"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 December 2012

பூமியின் அழிவு நாள், மர்மம் புரிந்தது

மாயன் நாட்காட்டியின் காலம் முடிவடையப் போகின்றது, சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப்போகின்றன. இதனால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு சூரிய வெளிச்சமின்றி பூமி  இருளில் மூழ்கியிருக்கும்.  நிபிருஎன்ற கிரகம் பூமியுடன் மோத உள்ளது. இதன் மோதலால் பூமி சிதைவடையும்என்றெல்லாம் பல்வேறு விடயங்களைக் கூறி உலக அழிவு நிகழப்போகின்றது என தற்போது பரவலாகப் பேசப்படுவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு பேசுபொருளாக மாறியிருக்கும் உலக அழிவு நடக்கப்போவது இன்னும் பத்து, இருவது வருடங்களுக்குப் பிறகல்ல. மாறாக 2012 டிசம்பர் (இம்மாதம்) 21 ஆம் திகதியில்தான் இச்சம்பவங்கள் நடக்கப்போகின்றன என்று பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இணைய தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் மற்றும் ஈமெயில்களுடாகவும் இம்மாதத்தில் நிகழவுள்ளதாகக் கூறப்படும் உலக அழிவு குறித்து பல்வேறு செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன.

உலகம் அழியப்போகின்றது என்று கூறப்படும் இச்செய்தி இதுதான் முதற்தடவையல்ல. இதற்கு முன்பும் பல்வேறு கால கட்டங்களில் உலக அழிவு குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் 19901994199820002004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளிலும் உலக அழிவு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒன்றும் நிகழவில்லை. இவ்வாறிருக்க தற்போது 2012 இல் உலகம் அழியவுள்ளதாகக் கூறி பிரபலப்படுத்தியும் வருகின்றனர். முன்பொருபோதும் இல்லாதவாறு இம்முறை உலக அழிவு ஏற்படும் என்ற நம்பிக்கை அநேகரிடம் குடிகொண்டுள்ளது. இதற்கு முன்பு பூமி மீது இரண்டு சந்திரன்கள் தோன்றவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. அதுவும் நடைபெறவில்லை. 2000 ம் ஆண்டில் Y2K  என்ற கணினி வைரஸ் உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் செயலிழக்கச் செய்யும் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்படியும் ஒன்றும் நடந்துவிடவில்லை. அதுபோன்றுதான் இவ்வாண்டு உலகம் அழியும் என்று கூறப்படும் கதையும்.

எந்தவித ஆதாரங்களுமின்றி விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள், இப்படியொரு ஆய்வு முடிவு கிடைத்துள்ளது என்று கூறினால்போதும். இன்று அதனை நம்ப உலகில் நிறையப்பேர் இருக்கின்றனர். எந்தவொரு விடயத்தையும் சொன்ன மாத்திரத்தில் அதனை நம்பி, அதற்கு கை, கால், தலை எல்லாம் வைத்துப் பரப்புவதில் நம்மவர்கள் கெட்டிக்காரர்கள். ஒரு செய்தி எம்மை வந்தடையும்போது தீர விசாரித்து ஆராய்ந்து அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் விட்டுவிடவேண்டும். இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் இதுதான்.

முஃமின்களே! பாஸிக்கான ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதனைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள், (இல்லாவிடின்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்குசெய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுவீர்கள்.” (49:06)

எனவே உலக அழிவு குறித்து உலக மக்களை அச்சுருத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் பற்றி செய்திகளின் உண்மைத் தன்மையை நாம் அறிவு பூர்வமாக, ஆதார பூர்வமாக அலசிப்பார்க்கவேண்டும். உலகம் அழியும் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்கள் மாயன் நாட்காட்டியின் முடிவு, நிபிரு கிரகத்தின் மோதல், ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தல், பாரிய எரிமலைகள் வெடித்து அதன் புகை மூட்டம் சூரிய ஒளியை மறைக்கும் என்று ஏற்படவிருக்கும் மாற்றங்களை முன்கூட்டியே அறிவித்துள்ளனர். இதன் உண்மைத் தன்மை பற்றி இங்கு நோக்குவோம்.

