ஆலிப் அலி (இஸ்லாஹி)
இந்த மர்மமனிதர்களின் நடமாட்டத்திற்கு இராணுவம் மெளனமாக இருப்பது அல்லது துணைபோவதன் காரணமென்ன ? உலகத்திலே மிகப்பெரிய தீவிரவாதத்தை அழித்த ஆற்றல் மிக்க இராணுவமென உலக நாடுகளுக்கு புகழ்ந்து தள்ளும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இதற்கு என்ன பதில் கூறுகின்றது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதகப் பல செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான பல்வேறு பரிகாரங்களையும் செய்தும் தேடிக்கொண்டிருககும் நேரம்தான் திருக்கோணமலை பாலையூற்று கிராமத்தில் 4 வயது சிறுமி சாத்திரம் கூறுவதும், அவை உண்மையாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவும் செய்தி மஹிந்தவுக்குக் கிடைத்தது. இதனை அறிந்த மஹிந்த கம்பனி அச் சிறுமியிடம் சாத்திரம் கேட்டிருந்தார்கள். அந்த சிறுமியும் ஜனாதிபதி மஹிந்தவின் ஆயுட்காலம் மிகவும் சொற்பமெனவும், அது மிக விரைவில் முடிந்து விடுமெனவும் அவர் இரத்தம் கக்கியேதான் இறப்பாரெனவும் எதிர்வு கூறியிருந்தார்.
அதற்கான பரிகாரமாக மூவாயிரத்தியொரு பெண்களின் இரத்தம் தேவைப்படுமெனவும் அதனூடாக மேற்கொள்ளப்படும் பலி பூஜையினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டிருக்கும் இடர் நிவர்த்தி செய்யப்படும் என ஒரு பெளத்த துறவி ஆரூடம் கூறியதற்கமைய மர்மமனிதனால் இரத்தக்கொள்ளை நடைபெறுகின்றது.
பதுளையில் தொடங்கிய இந்த இரத்தக்கொள்ளை மகியங்கனை, வாழைச்சேனை, பொத்துவில், ஊறணி, உல்லை, திருக்கோணமலை, கிண்ணியா, கொழும்பு, கம்பஹ வரை வந்து நிற்கிறது. இம்மாதம் ஒன்பதாம் திகதி வாழைச்சேனையில் இரத்தமெடுக்க முயன்ற மர்மமனிதன் பொதுமக்களால் துரத்தப்பட்டு இராணுவ முகாமுக்குள் ஓடிச்சென்று பதுங்கிக் கொண்டான். இதேபோல் இம்மாதம் பன்னிரெண்டாம் திகதி உல்லையில் நடந்த சம்பவத்தில் மர்மமனிதன் தென்னை மரத்தில் இருந்ததைக்கண்ட பொதுமக்கள் தாக்க முயன்ற போது அவன் இராணுவபோலீசால் காப்பாற்றப்பட்டதோடு அவன் யானைகளின் கணக்கெடுப்புக்காக தென்னையில் இருந்ததாகவும் காரணம் கூறப்பட்டது. அன்றைய தினம் கல்முனைக்குடியில் நடமாடிய மர்மமனிதர்களை பிடித்த பொதுமக்கள், அவர்களை பள்ளிவாசலில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களை மீட்பதற்காக போலீசார் வந்தும் அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்து விட்டார்கள்.
உல்லையில் நடந்த சம்பவத்தில் இந்த மர்மமனிதர்களிடமிருந்து தங்கள் பெண்களைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை இராணுவம் பலவந்தமாக தடுத்து நிறுத்தியதோடு மர்மமனிதர்களை இராணுவமே தங்கள் வாகனத்தில் ஆங்காங்கே கொண்டுவிடுவதையும் பொதுமக்கள் அவதானித்துள்ளனர். முற்றுமுழுதாக தமிழ்ப்பேசும் கிராமமாக இருக்ககூடிய உல்லை பிரதேசத்தில் யானைக் கணக்கெடுப்பிற்காக ஒரு சிங்களவர் ஒருவர் அந்த நடுநிசியில் தென்னைமரத்தில் ஏறியிருக்க வேண்டியதன் நோக்கமென்ன?
இந்த மர்மமனிதர்களின் நடமாட்டத்திற்கு இராணுவம் மெளனமாக இருப்பது அல்லது துணைபோவதன் காரணமென்ன ? உலகத்திலே மிகப்பெரிய தீவிரவாதத்தை அழித்த ஆற்றல் மிக்க இராணுவமென உலக நாடுகளுக்கு புகழ்ந்து தள்ளும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இதற்கு என்ன பதில் கூறுகின்றது.
உல்லை சம்பவத்தில் யானைக் கணக்கெடுப்பிற்கு அந்த மர்மமனிதன் அரசால் நியமிக்கப்பட்டவராயின் அதற்கான அத்தாட்சிகளை அவர் வைத்திருந்திருக்க வேண்டுமல்லவா? அல்லது அவரின் பணிசம்பந்தமாக முதலில் அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்கு முற்கூட்டியே அறிவிக்கவேண்டுமென்பது சட்டம்தானே? இவை எதுவுமே நடைபெறவில்லை.
இவ்வாறு இந்த கிறீஸ் மர்ம மனிதன் என்ற பெயரில் இராணுவம் முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகமாக வாழும் கிராமங்களை இலக்குவைத்துக்கொண்டு செயற்படுகின்றனர். பெண்களைத் தாக்கி அவர்களது இரத்தத்தை உறிஞ்சுகின்றனர். இவை யாவும் இராணுவம், பொலிஸ், நேவி என முப்படைகளின் உதவியுடனேயே அரங்கேறிவருவதால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ளனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
3 comments:
நீங்கள் உங்களுடையவும் பொது மக்களுடையவும் கூற்றை அப்பட்டமாக தோலுறித்து காட்டுகின்றீர் அச்சம் இல்லையா?
சகோதரர் சப்ராஸ்...
உண்மையைச் சொன்னால் யாருக்கும் கசக்கும்தான். அதற்காக சொல்லாமலே இருந்தால் யார்தான் சொல்வது.
அடுத்து ஒரு எழுத்தாளன் என்றவகையில் அஞ்சிக்கொண்டிருப்பது கூடாத காரியம். அஞ்சினால் உண்மையைக் கூற முடியாதல்லவா?
சரிதானே???
Aalif bro...
Sri lankan Govt is a bad place for good people,so be careful with your writing,They will do any damn think to stay in power...you have long way to go!
I will paste this on my face book page
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...