் நமது   கண்களால்   காண முடியாது.  நமது கண்களுக்கு  வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியும். மலக்குகள் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருநப்பதால்தான் அவற்றை எம்மால் காண முடியாதுள்ளது.
ஜன்ன  என்ற அரபிச் சொல்லிருந்து ஜின் என்ற பதம் வந்துள்ளது. இதற்கு       மறைக்கப்பட்ட பொருள் என்று  அர்த்தம். ஜின்கள் நெருப்புச் சுவாலை வெப்பத்தால் அதாவது மின்காந்த வெப்ப அலை வடிவில் (Electromagnetic-Plasma Radiant Energy) படைக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவர்களால் எம்மைப் பார்க்க முடியும்.
மனிதனால் இடத்திற்கு ஏற்றவாறு தனது குணத்தை (பச்சோந்தி) மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் மலக்குகளாலும் ஜின்களாலும் தமது உருவத்தையே மாற்றி பிற உருவங்களில் வர முடியும். நபியவர்கள் கூறினார்கள் மலக்குகள் நாய், பன்றி தவிர்ந்த மற்ற உயிரினங்களின் உருவத்தில் வருகின்றன”. அதேபோன்று ஜின்களுக்கும் தமது உருவத்தை மாற்றி பாம்பு, நாய், பூனை போன்ற உருவங்களில் வருகின்றன.   சைத்தான் அதிகமாக கருப்பு நிற நாய்களின் வடிவத்தில் வருவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அதேபோன்று வீட்டினுள் ஒரு ஜின் பாம்பாக உருவெடுத்து வந்தபோது அதனை அடிக்க முற்பட்ட ஒரு ஸஹாபியை அது தீண்டி அவர் மரணித்த சம்பவம் நபியவர்களுக்கு எத்திவைக்கப்பட்டமையும்வீடுகளுக்கு பாம்பு வந்தால் மூன்று முறை அவற்றை வெளியேறுமாறு சொல்லுமாறும் வெளியேறினால் அது ஜின் என்றும் இல்லாவிட்டால் அது பாம்புதான் அதனை அடிக்குமாறும் நபியவர்கள் கூறிய விடயங்களை நாம் அறிவோம்.
கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது என்பதால் அந்த நிறத்தை அதிகம் தேர்வுசெய்வதாகவும் இருக்கலாம்.
சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு  உள்ளது. மழைக் காலத்தில் நாம் கருப்புக் குடை பிடிக்கின்றோம். ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை கொண்டதாகும். கிரிக்கட் வீரர்கள் வெள்ளை உடை அணிவதும் மூக்கு, நெற்றி, உதடு போன்ற பகுதிகளுக்கு வெள்ளை நிறம் பூசுவதும் சூரியனின் வெப்பத்தைத் தவிர்க்கவாகும். எனவே ஜின்கள் கருப்பு நிறத்தை தம்மை மறைத்துக்கொள்வதற்காகத் தெரிவுசெய்வதாக இருக்கலாம்.
இறைவனின் வல்லமைகளை உணர்த்தும் இப்படைப்புகளோடு  விஞ்ஞானிகள் ஏலியன்ஸ் என்ற பெயரில் சுமார் 50 வருடகாலமாக ஆராய்ந்து வரும் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அடுத்த தொடரில் ஆராய்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் !

மிக மிக அருமையான பதிப்பு !

தொடர்ந்து அல்லாவின் படைப்பை பற்றியும் ,
அவனது மாபெரும் வள்ளமை பற்றியும் ,
எழுதி வருவதற்க்கு எனது நெஞ்சார்த வாழ்த்துகள் !

தொடர்ந்து இன்னும் பல ஆக்கங்களை படிக்க
ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் !

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...