1.மாயன் நாட்காட்டியின் முடிவு:

உலக அழிவு நிகழும் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உலக அழிவை நிருபிக்க முயற்சிக்கும் சிலர் அதற்காக தென் அமெரிக்காவில் கோதமாலாவில் வாழும் பலங்கால மாயன் இனத்தினரால் தயாரிக்கப்பட்ட நாட்காட்டியை ஆதாரமாகக் காட்டுகின்றனர். உலகில் முதலாவது உருவாக்கப்பட்ட நாட்காட்டி மாயன் இனத்தவர்களுடையதாகும். கி.மு. 313களில் ஆரம்பிக்கும் இந் நாட்காட்டி இவ்வருடம் (2012) இம்மாதம் (டிஸம்பர்) 21ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. மாயன் இனத்தவர்கள் கட்டிடக் கலை, விண்வெளி சாஸ்திரம், மருத்துவம், கணிதம் என அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சிபெற்றிருந்ததாக அறிய முடிகிறது. இவர்கள் தமது நாட்காட்டியில் பதிவுசெய்துள்ள சில நிகழ்வுகள் நடந்தேரியிருப்பதாகவும் எனவே அவர்களது நாட்காட்டி 2012.12.21 இல் முடிவடைவதால் அத்தோடு கிறீன்விச் நேரப்படி சரியாக 11.11 மணியளவில் உலகின் கதையும் முடிவடையும் என்பதுதான் இவ்வாண்டில் உலக அழிவு குறித்து பேசுவோரின் வாதம்.

மாயன் இனத்து ஆதிகால மக்கள் உண்மையில் பெரும் அறிஞர்களாக இருந்தாலும் உலக நாட்காட்டியை அவர்கள் தயாரித்திருந்தாலும் இவ்வருடத்துடன் உலகம் அழியப்போகிறது என்று ஒருபோதும் அவர்களது நாட்காட்டியில் குறிப்பிடப்படவில்லை. மாயன் இனத்தில் தற்போது எஞ்சியிருப்பது சுமார் 1500 பேர்கள்தாம். அப்படியென்றால் அவர்களது தற்போதய தலைவராவது இவ்வருடத்துடன் உலகம் அழியும் என்று கூறியிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு அவர்கள் கூறவும் இல்லை. அத்தோடு மாயன்களின் நாட்காட்டி இவ்வருடத்துடன் முடிவடைவதால் அவர்கள் மீண்டுமொரு நாட்காட்டியைத் தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இச்செய்தி வெளியிடப்படாமலிருப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

எனவே உலக அழிவை உண்மைப்படுத்த மாயன் இனத்தவரையோ அவர்களது நாட்காட்டியையோ ஆதாரமாகக் காட்டுவது பொருத்தமற்றதாகும்.

2.நிபிரு கிரகத்தின் மோதல்:

இம்மாதம் 21ம் திகதி உலகம் அழியும் என்ற கணிப்புக்குத் துணையாக NIBIRU என்ற கிரகம் பூமியுடன் மோதும் என்ற செய்தி வாதிக்கப்படுகின்றது. அது புளுட்டோ போன்று சிறியதொரு கோள் என்றும் பூமியைத் தாண்டிச் செல்லும்போது மோதல் ஏற்படும் என்றும் இதனால் பாரிய அளிவுகள் நிகழப்போவதாகவும் பயம்காட்டி வருகின்றனர். சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இக்கிரகம் தற்போது ஞாயிற்றுத்தொகுதியை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருப்பதாகவும் குறித்த தினத்தில் பூமியுடன் மோதுமெனவும் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வருடத்துடன் உலகம் அழியும் என்று கூறுபவர்களது கண்களுக்கு மட்டும்தான் சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இக்கிரகம் தென்பட்டுள்ளது. ஏனெனில் உலகின் பல்வேறு நாடுகளால் விண்ணில் ஏவப்பட்டுள்ள செய்மதிகளுக்கோ டென்னிஸ் பந்து அளவிலான விண் பொருட்களைக்கூட கண்டறிந்துகொள்ளும் பூமியில் நிருத்தப்பட்டுள்ள பாரிய ரேடார்களுக்கோ இப்படியானதொரு கிரகம் வேகமாகப் பூமிப்பந்தை நோக்கி வரும் செய்தி அகப்படவில்லை. இதுபோன்றதொரு கோள் இருப்பதாகக் கூட இதுவரை ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. நாஸா விண்வெளி ஆய்வு மையம்தான் இதனை அறிவித்திருப்பதாகவும் தகவல்களை வெளியிட்டிருந்தனர். ஆனால் நாஸாவோ இப்படியானதொரு விண்கள் மோதலால் அழிவு ஏற்படாது என்ற உத்தியோகபூர்வமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. எனவே இதுவும் பிழையானதொரு தகவலே.

3.கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்தித்தல்:

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் யாவும் ஒரே நேர்கோட்டில் வரப்போவதாகவும் இதனால் சூரியனிலிருந்து வரும் வெளிச்சம் தடைப்பட்டு 22, 23, 24 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாகப் பூமி இருளில் மூழ்சியிருக்கும் என்றும் உலக அழிவிற்கு இதுவும் ஒரு ஆதாரமெனவும் உலக அழிவை வலியுருத்துவோர் தெரிவிக்கின்றனர்.

கோள்களின் சுழற்சி மற்றும் சுற்றுகை வேகங்களையும் அவற்றின் பருமனையும் கோள்களுக்கிடையிலான தூர அளவையும் வைத்துக் கணிப்பிடும்போது அனைத்துக் கோள்களும் ஒரே நோர்கோட்டில் சந்திப்பதென்பது அசாத்தியமானதென  நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையத்தின் வான் உயிரியல் பிரிவின் பொறுப்பாளர் டேவிட் மொரிசன் கூறுகின்றார். எனவே அனைத்துக் கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருவதென்பதும் ஒரு பொய்யான சங்கதி என்பதுதான் உண்மை. எனவே குறித்த மூன்று தினங்கள் புவி இருளில் மூழ்கும் என்பது நிகழாதவொன்று. ஆனாலும் மூன்று கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் சந்தர்ப்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வாரு வந்தாலும் அதனால் பூமிப் பந்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதை உணரவேண்டும்.

4.சூரியப் புயலின் தாக்கம்:

சூரியனில் உள்ள ஐதரசன் அணுக்கள் வெடித்துச் சிதரும்போது பல்லாயிரக்கணக்கான அணுகுண்டுகளை விட பாரியதொரு சக்தி வெளிப்படுகின்றது. இதன்போது வெளிப்படும் அனல் காற்று புயலாக மாறி பூமியைத் தாக்கவுள்ளதெனவும் அதன் வெப்ப சக்தியால் மின்சக்திக் கேந்திரங்கள்  (Power Grids)செயழிலந்து போகுமெனவும் மற்றும் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி அவை நிலப்பரப்பை மூழ்கடிக்கும் எனவும் கூறுகின்றனர். இதனைச் சித்தரிக்கும் விதமாகத்தான் 2012 என்றொரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டு வெளியடப்பட்டிருந்தது.

சூரியன் வினாடிக்கு 4 பில்லியன் மெட்ரிக் டொன் சக்தியை வெளிப்படுத்துகின்றது. இதனால் பயங்கரமான சூரியப் புயல்கள் வீசுவதென்பது உண்மைதான். ஆனாலும் அதனால் பூமிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம். ஏனெனில் பூமியைச் சூழ அமைந்திருக்கும் வான் எலன் பெல்ட் ((Van Allen radiation belt) எனும் முகடு, தற்போது வீசுவதைவிட பன்மடங்கு பலமாகப் சூரிய அனற் புயற் காற்று வீசினாலும் அதிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் விலிமையுடன் செயற்படுகின்றது.

அத்தோடு வருட இருதியை அடையும்போது (டிசம்பர் காலங்களில்) பூமி சூரியனிலிருந்தும் நீள்வட்டப்பாதையில் தூர நிற்பதால் அதிகமான நாடுகளில் கடுமையான மழையும் பனியுமாகத்தான் இருக்கும். கிறிஸ்மஸ் காலங்களை நாம் அறிவோம். எனவே சூரியப் புயல் வந்தாலும் அதனை வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் தனித்து ஆற்றலைக் குறைத்து விடும். எனவே சூரியப் புயலினால் பேரழிவு ஏற்படப்போவதென்பதும் ஏற்கமுடியாதவொன்று.

தொடர்ந்தும் சூரியன் தாக்குப் பிடிக்கப் போவதில்லை என்பதும் சூரியன் அழிந்தால் அத்தோடு பூமி இயங்குவதற்கான சாத்தியப்பாடுகள் அறவே இருக்க முடியாது என்பதும் விஞ்ஞானரீதியான உண்மைகள்தாம். எனினும் சூரியனின் அழிவுக்கு இன்னும் 4500 மில்லியன் வருடங்கள் செல்லும் என்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்தன கூறுகின்றார்.

5.எரிமலை வெடிப்பும் புகை மூட்டம் மறைத்தலும்:

ஒவ்வொரு 650,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துச் சிதரும் மஞ்சல் கல்(Yellow Stone) ரிமலை தற்போது மீண்டும் 2012 டிசம்பர் 21ம் திகதி அன்று வெடிக்கப்போவதாகவும் அது வெடிக்கும்போது எரியும் நெருப்புக் குழம்புகள் வான் வெளியில் வீசியடிக்கப்படும் சாம்பலினாலும் புகை மூட்டத்தினாலும் பூமி முழுதும் அது பறவி சுமார் 15000 ஆண்டுகளுக்கு சூழ்ந்திருக்கும் எனவும் கூறுகின்றனர்.  இதனால் சூரிய வெளிச்சமின்றி உயிரினங்கள் முழுமையாக அழிந்து போகுமெனவும் உலக அழிவை நிறுவ முயற்சிக்கும் சில பூகோலவியலாளர்கள் கூறுகின்றனர்.

பூமியின் ஆழத்தில் உள்ள எரிபொருள்களை பல்வேறு நாடுகளும் பல்வேறு பகுதிகளிலிருந்து உறிஞ்சி எடுத்துவருவதால் ஆரம்ப காலங்களை விட தற்போது எரிமலை வெடிப்புகள் நடப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. எரிமலை வெடிப்பு இடம்பெற்றாலும் அதன் சீற்றம் மிகக் குறைந்த அளவில்தான் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இப்படியிருக்க பாரிய அளவில் எரிமலை வெடிப்பு நிகழவுள்ளதென்பது நம்ப முடியாதவிடயம்.

அத்தோடு 650,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துச் சிதரும் பயங்கரமான எரிமலை எங்குள்ளதென்பதே கேள்விக்குரி. அப்படியான தகவலொன்றை அவர்கள் முன்வைக்கவும் இல்லை. அப்படி ஒரு எரிமலை வெடித்து புகை மூட்டத்தினால் பூமி சூழப்பட்டாலும் பூமியில் உள்ள வளிமண்டலம், காற்று, புவி ஈர்ப்பு விசை, பூமியின் ஈரப்பதன் என்பன காரணமாக குறைந்தது 15 நாட்களிலாவது அப்புகைப் படைகள் தனிந்து பூமி பழைய நிலைக்கு மீண்டுவிடும். எனவே இதுவும் ஒரு போலியான தகவலே.

உலக அழிவு பற்றிய புணைவுகளின் பின்னால் வியாபார நோக்கம்.

உலக அழிவு பற்றிய அதிகமான கட்டுக் கதைகளெல்லாம் பரவி இருப்பது இணையம் வாயிலாகத்தான். யாரும் எவ்வகையான கருத்துக்களையும் பதிவு செய்யலாம் என்ற சுதந்திரம் இருப்பதால் பலரும் பிழையான, பொய்யான, ஆதாரமற்ற விடயங்களைப் பறப்பி வருகின்றனர். இணையத்திலிருந்து அவ் ஆக்கங்களைப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் பிரதிபண்ணி பிரசுரித்து உலக அழிவு பற்றி இன்னும் விளம்பரப்படுத்தி வருகின்றன. இதன் பின்னால் ஒரு வியாபார நோக்கம் இருப்பதை அநேகர் கவனிக்கத் தவறிவிட்டனர்.

உலகம் அழியப் போகின்றது எனக் கூறி அமெரிக்காவில் சில கட்டிடக்கலைஞர்கள் பூமிக்கு அடியில் பாதுகாப்பான முறையில் வீடுகளைக் கட்டி பூகோல அழிவிலிருந்து தம்மைப் பாதுகத்துக்கொள்ளலாம் என்று விளம்பரங்கள் செய்து அவற்றைக் கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். உலக அழிவு குறித்து அச்சத்தில் மூழ்கியிருக்கும் மக்கள் அவற்றை விலைக்கு வாங்கியுள்ளனர்.

அதேபோன்று மாயன் இனம் வாழும் தென் அமெரிக்காவின் கோதமாலா அரசு கூட உலக அழிவு குறித்தும் மாயன் நாட்காட்டி குறித்தும் சர்வதேச ரீதியில் விளம்பரங்களைப் பிரபலப்படுத்தி உள்ளாசப் பிரயாணிகளின் வருகையை அதிகரித்துள்ளது. மாயன் மக்களைப் பார்வையிட வரும் உள்ளாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இலட்சம் இலட்சமாக இலாபமடைந்து வருகின்றது அவ் அரசு.

இன்னுமொரு சாரார் உலக அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்;காக இணையம் வாயிலாக மந்திரத் தொகுப்பொன்றையும் விற்பனைசெய்து வருகின்றனர். இணையம் வாயிலாக பணம் செலுத்துவதன் மூலம் இந்த மந்திரத் தொகுப்பை விலைக்கு வாங்க முடியும். விலைக்கு வாங்கி இதனை அதிகமான தடவைகள் ஜபம் செய்வதால் உலக அழிவு ஏற்பட்டாலும் அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றெல்லாம் பச்சை பச்சையாகப் பொய்களைக் கூறி இலாபமீட்டி வருகின்றனர்.

பலர் உலக அழிவுக்கு முன்னர் இப் பூமியை முழுமையாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் தமது வீடு வாசல்கள், சொத்து பத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு உலகைச் சுற்றி சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண் வருகின்றனர். எமது நாட்டிலும் கொழும்பு மாலிகாகந்த பகுதியிலிருந்து ஒருவர் தமது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு உலக சுற்றுப் பயணத்தில் சென்றிருக்கும் தகவல் சென்ற மாதம் 18ம் திகதி லங்காதீப பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு பல தடவைகள் உலக அழிவு நிகழப்போகின்றதென உலக மக்களை அச்சுருத்தி இலாபமீட்ட முனைந்தவர்கள் இம்முறைதான் பாரிய வெற்றியை அடைந்தனர். ஏனெனில் உலகக் கலாசாரமாக மாறியிருக்கும் திரைப்படத்தினூடாக உலக அழிவு பற்றிய முதலாவது செய்தியையும் அதன் காட்சிகளையும் 2012 என்ற திரைப்படத்தினூடாக வெளியிட்டதிலிருந்து போலிப் பிரச்சாரங்கள் ஆரம்பமாகின. இதனால் அநேகமானவர்கள் அச்சத்தில் உறைந்தனர். உலக அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தமது சொத்துக்களை எல்லாம் மோசடிக்காரர்களின் கையில் கொடுத்துவிட்டவர்களும் உள்ளனர்.

உலக அழிவு குறித்த இத்தகைய போலிப் பிரச்சாரங்களால் பலர் உளரீதியாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. நாசா விஞ்ஞானியான டேவிட் மொரிசன் கூறுகையில் பலர் தாங்கள் இச்செய்திளால் உண்ண முடியாமலும் உறங்க முடியாமலும் தவித்து வருவதுடன் மன இறுக்கத்துக்கும் ஆளாகியுள்ளதாகவும் மின்னஞ்சல்கள் வாயிலாக அறித்திருப்பதாக அவர் கூறுகின்றார். மேற்கு நாடுகளில் காணி விற்பனையிலும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் அளவுக்குக்கூட இந்த உலக அழிவு குறித்த போலி நம்பிக்கைகளும் பிரச்சாரங்களும் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

எவ்வாறிருப்பினும் 2012 டிசம்பர் மாதம் 21ம் திகதி உலகம் அழியப்போகின்றது என்ற தகவல்கள் போலியானவை, ஆதாரமற்ற ஒரு சில வியாபார நோக்கம்கொண்ட விசமிகளின் செயல்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். என்றாலும் எமது பூமி மட்டுமல்ல முழுப் பிரபஞ்சமும் ஒரு நாள் அழியப்போகின்றது என்பதுதான் உண்மை. எமது பிரபஞ்சம் படைக்கப்பட்டு 13.7 பில்லியன் ஆண்டுகளாகின்றன. இன்னும் எவ்வளவு காலத்தில் அழியும் என்றெல்லாம் கணக்கிட்டுக் கூற முடியாது. பிரபஞ்ச அழிவு எப்போதென்ற அறிவு அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

மறுமை நாள் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கின்றதுஎன்று நீர் அவர்களுக்குக் கூறும். அது மிக விரைவில் உம்மை  வந்தடையும்.”(33:63)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima.......
vathanthihalai nambufavarhal irukkumattum vathanthihalai parappufavarhalum irukkaththan saivar............
marumai naal varuvathatku vahu thooramillai entru iraithoothar avarhalum kooriullarha.... athatku avarhal pala adayalangalaium koorullarha......
avatril pal nadanthuvittalum innum pala nadakka irkkintrthu....
so marumaikkaha amalhalai athihamaha saivom...
vathanthihalukku kathu kodukkamal....

ur article is very good........
menmealum umathu eluththatral thodarattum....aameen...

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...